ஒரே நாளில் ரிலீஸாக வேண்டிய அப்பாவின் கடைசி படம், மகனின் முதல் படம்... சுவாரஸ்ய சம்பவம்!

விஜய்யின் இறுதித் திரைப்படமான விஜய் ஜனநாயகன் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சயின் முதல் படம் ஒரே நாளில் வெளியಾಗவிருந்த சுவாரஸ்யமான பின்னணி கதை இதோ!
Jason Sanjay Sigma ஜனநாயகன்
Jason Sanjay Sigma ஜனநாயகன்AI Image
Updated on

ஒரே நாளில் நடக்க இருந்த சுவாரஸ்யமான சம்பவம். தமிழ் சினிமாவில் சில நிகழ்வுகள் திட்டமிட்டு நடப்பதில்லை. ஆனால் அவை நடந்து விட்டால் வரலாற்றில் சுவாரஸ்யமான பக்கங்களாக மாறி விடும்.

அப்படி ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான் நடிகர் விஜய் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சையைச் சுற்றி உருவானது. நடிகர் முதல்வர் விஜய் யின் திரையுலகப் பயணத்தின் இறுதிப் படமாக அமைந்திருக்கிறது 'ஜனநாயகன்'. பல ஆண்டுகளாக ரசிகர்களின் இதயத்தில் தளபதியாக வலம் வந்த விஜய் தனது திரைப்பயணத்திற்கு விடை கொடுக்கும் இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமான ஒன்றாக மாறியுள்ளது.

அதே நேரத்தில் விஜய் யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய், இயக்குநராக தனது முதல் அடியை எடுத்து வைக்கிறார்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஆரம்பத்தில் விஜய்யின் 'ஜனநாயகன்' படமும் ஜேசன் சஞ்சய் யின் 'சிக்மா' படமும் ஒரே நாளில் வெளியாகும் நிலை உருவானது. அதாவது அப்பாவின் கடைசி படம் திரையரங்கில் வெளியாகும் அதே நாளில் மகனின் முதல் படம் வெளியாகும் அபூர்வமான சினிமா நிகழ்வு.

ஒரு புறம் மூன்று சகாப்தங்களுக்கும் மேலாக திரையில் வெற்றி நடை போட்டு ஒரு நட்சத்திரத்தின் இறுதி படம். மறுபுறம் அதே நட்சத்திரத்தின் மகன் தனது சொந்த சினிமா பயணத்தைத் தொடங்கும் முதல் படம்! ஒரு தலைமுறை திரையுலகப் பயணத்தை நிறைவு செய்யும் நேரத்தில் அடுத்த தலைமுறை தனது முதல் அடியை எடுத்து வைப்பது போன்ற ஒரு அழகான சம்பவம் இது.

Jason Sanjay Sigma ஜனநாயகன்
Jason Sanjay Sigma ஜனநாயகன்AI Image

ஆனால் எதிர்பாராத காரணங்களால் வெளியீட்டு தேதிகளில் மாற்றம் ஏற்பட்டாலும் அப்பா மகன் சினிமா தொடர்பு ரசிகர்களிடையே பேசப்பட்ட ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாக மாறி விட்டது. விஜய் தனது திரைப்பயணத்தை முடிக்கும் நேரத்தில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக தனது பயணத்தை தொடங்குகிறார்.

இதையும் படியுங்கள்:
'ஜன நாயகன்' விமர்சனம்: தளபதியின் கடைசிப் படம் உண்மையிலேயே வென்றதா? முழு அலசல்!
Jason Sanjay Sigma ஜனநாயகன்

ஜனநாயகன் படத்தைப் பற்றி பேசப்படும் மற்றுமொரு முக்கிய விஷயம் படத்தில் நடித்த கதாநாயகி தொடர்பான தகவல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது தான். விஜய்யுடன் இணைந்து நடிக்கும் கதாநாயகியின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பும் படம் வெளியான பிறகு அதிகரித்துள்ளது. படத்தின் காட்சிகள், கதாபாத்திரங்கள் மற்றும் திருப்பங்கள் குறித்து திரையரங்குகளில் விஜய் ரசிகர்களின் ஆரவாரமும் ஜனநாயகன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது.

விஜய்யின் அறிமுகக் காட்சிகள் தொடங்கும் போது ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரிப்பதும் திரையரங்குகளில் கொண்டாட்டம் நடைபெறுவதும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோக்கள் மூலம் தெரிய வருகிறது.

பல ஆண்டுகளாக ரசிகர்களை மகிழ்வித்த ஒரு நடிகரின் இறுதிப் படமாக இது பார்க்கப் படுவதால் இந்த ஆரவாரம் வெறும் திரைப்பட கொண்டாட்டமாக மட்டும் அல்லாமல் ஒரு நீண்ட திரைப் பயணத்திற்கான ரசிகர்களின் அன்பாகவும் பார்க்கப்படுகிறது..

இதையும் படியுங்கள்:
ஜூலை 31ல் நடக்கப்போகும் கோலிவுட் மோதல்… டிசி Vs சிக்மா.. ஜெயிக்கப் போவது யாரு?
Jason Sanjay Sigma ஜனநாயகன்

அதே நேரத்தில் படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதாகவும் பலர் கூறி வருகின்றனர். ஆக்ஷன் காட்சிகளும் அதிரடியான திரைக்கதையும் அனிருத் தின் இசையும் படத்தின் முக்கிய அம்சங்களாக பேசப்படுகின்றன..

இதனால் 'ஜனநாயகன்' படம் வெளியாவதற்கு முன்பும் வெளியான பிறகும் தொடர்ந்து பேசப்படும் படமாக மாறியுள்ளது.

படத்தின் கதைக்களம் மட்டும் அல்லாமல் சமூகத்தில் நிலவும் சில முக்கியமான பிரச்னைகளையும் இப்படம் நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது. கதாபாத்திரங்களின் உணர்வுகள் அவர்களின் போராட்டங்கள் மற்றும் சமுதாயத்தின் மீதான பார்வை ஆகியவை படத்திற்கு கூடுதல் வலிமை சேர்க்கின்றன.

பொழுதுபோக்குடன் சிந்திக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இப்படம் பார்வையாளர்களிடம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரு தந்தையின் திரைப்பயணத்தில் கடைசிப் படமாக அமைந்த படம் ஒரு புறம். அதே நேரத்தில் ஒரு மகனின் திரைப் பயணத்தில் முதல் படமாக உருவாகி இருக்கும் ஒரு படம் மறுபுறம். தந்தையின் அனுபவமும் மகனின் புதிய பயணமும் ஒரே நேரத்தில். ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு தொடரும் திரைப்பயணத்தின் அழகான நினைவாக அமையும்.

logo
Kalki Online
kalkionline.com