விஜயகாந்த் மகனின் புதுப் பட அப்டேட்: குவியும் வாழ்த்துக்கள்!

விஜயகாந்த் மகன்
விஜயகாந்த் மகன்

சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து படங்களை இயக்கிய பொன்ராம். அடுத்ததாக விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

நடிகர் விஜயகாந்திற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. சினிமாவைக் கடந்து. அரசியல் மூலமாகவும் பலரது மனதை சம்பாதித்து வைத்தவர் என்றே இவரைச் சொல்லலாம். அவர் இருக்கும்போதே தனது மகனை சினிமாவில் நடிக்க வைத்தார். இருவரும் சேர்ந்து கூட ஒரு படத்தில் நடித்தனர். ஆனால். விஜயகாந்த் உடல்நிலை மோசமானதால் அந்த;க் படம் ட்ராப் ஆனது. இப்படி எக்கச்சக்க ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட விஜயகாந்தின் மறைவுக்கு ஒட்டுமொத்த தமிழகமே சென்னையில் கூடியது என்று சொல்லலாம்.

இந்த நிலையில், இவரது மகன் சண்முகப்பாண்டியனின் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அவரது மகன் சினிமாவில் சாதிக்க வேண்டும் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர். ’அவர் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறேன்’ என ராகவா லாரன்ஸ் மற்றும் விஷால் போன்ற நடிகர்கள் கூறியிருந்தனர். அதேபோல் சண்முகப்பாண்டியன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கேமியோ ரோலில் நடிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
’இளையராஜா மட்டுமில்லை; இவருடைய பயோபிக்கிலும் நடிக்க ஆசை’ நடிகர் தனுஷ் பேச்சு!
விஜயகாந்த் மகன்

இந்த நிலையில். சிவகார்த்திகேயனுக்கு இரண்டு சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் பொன்ராம் அடுத்ததாக விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனை வைத்துதான் படம் இயக்கப்போகிறாராம்.

அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். சிவகார்த்திகேயன் தனது திரைவாழ்க்கையில் முன்னணி நடிகர் என்ற இடத்தைப் பிடிக்க உதவியாக இருந்த இயக்குநர்களில் ஒருவர் பொன்ராம். ஆனால், சீமராஜா, டிஎஸ்பி என அடுத்தடுத்து தோல்விகள் காரணமாக முன்னணி நடிகர்களுடன் இணைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் சண்முகப்பாண்டியனை வைத்து படம் இயக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தத் தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com