விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்... ரீ ரிலீசாகும் கில்லி படம்!

ghilli re-release
ghilli re-release
Updated on

பல வருடங்களுக்கு முன்பு ரிலீஸான படங்கள் ரீ ரிலிசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரஜினியின் பாபா, முத்து, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான் படங்கள் தான் இந்த ட்ரெண்டை தொடங்கி வைத்தன. இதனால் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படமும் ரீ-ரிலீஸாகியுள்ளது. அதேபோல் தனுஷின் 3, மயக்கம் என்ன படங்களும் சமீபத்தில் மீண்டும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

ஆனாலும், கமலின் வேட்டையாடு விளையாடு மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு வசூல் செய்தது. இருப்பினும் ரீ-ரிலீஸாகும் படங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைப்பதால் விஜயின் கில்லியும் அடுத்து களமிறங்குகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 அடுத்தாண்டு வெளியாகவுள்ளது. அதற்கு முன்னதாக விஜய்யின் ரசிகர்கள் வைப் செய்ய கில்லி படம் ரீ ரிலிஸாக உள்ளது. 2004ம் ஆண்டு வெளியான கில்லி, தெலுங்கில் ஹிட் அடித்த மகேஷ் பாபுவின் ஓக்கடு படத்தின் ரீமேக் ஆகும்.

இதையும் படியுங்கள்:
நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிடும் தனுஷ்!
ghilli re-release

ஆனாலும் கில்லி படத்தில் விஜய்யின் ஆக்டிங், ஆக்‌ஷன், இயக்குநர் தரணியின் மேக்கிங், வித்யாசாகரின் இசையின் பாடல்கள், பிஜிஎம் என அனைத்துமே படத்தின் சிறப்பம்சமாகும். விஜய் - திரிஷா கூட்டணியை ரசிகர்கள் விரும்ப இந்த படமும் முக்கிய காரணமாகும். இருவரும் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் அட்டகாசமாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் தற்போது லியோ படத்தில் நடித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com