சாய்பாபா கோவிலில் விஜய் எடுத்த புகைப்படம் நீக்கப்பட்டது ஏன்?

Vijay
Vijay
Published on

இரண்டு மாதங்களுக்கு முன்னர் சாய்பாபா கோவிலில் விஜய் எடுத்த புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டதையடுத்து தற்போது அது நீக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களிலிருந்து கசிந்துள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது The Goat படத்தில் நடித்து வருகிறார். சென்ற ஆண்டு லியோ படத்தின் வெற்றிக்குப் பிறகு இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இப்படத்தின் போஸ்டர் இந்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டது. படத்தில் இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் விஜய் சென்ற மாதம் படப்பிடிப்பிற்காக கேரளா சென்றார். இதனையடுத்து தற்போது விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் துபாய் சென்றுள்ளனர். விஜய் துபாயிலிருந்து படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்லவுள்ளார்.

இந்தநிலையில்தான் தற்போது விஜய் ஷீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று சாமியார்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தப் புகைப்படத்தை விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் பதிவிட்டிருக்கிறார். இதனையடுத்து அந்தப் புகைப்படம் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. அதேபோல் இது பல சர்ச்சைகளையும் கிளப்பியது.

அவர் நடிகர் மட்டுமே என்றிருந்தால் இவ்வளவு பெரிய சர்ச்சைகள் எழுந்திருக்குமா? என்பது தெரியாது, ஆனால் அவர் தற்போது ஒரு அரசியல்வாதி என்பதால்தான் இவ்வளவு சர்ச்சைகள். ஏனெனில், நெட்டிசன்கள் விஜய் இந்தத் தேர்தலில் பாஜக-விற்கு ஆதரவு அளிக்கிறாரா? முழு இந்துவாக மாறிவிட்டாரா? என்பன போன்ற பல சர்ச்சையான கேள்விகளையும், கருத்துகளையும் எழுப்பினர்.

இந்தநிலையில் விஜய் கட்சியின் கொள்கை ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதாலும், எந்த மதத்தைச் சார்ந்த புகைப்படங்களைப் பதிவிட்டாலும் அவை பிரச்சனைகளைத் தரும் என்பதாலும் புகைப்படத்தை நீக்கக் கோறி விஜய் கேட்டுக்கொண்டதாகச் செய்திகள் வந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
டெல்லியில் களமிறங்கும் சுஷ்மா ஸ்வராஜ் ஜூனியர்!
Vijay

இதனையடுத்து கட்சியின் பொதுச்செயலாளர் பதிவிட்ட உடனே அந்தப் புகைப்படத்தை நீக்கியுள்ளார். இருப்பினும், அதற்குள் புகைப்படங்கள் பரவத் தொடங்கியது. இது ரசிகர்களுக்கு ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபக்கம் நெட்டிசன்கள் தொடர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது இணையத்தில் ஒரு சர்ச்சையாக மாறிவுள்ளது. இருந்தாலும், அடுத்த செய்தி வந்தவுடன் இந்த செய்தியை மறந்துவிடுவார்கள் என்பதால், கட்சியின் கொள்கையின்மேல் எந்தக் கரையும் ஏற்படாது என்று சில தீவிர ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com