சிவகார்த்திகேயன், தனுஷ் அரசியல் என்ட்ரிக்கு காரணம் விஜய்யா? பிரபல யூ டியூபர் பகீர் தகவல்!

விஜய்யை பின்பற்றி அரசியலில் குதிக்க முயலும் முன்னணி நடிகர்களின் உண்மையான நோக்கம் என்ன?
Dhanush SK political move
vijay dhanush Skx
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

சமீப காலமாக தமிழ் சினிமாவை சேர்ந்த சிவகார்த்திகேயன் , தனுஷ் போன்ற நடிகர்கள் , ரசிகர் மன்றங்களை அரசியல் கட்சிக்காக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பிரபல யூடியூபர் கூறிய கருத்துக்கள் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. இதற்கு முன்னர் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் அரசியல் ஆர்வம் இருந்தாலும், அதை திமுக அல்லது அதிமுக போன்ற கட்சிகளுக்கு ஆதரவாக பேசி கருத்து தெரிவிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்று எம்ஜிஆர்க்கு பின்னால் , கட்சி தொடங்கி முதல்வர் பதவியை பிடித்த ஒரே நடிகராகவும் இருக்கிறார். விஜய்யின் அரசியல் வெற்றிக்குப் பின்னர் பல நடிகர்களுக்கும் அரசியல் ஆர்வம் வந்துவிட்டது. முன்னெல்லாம் கட்சி தொடங்குவதற்கு நடிகர்கள் பலமாக யோசித்து ஒரு கட்டத்தில் பின் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். விஜயகாந்த் மட்டுமே அரசியலில் எதிர்க்கட்சி தலைவராகவும் அளவிற்கு வளர்ந்திருந்தார். ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் பெற்ற வெற்றி பல நடிகர்களுக்கும் முதல்வராகும் ஆசையை தூண்டி விட்டுள்ளது.

விஜய் அரசியலுக்கு வரும் எண்ணங்களை 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெளிப்படுத்தி வந்துள்ளார். அதற்காக தனது ரசிகர் மன்றங்களை நீண்ட காலமாக அவர் தயார் படுத்தி வைத்திருந்தார். அதுமட்டுமில்லாமல், விஜய் தனது ரசிகர் மன்றம் மூலம் ஏராளமானவர்களுக்கு உதவிகளையும் செய்து வந்துள்ளார். தனது ரசிகர் மன்றத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவையும் கொடுத்துள்ளார். பொதுவெளியில் எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் பேசாத விஜய், ஈழத் தமிழர்களுக்கான மாநாடு நடத்தினார் , ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மறைமுகமாக அரசியல் பணிகளை செய்தாலும் சினிமாவில் தனது முன்னேற்றத்தை சிறிதும் பாதிக்காமல் நகர்ந்து கொண்டிருந்தார்.

இந்தச் சூழலில் தமிழ் சினிமா நடிகர்கள் கட்சி தொடங்கும் நடவடிக்கைகளை பற்றி, யூடியுபர் வலைப்பேச்சு பிஸ்மி கருத்து கூறியுள்ளார் ."விஜய் அரசியலுக்கு வந்து தோற்றுப் போயிருந்தால், சிவகார்த்திகேயன் , தனுஷ் போன்ற நடிகர்களுக்கு இது போன்ற எண்ணம் வந்திருக்காது. விஜய் முதல்வராகியதும் இவர்களுக்கும் அதுபோன்ற ஆசை வந்துவிட்டது. அதனாலயே தற்போது விஜய்யை பின்பற்றுகின்றனர்.

sivakarthikeyan
sivakarthikeyan source:twitter

நடிகர்கள் வெள்ளையாக சம்பளம் வாங்க மாட்டார்கள், எப்போதும் பாதி பணத்தை கருப்பாக தான் வாங்குவார்கள். அரசியலுக்கு வந்து விட்டால் கருப்பு பணத்தை எல்லாம் எளிதாக வெள்ளை பணமாக மாற்ற முடியும்..இதுவும் ஒரு முக்கிய காரணம். தனுஷ் அரசியலுக்கு வர நினைப்பது விஜயை பின்பற்றி இருக்கலாம். ஆனால், சிவகார்த்திகேயன் இதில் விஜயை பின்பற்றவில்லை. அவர் தனுசுக்கு எதிராகத்தான் இங்கு களமிறங்கியுள்ளார். ஏனென்றால் இவர்கள் இருவருக்கும் இடையே தான் பெரிய போட்டி நடைபெறுகிறது," என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்த பிஸ்மி , இந்த நடிகர்களுக்கெல்லாம் மக்கள் மீது உண்மையான அக்கறை எல்லாம் கிடையாது. அதிலும் தனுஷ் ரத்தம் தெறிக்கும் வன்முறையான திரைப்படங்களில் நடித்து வருபவர். தனுஷோ சிவகார்த்திகேயனோ இதுவரை மக்கள் பிரச்சினைகளுக்கு எப்போதாவது குரல் கொடுத்து இருக்கிறார்களா? இப்போது மக்கள் மீது அவர்களுக்கு என்ன திடீர் பாசம்?," என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com