

கே.ஜி.எஃப் திரைப்படங்களின் மூலம் தேசிய அளவில் புகழ்பெற்ற நடிகர் யாஷ் , தான் சிறுவயதில் தந்தையிடம் அடி வாங்கிய அனுபவத்தையும் கூறியுள்ளார். அவர் தண்டனைப் பெற்ற விவரம் ரசிகர்களை அதிர்ச்சியாக்குள்ளாக்கியது. யாஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக உள்ளது.அதே போல அவர் நடித்துள்ள ராமாயணம் திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது .
மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் யாஷ் நடித்துள்ளதால் அவற்றின் வெளியீட்டிற்காக மிகவும் பரபரப்பாக இருக்கிறார். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்தியா டிவி சேனலின் நிகழ்ச்சிக்காக ராஜத் ஷர்மாவிற்கு யாஷ் பேட்டி அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் யாஷ் பேசியது மிகவும் பிரபலமாகி கொண்டு வருகிறது.
இந்த நேர்காணலில் யாஷ் தனது சிறுவயது அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொண்டார். யாஷ் சிறுவயதில் இருக்கும் பொழுது அவரது தந்தை, அவரை மின்விசிறியில் தலைகீழாக கட்டிப்போட்டு , அதன் சுவிச்சை ஆன் செய்து விடுவார், என்ற செய்தி கன்னட திரை உலகை மிகவும் பிரபலமாக இருந்து வந்துள்ளது. அது பற்றியும் இந்த நேர்காணலில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த யாஷ் , அந்த சம்பவம் வதந்தி அல்ல அது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டார். யாஷ் சிறுவயதில் மிகவும் குறும்புத்தனம் மிக்கவராகவும், எப்போதும் ஏதேனும் ஒரு சேட்டை செய்து கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார். இதனால், யாஷ் தனது தந்தையிடம் அடிக்கடி திட்டு வாங்கியதையும், பலமுறை அடி வாங்கியதையும் நினைவு கூர்ந்தார்.
மேலும் அவரது சேட்டைகள் அதிகமாகும் போது "அவரது தந்தை மின்சார விசிறியில் அவரை தலைகீழாக கட்டி தொங்க விடுவார் , அது மட்டுமல்லாமல் அந்த மின்சார விசிறியையும் ஆன் செய்து விடுவாராம். இது போன்ற கொடூரமான சம்பவங்கள் திரைப்படங்களில் மட்டுமே வில்லன் கதை பாத்திரம் எவ்வளவு மோசமானது" என்பதை காட்சிப்படுத்துவதற்காக வைத்திருப்பார்கள். ஆனால், இது போன்ற ஒரு மோசமான தண்டனையை யாஷ் சிறுவயதில் அனுபவித்திருக்கிறார் என்பது அவரது தந்தையின் மோசமான முரட்டுத்தனத்தையும் காட்டுவதாக இருக்கிறது.
இது பற்றி மேலும் விவரித்த யாஷ் , தான் பள்ளியில் படிக்கும் போதும், கல்லூரியில் படிக்கும் போதும் தனது வகுப்புக்கு உள்ளே வந்து, தனது தந்தை அடித்துள்ளதையும் கூறியுள்ளார். ஒரு நாள் தனது கல்லூரி வகுப்பினுள் புகுந்த தந்தை தன்னை அடித்ததும் , மயக்கம் வந்து விழுந்ததைப் போல் அவர் நடித்ததாகவும், அதன் பின்னே அவர் அடிப்பதை விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.
யாஷின் தந்தையின் மீது அவருக்கு மட்டும் பயமில்லை , அவருடன் படித்த அனைத்து வகுப்புத் தோழர்களுக்கும் யாஷ் தந்தை என்றாலே பயம் தான். அவர்கள அனைவரும் யாஷ் அப்பாவை புலி என்று தான் அழைப்பார்கள் , அவரைக் கண்டால் அனைவரும் நடுங்குவார்கள். தான் மயக்கம் வந்ததைப் போல நடித்த பின்னர் அவர் தந்தையின் அடியிலிருந்து தப்பியதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
யாஷ் தனது வெற்றிக்கு பின்னர் தந்தை மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆனால், தான் இன்னும் குழந்தைத்தனமாகவும் பிடிவாதமாகவும் இருப்பதாக அவர் நினைக்கிறார் என்றும் கூறியுள்ளார். சிறுவயதில் யாஷை போலவே , மைக்கேல் ஜாக்சனும் தனது தந்தையிடம் மோசமாக அடி வாங்கியுள்ளார். மைக்கேலின் தந்தை அவரை தலைகீழாக பிடித்து அடிப்பாரம். அவரது சிறுவயது சம்பவங்கள் மைக்கேலை வாழ்நாள் முழுக்க மன அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன் காரணமாக அவர் சில தவறான வழிகளுக்கும் சென்றார். அதே நேரம் யாஷ் தன்னை வலிமை மிக்கவராகவும் , துயர சம்பவங்களை கடந்தும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக நிற்கிறார்.