பிறந்தநாள் ஸ்பெஷலாக நாளை வெளியாகும் விக்ரம் படத்தின் அப்டேட்!

Chiyan 62
Chiyan 62
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

நாளை சியான் விக்ரம் பிறந்த நாளையொட்டி அவர் நடிக்கும் சியான் 62 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனையடுத்து X தளத்தில்  சியான் 62 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

சமீபத்தில் நடிகர் விக்ரம், இயக்குனர் சங்கர் மகளின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படம் வெளியிடப்பட்டது. இதில் அவர் சியான் 62 படத்தின் லுக்கில் தோற்றமளித்தார். இதனையடுத்து சியான் 62 படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பித்துவிட்டதா? என்ற கேள்விகள் எழுந்தன. அந்தவகையில், விக்ரம் திரும்பி நிற்பதுபோல புகைப்படம் சியான் 62 படத்திற்கான போஸ்டருடன் வெளியிடப்பட்டது.

சமீபத்தில் வந்த செய்திப்படி, சியான் 62 படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் 14ம் தேதி முதல் திருத்தணியில் நடைபெற்று வருகிறது. விக்ரமின் சியான் 62 படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இவர் இதற்கு முன்னர் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் அவ்வப்போது நடிகர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இதுவரை இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

சியான் 62 படத்தை அருண் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியாகி வெகுநாட்கள் ஆனது. இதற்கிடையே விக்ரம் தங்கலான் படத்தில் பிஸியாக இருந்து வந்ததால் சியான் 62 படத்தின் படப்பிடிப்பு இருப்பில் இருந்தது.

இதனையடுத்து படக்குழு ஒரு வீடியோ கிளிம்ஸிற்காக மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடத்தியதாக செய்திகள் வந்தன. ஆனால், எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அந்தவகையில், விக்ரம் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டார். அதில் விக்ரம் பிறந்தநாளன்று ஒரு புதிய அப்டேட் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
பிரதீப் ரங்கநாதனின் புதுப் படம் ரசிகர்களை திருப்தி செய்யுமா?
Chiyan 62

இந்த அறிவிப்பையடுத்து ரசிகர்கள் என்ன அப்டேட்டாக இருக்கும் என்று குழம்பினர். இந்தநிலையில் இது படத்தின் டைட்டில் டீஸராக இருக்கும் என்றும் ரசிகர்கள் கணிக்கின்றனர். அதேபோல், இந்த டீஸருக்குதான் படக்குழு மூன்று நாட்கள் படப்பிடிப்பு செய்தது என்றும் கணிக்கின்றனர்.

மேலும் சமீபத்தில் ஜெமினி படத்தின் வெளியீட்டுத் தேதி அன்று விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய அப்டேட் சில தினங்களில் என்று பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com