GOAT
GOAT

விஜய் ரசிகர்களுக்கு குட்நியூஸ்... GOAT பட 2வது பாடல் நாளை வெளியீடு!

Published on

விஜய் நடிக்கும் The GOAT படத்தின் இரண்டாவது பாடல் நாளை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு 'GOAT' என தலைப்பிடப்பட்டுள்ளது. நியூ இயரை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர்கள் மூலம் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியானது.

இந்த படத்தில், லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பது தான் ஹைல்டைட். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டிற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரட்டை விஜய்யின் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ளார்.

GOAT திரைப்படம் கோடை விடுமுறை நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக கசிந்த வண்ணம் உள்ளன.

விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால், விஜய் ரசிகர்கள் GOAT படத்தையும், அதற்கு அடுத்து வரும் படத்தையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல் விஜய்யின் பிறந்தநாளன்று ஏதாவது ஒரு மாஸ் அப்டேட் வருவது வழக்கம். அந்த வகையில் நாளை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு GOAT படத்தின் 2வது பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
நாளை பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்... கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் அட்வைஸ்!
GOAT

ஏற்கனவே வெளியான விசில் போடு பாடலும் செம ஹிட்டான நிலையில், இந்த பாடலை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். சின்ன சின்ன கண்கள் என்கிற இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. ஏற்கனவே வெளியாகிய விசில் போடு பாடலை நடிகர் விஜய் பாடியிருந்த நிலையில் இது அவருடைய குரலில் வெளியாகும் இரண்டாம் பாடல் ஆகும். யுவன் இசையில் விஜய் பாடிய 2வது பாடல் நாளை வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com