ShineTomChacko
ShineTomChacko

விஜய் பட நடிகருக்கு விரைவில் டும் டும்.. வைரலாகும் போட்டோஸ்!

Published on

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்திருந்த ஷைன் டாம் சாக்கோவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் ஷைன் டாம் சாக்கோ. கம்மட்டிபாடம், இஷ்க், குருப் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.

தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி அடிக்கடி சர்ச்சையிலும் சிக்குவது உண்டு. அந்த வகையில் நடிகர் விஜய்யை விமர்சித்து இவர் பேசிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மம்முட்டி, கமல்ஹாசனோடு ஒப்பிடும்போது விஜய் ஒன்றும் பெரிய நடிகர் அல்ல, அவர்கள் அளவுக்கு அவர் நடிப்பதில்லை இருந்தாலும் அவருக்கு அதிக சம்பளம் கொடுப்பது ஏன் என கேள்வி எழுப்பி ஷைன் டாம் சாக்கோ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ஜெயக்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் ஷைன் தன் நீண்டநாள் காதலியான மாடல் நடிகை தனுஜாவைத் திருமணம் செய்யவுள்ளார்.

தற்போது இவர்களது நிச்சயதார்த்தம் மிகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
அயலான் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. குஷியில் ரசிகர்கள்!
ShineTomChacko

நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர் ஏற்கனவே தபீதா மேத்யூஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் என்பது குறிப்படத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com