நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் ரசிகர்களின் செயலை எண்ணி வேதனைப்பட்டு ஒரு கட்டளை இட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் தனது அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளார்.
விஜய்யின் அரசியல் பிரவேசம், அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு, அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பலரும் நம்புகின்றனர்.
ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கம் என்று அவர் கூறியுள்ளார். மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் நுழைவு, தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, இளைஞர்களின் ஆதரவுடன் புதிய அரசியல் சக்தியாக விஜய் உருவெடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சில அரசியல் விமர்சகர்கள், விஜய்யின் அரசியல் நுழைவு ஆரோக்கியமான அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றனர். ஆனால், இன்னும் சிலர், அரசியல் அனுபவம் இல்லாத விஜய், அரசியல் களத்தில் வெற்றி பெறுவது கடினம் என்று விமர்சிக்கின்றனர்.
இப்படியான நிலையில், விஜய் அவ்வப்போது நேரடியாக இளைஞர்களை நேரில் சென்று சந்திக்கிறார். அப்படித்தான் சமீபத்தில் விஜய் கோவை வந்தார். ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். பேரணியின்போது தொண்டர்கள் வாகனத்தின் மீது ஏறுவதும், வண்டியில் பின்தொடர்ந்து செல்வதும் என இருந்தனர். இதனால், போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டது.
இதுகுறித்துதான் ரசிகர்களுக்கு கட்டளை ஒன்றை விட்டிருக்கிறார். "மூன்று தினங்களுக்கு முன், கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! ஐ லவ் யூ கோவை & கொங்கு தங்கம்ஸ். இப்ப கொஞ்சம் உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன். நம்ம பயணத்தப்ப ஆம்புலன்ஸ் வந்ததும் அதுக்கு வழிய சரிபண்ணிவிட்ட உங்க செயல பாராட்டியே ஆகணும். அதுதான் நீங்க. இப்டில்லாம் செய்ற நீங்க, அன்பின் காரணமா செய்ற சிலதையும் சொல்லி ஆகணும். உங்களோட அன்ப புரிஞ்சுக்கறேன் ஃப்ரெண்ட்ஸ். அதுக்கு நான் தலைவணங்கவும் செய்யறேன். ஆனா எப்பவுமே நம்மளோட அன்பை வெளிப்படுத்துற விதம், அதீதமாகவே இருந்தாலும் அது மத்தவங்களுக்கு முன்னுதாரணமாத்தான் இருக்கணும்… எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம்…
நீங்கதான் எனக்கு precious… இவ்ளோ அன்போட இருக்கிற நீங்க எனக்குக் கிடைச்சதுக்கு நான் என்ன தவம் செஞ்சேன்னு எனக்குத் தெரியல… உங்கள நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்… உங்க அன்ப நான் மதிக்கறேன்… இனி எப்பவும் மதிப்பேன்… அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது…” என்று பேசினார்.