விரைவில் விஜய்யின் கோட் ஆடியோ லாஞ்ச்... எப்போது தெரியுமா?

GOAT Movie
GOAT Movie

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அரசியலில் தாவிய நடிகர் விஜய் தற்போது அவரது 68வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு GOAT என பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. இந்த படத்தை தொடர்ந்து ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாகும், அதன் பிறகு சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகுவதுமாக விஜய் அறிவித்துள்ளார்.

இதனால் விஜய்யின் ரசிகர்கள் கவலையில் இருந்தாலும், கோட் பட ஒவ்வொரு அப்டேட்டையும் கொண்டாடி வருகின்றனர். விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது வைரலானது. வெங்கட் பிரபு கதை என்றாலே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அதிலும் இந்த படத்தில் மைக் மோகன், ஸ்னேகா, லைலா, பிரசாந்த் என 90ஸ் நடிகர்கள் இணைவதால் படத்திற்கு எதிர்பார்ப்பு சற்றே அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
திடீரென சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் கனகராஜ்... எவ்வளவு தெரியுமா?
GOAT Movie

நடிகர் விஜய்யின் படம் ரிலீஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஆடியோ லாஞ்ச் தான். நடிகர் விஜய்யின் குட்டி ஸ்டோரியை கேட்க ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவிற்காக ஆண்டுதோறும் காத்திருப்பார்கள். தற்போது கோட் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி வரும் நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்ற முறை லியோ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா முதலில் மலேசியாவில் நடத்தப்படும் என்று கூறப்பட்டது. அதன் பிறகு சென்னையில் நடத்த திட்டமிட்டு, இறுதி நேரத்தில் அதற்கு உரிய அனுமதி கிடைக்காத நிலையில், இசை வெளியீட்டு விழா நடக்கவில்லை. இருப்பினும் கோட் திரைப்பட இசை வெளியீட்டு விழா முன்கூட்டியே நல்ல திட்டமிடலோடு நடக்கும் என்றும், மலேசியா அல்லது சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளில் ஒரு இடத்தில் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் இன்னும் சில நாட்களிலேயே நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com