விஜயகாந்த்:கருப்பு தங்கத்தின் சில வைரங்கள்!

மறைந்த விஜயகாந்த் அவர்கள் 150 படங்கள் வரை நடித்திருந்தாலும் சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசுப்பொருளாக உள்ளது. குறிப்பாக விஜயகாந்த் தமிழ்நாடு திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பளித்து நடத்த படமாக ஊமை விழிகள் இன்றைக்கு க்ரைம் த்ரில்லர் படங்கள் வரிசையில் முக்கியமானதாக உள்ளது.
vijayakanth_pic
vijayakanth_pic

1. ஊமை விழிகள்:

Oomai Vizhigal
Oomai Vizhigal

1986 ஆம் ஆண்டு திரைப்பட கல்லூரி மாணவர்கள் பலர் இணைந்து உருவாக்கிய படம்தான் உமைவிழிகள். இப்படத்தில் விஜயகாந்த் சிறிது வயதான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருப்பார். அதற்கு முன் ஆர்ப்பாட்டமாக பல படங்களில் நடித்த விஜயகாந்த் இந்த படத்தில் அமைதியான நடிப்பை தந்திருப்பார். இதற்கு பின் விஜயகாந்த் பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஊமை விழிகள் முக்கிய படமாக அமைந்தது.

புதியவர்கள் இணைந்து உருவாக்கிய படம் என்பதால் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க தயங்கினார்கள். விஜயகாந்த் இருக்கிறார் என்ற காரணத்திற்காக மட்டுமே ஒரு மனதாக ஊமை விழிகள் படத்தை வெளியிட  ஒப்புக்கொண்டனர். அடையார் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஒரு அடையாளம் தந்தது ஊமை விழிகள் திரைப்படம். 

2. வானத்தைபோல:

Vaanatha pola
Vaanatha pola

'அந்த வானத்தை போல் மனம் படைச்ச மன்னவனே ' என்ற சின்ன கவுண்டர் படத்தில் வந்த பாடலில் இருந்து  வானத்தைபோல என்ற வார்த்தையை எடுத்து விஜயகாந்த்திற்காக டைட்டிலாக  வைத்தார் இயக்குநர் விக்ரமன். 2000மாவது ஆண்டில் வெளியான இப்படத்தில் வீட்டில் ஒரு பெரிய அண்ணனாக ஒரு விஜயகாந்த்தும், தம்பியாக இளம் தோற்றத்தில் ஒரு விஜயகாந்த்தும் நடித்திருப்பார். அண்ணன் விஜயக்காந்தின் நடிப்பு சிவாஜி, கமலுக்கு இணையாக இருந்ததாக பலர் படம் வெளிவந்த நேரத்தில் பாராட்டினார்கள்.

பொதுவாக அண்ணண் தங்கை பாசத்தை மையப்படுத்தி படங்கள் வெளிவந்துக்கொண்டிருந்த நேரத்தில், அண்ணண் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி வெளியான வானத்தைபோல் படம் மொஹிட் படமாக அமைந்தது. படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்கள் சூப்பர்ஹிட்டனது. குறிப்பாக ”எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” பாடல் இன்றும் குடும்ப உறுவுகளின் பாசத்தை வெளிப்படுத்தும் பாடலாக உள்ளது. பெரிய வெற்றி பெற்ற இப்படம்  பலரால் விரும்பி பார்க்கப்படுகிறது. 

3. கேப்டன் பிரபாகரன்:

Captain Prabhakaran
Captain Prabhakaran

விஜயகாந்த்தை ரசிகர்கள் கேப்டன் என்று அழைக்க ஆரம்பித்தது கேப்டன் பிரபாகரன் படம் வெளியான பின்பு தான் திரைப்பட கல்லூரி மாணவர் RK செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து 1990ல் வெளிவந்த புலன் விசாரணை மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த கூட்டணி மீண்டும் இணைந்து 1991ல் கேப்டன் பிரபாகரன் என்ற படத்தை தந்தது. தமிழ் சினிமாவில்  மிக சிறந்த சண்டை காட்சிகள் நிறைந்த படமாக இப்படம் இன்று வரை கொண்டாடப் படுகிறது.

சண்டை காட்சிகளில் நிறையவே உழைத்திருப்பார் விஜயகாந்த். நீதிமன்ற காட்சிகளில் விஜயகாந்த் பேசும் வசனம் அன்றைய அரசியலை வெட்ட வெளிச்சமாக காட்டியது. கேப்டன் பிரபாகரன் விஜயகாந்த்தின் 100 ஆவது படமாகும். விடுதலை புலிகளின் தலைவர் கேப்டன் பிரபாகரன் மீது விஜயகாந்த் கொண்டிருந்து மரியாதை காரணமாகவும் இப்படத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. அதேபோல், தன்னுடைய மகனுக்கு பிரபாகரன் என வைத்தார் விஜயகாந்த்.

4. தவசி:

Thavasi
Thavasi

2001ல் வெளியான தவசி திரைப்படம் விஜயகாந்த்திற்கு ஒரு வெற்றி படமாக அமைந்தது. தவசியாக அப்பா கேரக்டரில் வரும் விஜயகாந்த் கம்பீரமாக நடித்திருப்பார். இப்படத்தில் இடம் பெறும் ”ஏலே இமயமலை” பாடல் கள்ளகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் போது ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ஒலிக்கும். விஜயகாந்த்தும் மதுரைக்காரர் என்பது குறிப்பிட்டதக்கது. அதேபோல், தவசி படத்தில் இடம்பெற்ற ” துளசி வாசம் மாறினாலும் மாறும் ஆனால், இந்த தவசி வார்த்தை மாறமாட்டன்” என்ற வாசனம் விஜயகாந்தின் அடையாள வாசனங்களில் ஒன்றாக மாறியது.

5. சொக்கத்தங்கம்:

Sokka Thangam
Sokka Thangam

”உன்னை நினைசேன் நான்.. உன்னை நினச்சேன்” பாடல் இடம்பெற்ற சொக்கதங்கம் படம் வெளிவந்த ஆண்டு 2003. பாக்கியராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சொக்கதங்கம் படத்தில் ஒரு பாசமிகு அண்ணனாக நம்மில் ஒருவராக வாழ்ந்து காட்டியிருப்பார் விஜயகாந்த். தமிழ் திரையுலிகில் எம்ஜிஆருக்கு அடுத்து, தன்னை நம்பி வரும் கலைஞர்களுக்கு அன்னமிட்டு, ஓடோடி உதவி செய்த விஜயகாந்த் மறைந்த நிலையில், அவர் நடித்த படங்களை ரசிகர்கள் மீண்டும் இணைதளங்களில் தேடத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
விதைக்கப்பட்டார் விஜயகாந்த்.. பிரியா விடை கொடுத்த மக்கள்!
vijayakanth_pic

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com