ஸ்ட்ரைக் வாபஸுக்குப் பின் சினிமா ரேஸ்: இந்த வாரம் வெளியாகும் 5 புதுப் படங்கள் என்னென்ன?

திரையரங்குகளில் இந்த வாரம் 5 புதிய படங்கள் ரிலீஸ்: சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்!
movies release
movies releasechatgpt
Updated on

தமிழ்ப் படத் தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக்கை வாபஸ் வாங்கினாலும் வாங்கியது, சினிமா ஃபீல்டில் ஒரே குஷி! இந்த வாரம் 5 படங்கள் வெளியாகின்றன. ஒரு படம் மட்டும் 3/9/2026 வியாழன் அன்றும், மீதி 4 படங்கள் 4/9/2026 வெள்ளி அன்றும் ரிலீஸ் ஆகின்றன.

இந்த வாரம் 'கயாடு லோஹர் வாரம்' என்று சொல்லும்படி அவரது இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின்றன. விஸ்வநாத் அண்ட் சன்ஸ், பெத்லேகம் குடும்ப யூனிட் எனத் தொடர்ந்து இரு ஹிட் படங்களைத் தந்த மமிதா பைஜூவுக்குப் போட்டியாகக் கயாடு லோஹரும் ஹிட் கொடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மமிதா பைஜூ நடிப்பை நம்பிக் களம் இறங்கினார்; கயாடு லோஹர் கிளாமரை நம்பியிருக்கிறார் என்பது அவரது படங்களின் டிரெய்லரிலிருந்தே தெரிகிறது.

  1. I, M Game (ஐ, எம் கேம்) – மலையாளம்/தமிழ் (ஃபேண்டஸி த்ரில்லர்)

  2. இம்மார்ட்டல் – தமிழ் (ஃபேண்டஸி ஹாரர் த்ரில்லர்)

  3. போர் (4) இடியட்ஸ் – காமெடி க்ரைம் டிராமா

  4. பாவை – மோட்டிவேஷனல் டிராமா

  5. 7 ஸ்டார் பாய்ஸ் – மெலோ டிராமா (சிறுவர் கதை)

I'm game
I'm gamesource:district app

1. ஐ, எம் கேம் (I, M Game) :

மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானின் சொந்தப் படம் இது. நாயகனாக நடித்துப் படத்தையும் தயாரித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாகக் கயாடு லோஹர் நடித்திருக்கிறார். சம்யுக்தா விஸ்வநாதன், ஆண்டனி வர்க்கீஸ், கதீர், வினய் போர்ட் போன்றவர்கள் முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள். மிஷ்கின் ஒரு வித்தியாசமான கேரக்டரில் வருகிறார்.

மம்முட்டி, மோகன்லால் இருவரும் ஒரு சீனில் கெஸ்ட் ரோலில் வருகிறார்கள்.

சீதாராமம் (2022) ஹிட், கிங் ஆஃப் கோதா (2023) தோல்வி, லக்கி பாஸ்கர் (2024) பிளாக்பஸ்டர் ஹிட், காந்தா (2025) சுமார் என வரிசையாக நான்கு படங்கள் மாறி மாறி வெற்றி, தோல்விகளைச் சந்தித்த துல்கருக்கு இது வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இவரது சொந்தப் படமான லோகா சேப்டர் 1 (2025) மெகா ஹிட்.

ஆர்டிஎக்ஸ் (2023) என்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய நஹாஸ் ஹிதாயத் தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.

டிரெய்லரைப் பார்த்து யூகித்த கதை:

நாயகன் சூதாட்டத்தில் கில்லாடி. அது சீட்டு விளையாட்டாக இருந்தாலும் சரி, கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்காக இருந்தாலும் சரி; அதில் பட்டையைக் கிளப்பிப் பணம் சம்பாதிக்கிறான். எதிர்பாராத விதமாக ஒரு தோல்வியைச் சந்திக்க, மனரீதியாகப் பாதிக்கப்படுகிறான். ட்ரீட்மெண்ட்டுக்காக ஒரு லேடி டாக்டரிடம் சைக்கலாஜிகல் ட்ரீட்மெண்ட் எடுக்கிறான். அவள்தான் நாயகி. நாயகியை நாயகன் காதலிக்க, அவள் அந்தக் காதலை ஏற்கவில்லை. இதன்பின் நிகழும் சம்பவங்கள்தான் மீதித் திரைக்கதை.

