முதல்வர் விஜய்யின் 60 நாள் ஆட்சி எப்படி? - விஜய் சேதுபதியின் பரபரப்பு பதில்!

'மாஸ்டர்' படத்தில் முத்தமிட்டு புகழ்ந்த விஜய் சேதுபதி, இப்போது அரசியல் கேள்விக்கு அளித்த நறுக் பதில்!
vijay
vijay Sethupathi instagram
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

நடிகர் விஜய் சேதுபதி, முதல்வர் ஜோசப் விஜய்யை குறித்து மீண்டும் கருத்து கூறியது , சமூக வலைதளங்களில் உஷ்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.விஜயும் விஜய் சேதுபதியும் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

படத்தின் விளம்பரதார நிகழ்ச்சிகளிலும் , வெற்றி கொண்டாட்டங்களிலும் விஜய் சேதுபதி நடிகர் விஜய்யை பெருமளவில் புகழ்ந்து பேசி இருந்தார். மேலும் அவரை பாராட்டி பேசி அவருக்கு முத்தம் கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரலும் ஆகி இருந்தது. ஆனால், விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து விஜய் சேதுபதி அவருக்கு ஆதரவாக எந்த ஒரு கருத்தும் கூறியதும் இல்லை.

விஜய் வெற்றி பெற்ற பின்னர் சினிமா துறையை சேர்ந்த பல்வேறு நடிகர்களும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போதிலும், விஜய் சேதுபதி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. நடிகர் விஜய் சேதுபதி திமுக ஆதரவாளர் என்று அடிக்கடி பாஜக மற்றும் தமிழக வெற்றி கழக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்படுகிறார். பெரும்பாலும் விஜய் சேதுபதி தெரிவிக்கும் கருத்துக்கள் அரசியல் சார்பு கொண்டதாகவே விமர்சிக்கப்பட்டு அடிக்கடி சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார்.

தற்போது விஜய் சேதுபதி விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் விஜய் சேதுபதி கூறிய கருத்து ஒன்று அப்போது பெரிய சர்ச்சையை கிளப்பியிருந்தது. விஜய் சேதுபதி முதல்வர் விஜய்யை குறி வைத்து தான் அவ்வாறு கருத்துக்களை கூறியிருந்தார் என்று மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த கருத்துக்கு உடனடியாக விஜய் சேதுபதி மறுப்பு தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இறுதியில் தான் கூறிய கருத்து வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டது என்னைப் பற்றி விஜய்க்கு நன்றாக தெரியும் என்று கூறி முடிவுக்கு கொண்டு வந்தார். இடைப்பட்ட காலத்தில் விஜய் தொலைக்காட்சி சர்ச்சைக்குரிய கருத்துக்கு யாரையும் குறிப்பிடவில்லை என்று விளக்கமும் கூறியிருந்தது.

vijay
vijay Sethupathi vijayinstagram

இந்த சூழலில் ஜோசப் விஜயின் 60 நாள் ஆட்சி குறித்து விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு பதில் அளித்த விஜய் சேதுபதி, "எனக்கு விஜய் சாரை நடிகராக மட்டும் தான் தெரியும். அவரது அரசியலை நான் பின் தொடர்வது கிடையாது, என் வேலையும் அது கிடையாது. அவருடைய சினிமா பற்றி கேள்வி கேட்டால் நான் பதில் கூறுவேன். எனக்கு அவரைப் பற்றி அரசியல் ரீதியான விமர்சனங்களை வெளிப்படுத்தவும் தெரியும். ஆனால் , பொதுவாக எந்த ஒரு கட்சியும் விமர்சனங்களை ஆரோக்கியமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நீங்கள் கேள்வி கேட்டவுடன் நான் பதில் சொல்வேன் .ஆனால் , அது நான் நடித்துள்ள படத்தை பாதிக்கக்கூடும். அதனால், நான் எந்த ஒரு கருத்தையும் கூற விரும்பவில்லை, " என்று கூறியிருந்தார்.

விஜய் சேதுபதியிடம் அரசியல் ஆசை உங்களுக்கு இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அரசியல் என்பது ஆசை அல்ல , அது சேவை. நான் இதுவரை 2 லட்சம் பேருக்கு வேலை வாங்கி கொடுத்து இருக்கிறேன். துளி தொண்டு நிறுவனம் மூலம் பலருக்கும் உதவிகளை செய்துள்ளேன். எனக்கு அரசியலில் வர விருப்பமில்லை என்று கூறியுள்ளார்..