
தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக சமந்தா வலம் வருகிறார். தனது அழகு மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் சமந்தா. 2010 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவர், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் நடிகை சமந்தா. தன்னுடன் ஜோடி சேர்ந்து நடித்த நாக சைதன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே பிரிந்தார். அடுத்து நடிகை சோபிதா துலிபலாவை டிசம்பர் 4ம் தேதி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார் நாக சைதன்யா.
நடிகை சமந்தா, மயோசிடிஸ் நோய் பாதிப்புக்குள்ளாகி, அதன் காரணமாக சினிமாவில் இருந்தும் சிறிது காலம் பிரேக் எடுத்தார். இதையடுத்து அவரது கம்பேக் திரைப்படமாக அண்மையில் 'சிட்டாடல் ஹனி பனி' வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் வீடியோவில், வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் சமந்தாவுக்கும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூரின் முதல் மனைவியின் மகனும் இந்தி நடிகருமான, அர்ஜுன் கபூருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு, இந்தி இணையதளங்ககளில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி நடிகை மலைகா அரோராவும் அர்ஜுன் கபூரும் காதலித்து வந்தனர். தன்னை விட வயதில் மூத்தவராக இருந்த மலைக்காவுடனான காதல் பற்றி அர்ஜுன் கபூர் மீது பல்வேறு கருத்துக்கள் வைக்கப்பட்டாலும், அவர் அதை பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
சோசியல் மீடியாவில், தான் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் மற்றும் வாழ்க்கை தத்துவங்கள் என ஏதாவது தொடர்ந்து சமந்தா பகிர்ந்து கொண்டே வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் பிரபல ஆங்கில எழுத்தாளரும் நாவலாசிரியருமான ருத்யார்டு கிப்ளிங் என்பவர் எழுதிய ஒரு செய்யுளை மேற்கோள் காட்டி சோர்ந்து போகும் நேரத்தில் எல்லாம் தன்னம்பிக்கை பெறுவதற்காக இதை தான் நான் மனதில் ஏற்றிக் கொள்கிறேன் என்று கூறி சோசியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
இதைப்பார்த்த பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், “சமந்தா சொல்வது உண்மைதான். இவர் கூறியுள்ள இந்த செய்யுளை நான் அப்படியே என் வீட்டில் போட்டோ பிரேம் ஆக மாட்டி வைத்து உள்ளேன். எப்போதெல்லாம் எனக்கு உற்சாகம் இழப்பதாக தோன்றுகிறதோ அப்போது இதை பார்த்து தன்னம்பிக்கை ஏற்றிக் கொள்வேன்” என்று கூறியுள்ளார். அர்ஜுன் கபூரின் இந்த பதிலுக்கு சமந்தா வெள்ளை இதயம் கொண்ட எமோஜியை பதிலாக அளித்துள்ளார்.
சமந்தா சமீபத்தில் வலைத்தளத்தில் பகிர்ந்த கவிதையை பார்த்து அனைவருக்கும் இந்த கவிதை ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் என்று பாராட்டினார்.
சமந்தாவிடமும் நீங்கள் தனியாக இருக்கிறீர்களா அல்லது யாருடனாவது காதலில் இருக்கிறீர்களா? என்று சமீபத்தில் கேள்வி எழுப்பியபோது, ‘விரைவில் நீங்களே பார்ப்பீர்கள்' என்று பதில் அளித்தார்.
சமந்தா மும்பை செல்லும் போதெல்லாம் அர்ஜுன்கபூர் வீட்டில் தங்குவதாகவும், விருந்துகளுக்கும் இருவரும் ஜோடியாக செல்வதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் சமந்தாவும், அர்ஜுன் கபூரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் கிசுகிசுக்கின்றனர்.
இதுவரை இருவரும் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், சமந்தாவின் ரசிகர்களோ, அர்ஜுன் கபூர் வேண்டாம் என கெஞ்சி போஸ்ட்களை போட்டு வருகிறார்கள்.