"எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள்" விஜய் டிவி புகழ் நெகிழ்ச்சி!

புகழ்,பென்சி
புகழ்,பென்சி
Published on

பிரபல காமெடி நடிகர் புகழ் - பென்சி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் காமெடியனாக வலம் வந்தவர் புகழ். புகழ் என்ற பெயர் வைத்ததாலோ என்னவோ தற்போது புகழின் உச்சத்திற்கு சென்று அனைவரின் பேவரைட் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். லேடி கெட்டப்பில் கலக்கும் புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

உங்களுக்காகதான் நிகழ்ச்சியே பார்க்கிறோம் என ரசிகர்கள் சொல்லும் அளவு அனைவரையும் கவர்ந்தார். இதன் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது. சமீபத்தில் வெளியான அயோத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். தொடர்ந்து 1947 படத்தில் அட்டகாசமாக நடித்து மிரட்டியிருப்பார். இப்படி அவருக்கு வரிசையாக பட வாய்ப்புகள் குவிய அடுத்ததாக Mr.Zoo Keeper என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு காதலி பென்சியுடன் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, புகழ், பென்சி தம்பதியினருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து புகழ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையை பெற்று எடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள்... மகள் அல்ல, எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள். தாயும் சேயும் நலம் என பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com