ரசித்த வசனங்கள் :

  1. "கடவுளுக்கும் சாத்தானுக்கும் நடக்கும் சூதாட்டம்தான் நம் வாழ்க்கை."

  2. "சூதாட்டத்தின் வரலாறு இதுதான்... சிலர் இதில் வாழ்கிறார்கள், பலர் இதில் வீழ்கிறார்கள்."

  3. "இருப்பதையும் இழந்த ஏழையிலிருந்து நாட்டையும் அரண்மனையையும் இழந்த அரசன் வரை தோற்பவர்கள் யாரும் திருந்துவதில்லை."

  4. "கேம்ப்ளிங் என்பது மிகப்பெரிய ரகசியம். இதில் எல்லோரும் நம்புவது அவங்கவங்க அதிர்ஷ்டத்தை."

  5. "ஒவ்வொரு கேம்க்கும் ஒரு பேட்டர்ன் இருக்கும்; அதை கிராக் பண்ண முடிஞ்சா ஈஸியா பிரெடிக்ட் பண்ணலாம்."

  6. "என்னைப் பொறுத்தவரை நீ ஒரு பேஷண்ட் மட்டும் தான்... ஜஸ்ட் ஒரு பேஷண்ட்!"

  7. "வாழ்க்கையிலும் சரி, சூதாட்டத்திலும் சரி, நாம் மறக்க முடியாத ஒரு தத்துவம் இருக்கு... நெவர் கிவ் அப்!"

  8. "ரொம்பக் குழப்பிக்க வேண்டாம்; இது ஜஸ்ட் ஒரு என்டர்டெய்ன்மெண்ட் தான்."

  9. "ஒரு தனி ஆளு வெறி பிடிச்ச மாதிரி பண்ணியிருக்கான்."

  10. "உண்மை ஜெயிக்க லேட்டாகும், ஆனா கண்டிப்பா ஜெயிக்கும்!"

  11. "படையிலும் பந்தயத்திலும் தோற்கிற ஆள் நான் இல்லை."

டிரெய்லர் 2.5 நிமிடங்கள், டீசர் 1.4 நிமிடங்கள் பார்த்ததிலேயே இந்தப் படம் ஓரளவு நல்ல கமர்சியல் என்டர்டெய்னராக இருக்கும் என்பது தெரிகிறது. அதுபோக பஞ்ச் டயலாக்குகள் பிளேஸ் செய்யப்பட்ட இடங்கள் தெறிக்கின்றன. விஷுவல்ஸும் பிரம்மாண்டமாய் இருக்கின்றன.

நாயகி போர்ஷன் சும்மா ஊறுகாய் மாதிரிதான் எனத் தோன்றுகிறது. சதுரங்க வேட்டை + லக்கி பாஸ்கர் + மங்காத்தா போல் ஒரு ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட் மாதிரி தெரிகிறது.

2. இம்மார்ட்டல் (Immortal)

immortal movie
immortal moviesource:bookmyshow

ஹேப்பி ராஜ், மெண்டல் மனதில் என இரு சுமார் ரக வெற்றிப் படங்களில் நடித்த ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் ஒரு வித்தியாசமான ஃபேண்டஸி ஹாரர் த்ரில்லர் இது. முழுக்க முழுக்க நாயகி கயாடு லோஹரின் கிளாமரை மட்டுமே நம்பிப் படம் எடுத்த மாதிரி தெரிகிறது.

டிரெய்லரிலிருந்து யூகித்த கதை:

நாயகன் நகரத்தில் தனி வீட்டில் குடிபோகும் அளவுக்கு வசதியில்லாதவன். நான்கைந்து நபர்கள் சேர்ந்து ஒரே வீட்டில் தங்கினால் வாடகை மிச்சமாகும் என நினைக்கிறான். இது தெரிந்து நாயகி, நாயகனுக்கு போன் பண்ணி அழைக்கிறாள்.

இருவரும் ஒரே வீட்டில் தங்குகிறார்கள். அது சாதாரண வீடில்லை, ஒரு பங்களா. நாயகி, நாயகனுடன் ரொம்ப நெருக்கமாகப் பழகுகிறாள். ஒரு கட்டத்தில் நாயகனுக்கு நாயகி பெண் இல்லை, பேய் என்பது தெரியவருகிறது. நாயகன் அந்தப் பேயிடமிருந்து தப்பித்தாரா? நாயகியின் நோக்கம் என்ன? என்பதே மீதித் திரைக்கதை.

