ஜேசன் சஞ்சய் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் சார்பில் எதோ பிரச்னை இருப்பதாகவும், அதற்கு அஜித் நேரடியாக சஞ்சயிடம் பேசியிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டோரொண்டோ பிலிம் பள்ளி மற்றும் இங்கிலாந்தில் உள்ள சென்ட்ரல் பிலிம் பள்ளியில் சினிமா சார்ந்த படிப்பை முடித்துள்ளார். அவர் சினிமா சார்ந்த துறையில் படித்து கொண்டிருக்கும்போதே pull the trigger என்ற ஆங்கில குறும் படத்தை இயக்கினார். அந்த படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் யூட்யூப் தளத்தில் வெளியானது.
சஞ்சய் படம் எடுக்கும் பொழுது எடுத்த மேக்கிங் ஸ்டில்ஸும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலே வெளியிட்டிருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி லைகா நிறுவனம் ஜேசன் சஞ்சய் படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க ஹரிஷ் கல்யான், அதர்வா, கவின், சூரி, சிவகார்த்திகேயன் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் .
ஆனால், இறுதியாக சந்தீப் கிஷன் ஒப்பந்தமானார். இதன் வீடியோ அறிவிப்பு வெளியானது.
இப்படியான நிலையில், ஜேசன் சஞ்சய்க்கும் தயாரிப்பு நிறுவனம் லைக்காவிற்கும் இடையே எதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கு அஜித் சஞ்சயிடம் பேசியிருக்கிறார் என்றும் செய்திகள் கசிந்துள்ளன.
ஜேசன் சஞ்சய், நடிகர் அஜித்குமாரின் மேலாளர், சுரேஷ் சந்திராவுக்கு போன் போட்டு இது குறித்து பேசியுள்ளார்.
அப்போது, அஜித்குமாரும் சுரேஷ் சந்திரா அருகில் தான் இருந்துள்ளார். இதனால், அஜித் போனை வாங்கி, ஜேசன் சஞ்சயிடம் நீண்ட நேரம் பேசியுள்ளார். குறிப்பாக, அஜித்குமார் ஜேசன் சஞ்சய்-க்கு வாழ்த்து கூறி உள்ளார். மேலும், பல்வேறு அறிவுரைகளையும் அவர் வழங்கியுள்ளார்.
இதனிடையே, ஜேசன் சஞ்சய், லைகா குறித்து அஜித்திடம் பேசியுள்ளார். அதன் பின்னர் அஜித், லைகா ஒத்து வந்தால் பார், இல்லை என்றால் வேறு தயாரிப்பு நிறுவனங்களிடம் நான் பேசுகிறேன் எனக் கூறி உள்ளார்.
தற்போது இந்த நிகழ்வு குறித்தான செய்தி தல தளபதி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.