விக்ரம் பிரபுவின் 'ரெய்டு' திரைப்படம்!

விக்ரம் பிரபுவின் 'ரெய்டு' திரைப்படம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நடிகர் கார்த்தி இயக்கியுள்ள 'ரெய்டு' படத்திற்கு பிரபல இயக்குனர் முத்தையா கதை, திரைக்கதை எழுதியுள்ளார். வெங்கட் பிரபு, ஸ்ரீ திவ்யா மற்றும் புதுமுகம் அனந்திகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ஸ்ரீ திவ்யா 6 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் படம் இது.

எஸ்.கே. கனிஷ்க், ஜிகே பிக்சர்ஸ் , எம் ஸ்டுடியோஸ் மற்றும் ஓபன் ஸ்கிரீன் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். கைதி புகழ் சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதிரவன்‌ ஒளிப்பதிவு செய்துள்ளளார்.

இது தமிழ் ஆக்‌ஷன், டிராமா மற்றும் திரில்லர் திரைப்படம். இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ரெய்டு திரைப்படம் தமிழ் மொழியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படம் பிப்ரவரியில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், எஸ்.ஜே.சூர்யா, தேசிங் பெரியசாமி மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் ட்விட்டரில் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com