டிரெய்லரில் நம்மைப் பயப்பட வைக்கும் தருணங்கள் 20% என்றால், கிளுகிளுப்பூட்டும் காட்சிகள் 80%. ஜென்-சி (Gen Z) இளைஞர்களைக் கவரும் போல் தெரிகிறது.

ரசித்த வசனங்கள்:

  1. "ஹலோ சார்... ஷேரிங் ரூம் பார்க்கிறீங்களா?" / "எஸ்... எத்தனை பசங்க?" / "நான் மட்டும்தான்..." (ஹஸ்கி வாய்ஸில் நாயகி)

  2. "எப்போ ஷிஃப்ட் ஆகப் போறீங்க?" / "ஆல்ரெடி ஷிஃப்ட்டெட்."

  3. "என்னடா... உன் ரூமைக் காட்டுறேன்னு சொல்லிட்டு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலைக் காட்டுறே?"

  4. "என்ன பொண்ணுடா அவ... தம் கேட்டா தம் தர்றா, பீடி கேட்டா பீடி தர்றா!"

  5. "பார்க்க லட்சணமா இருக்கான்னு சொல்றே, லட்ச லட்சமா பணம் வச்சிருக்கான்னு சொல்றே... அவளையே கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ."

  6. "இப்போ உனக்குக் கிடைச்சிருப்பது கோல்டன் டைம்!"

  7. "நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?" / "எப்படியும் தப்பாதான் கேட்கப் போறே..."

  8. "டேய்... என்னை மாதிரி ஒரு அழகான பையனும், தேவதை மாதிரி ஒரு பெண்ணும் பக்கத்துப் பக்கத்து ரூமில் இருந்தா எப்படி இருக்கும்?" / "எனக்கு வயித்தெரிச்சலா இருக்கும்!"

  9. "நீ சொல்றது நிஜம். இந்த ரூமில் கொசு ஜாஸ்தியா இருக்கு; அதான் உன் ரூமுக்கு வந்தேன்."

  10. "மிஸ்... என் ரூமில் கொசுத்தொல்லை ஜாஸ்தியா இருக்கு." / "என் ரூமில் வவ்வால் தொல்லை இருக்கும், பரவாயில்லையா?"

படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் வந்த மௌன ராகம் படத்திலிருந்து 'பனி விழும் இரவு', 'பால் வண்ண நிலவு' பாட்டை யூஸ் பண்ணியிருக்கிறார்கள். எப்படியும் இளையராஜா நஷ்டஈடு கேட்டு கேஸ் போடுவார்; அது இலவச விளம்பரம்தான்!

அறிமுக இயக்குநர் மரியப்ப சின்னா தான் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். சாம் சி.எஸ் தான் இசை. சைரன், பிளாக் மெயில் ஆகிய படங்களுக்குப் பின் ஜி.வி. பிரகாஷ் + சாம் சி.எஸ் கூட்டணியில் வரும் 3-ஆம் படம் இது.

3. போர் (4) இடியட்ஸ்

4 idiots
4 idiots source:youtube

இயக்குநர் ஷங்கர் விஜய்யை வைத்து இயக்கிய நண்பன் படம் ஹிந்திப் படமான 3 இடியட்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். ஆனால் இந்த போர் இடியட்ஸ் படத்தின் கதைக்கும் அந்த 3 இடியட்ஸ் படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை.

டிரெய்லரைப் பார்த்தபோது யூகித்த கதை:

நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள். திருட்டுதான் இவர்களது தொழில். ஒரு பெரிய திருட்டைச் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டும் என நினைக்கிறார்கள். 20 கோடி ரூபாய் கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் பங்களாவுக்குள் நுழைகிறார்கள். அங்கே ஒரு கேங்க்ஸ்டரிடம் மாட்டிக்கொண்டு அவர்கள் படும் துயரக் காமெடிகள்தான் மொத்தக் கதையுமே.

கேங்க்ஸ்டராக இயக்குநர் ரவி மரியா, நான்கு இளைஞர்களாகப் புகழ், பிரக்யா, நயன், கும்கி ஆகியோர் நடிக்க, வில்லனாக வின்சென்ட் அசோகன் நடிக்கிறார். அஸ்வின் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் சார் சுந்தர். ஒரே பங்களாவில் மொத்தக் கதையும் நடக்கும் போல் தெரிகிறது.

ரசித்த வசனங்கள்:

  1. "பெரிய இடத்துல பெருசா சம்பவம் செஞ்சுட்டு செட்டில் ஆகிடணும்."

  2. "இவ்வளவு பெரிய கதவை எப்படித் திறக்கிறது?" / "நான் வேணா சாவி செஞ்சு தரவா?"

  3. "இந்த வீட்டில் வாழவா வந்திருக்கோம்? வாஸ்து பார்த்துட்டு இருக்கே? திருடத்தானே வந்திருக்கோம்!"

  4. "என்னடா... சீட்டுக்கட்டுல ரம்மி மாதிரி நீங்க மூணு பேரும்? ஒரு ஜோக்கர் இருந்தா மேட்சிங்கா இருக்கும்." / "அதான் நீ இருக்கியே!"

  5. "ஒரு சின்ன பேப்பர்தான் கிடைச்சிருக்கு... இது ஓகேவா?" / "கவிதையா எழுதப்போறோம்? காப்பாத்துங்கனு எழுதப்போறோம்!"

  6. "நீ என் கூட இருக்கிறப்போ 10 புரூஸ் லீ + 1 ஜாக்கி சான் இருப்பதற்குச் சமம்."

  7. "இனிமே நாம அவங்ககிட்ட இருந்து தப்பிக்கணும்னு நினைக்கக் கூடாது; அவங்கதான் நம்மகிட்ட இருந்து தப்பிக்கணும்னு நினைக்கணம்."

  8. "சட்டத்தைக் கையில் எடுத்துக்க வேண்டாம்னு சொன்னதில் ஒரு சுயநலமும் இருக்கு."

  9. "இவங்களைப் பிடிக்க ஒரு தனிப்படையே தயாராக இருக்கு. அதுக்குத் தலைவனே நாமதான்."

  10. "யாரும் உன் விதியைத் தீர்மானிக்க முடியாதுனு சொன்னே... இப்போ நான் தீர்மானிக்கிறேன்!"

4. பாவை

paavai
paavai source:district

ராகுல் விக்னேஷ் இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க உருவாகும் லோ பட்ஜெட் படம் இது.

16 வயதான ஒரு மாணவி தனது 22 வயது வரையிலான வாழ்க்கைப்பயணத்தில் சந்திக்கும் சவால்களை எப்படி எதிர்கொண்டாள் என்பதே கதை. எதிர்பாராத சில சம்பவங்களால் அவளது முன்னேற்றம் தடைபடும்போது, தன் சுய அடையாளத்தை மீட்க அவள் எப்படிப் போராடினாள் என்பதே திரைக்கதை.

இதன் டிரெய்லர் இதுவரை வரவில்லை. முல்லையரசி, நிரஞ்சன் நெய்தியார், சிலம்பரசன் பொன்னுசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை: செந்தூர் அரசு.

5. செவன் ஸ்டார் பாய்ஸ்

7 star boys
7 star boyssource:dailythanthi

கிராமத்தில் நடக்கும் கபடி விளையாட்டை மையமாக வைத்து வெண்ணிலா கபடி குழுவை எடுத்தது போல், வில்லேஜ் ஃபுட்பால் மேட்ச் பற்றிய படம் இது.

ஆண்டனி வர்க்கீஸ், பாபு வர்க்கீஸ், லுகான், இந்தியக் கால்பந்து வீரர் ஐ.எம்.விஜயன் ஆகியோர் நடிக்கும் படம் இது. நிகில் பிரேம் ராஜ் இயக்கியிருக்கிறார்.

இசை: ஜேக்ஸ் பிஜோய்.

கிராமத்தில் இருக்கும் சில லட்சிய இளைஞர்களைத் திரட்டி, லகான் ஹிந்திப் படத்தில வருவது போல் ஒரு டீம் உருவாக்கி, மாநில அளவிலான போட்டிக்கு அவர்களைத் தயார்படுத்துவது தான் கதை.

இதையும் படியுங்கள்:
“விஜய் சாருடன் இனி நடிக்கவே முடியாது!” - மேடையில் கலங்கிய கேரளத்து நடிகர்.!
movies release
logo
Kalki Online
kalkionline.com