
உலகில் உள்ள பல இடங்களில் நகர்ப்புர புராணம் என்று சொல்லப்படும் Urban legends கதைகள் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. இது பெரும்பாலும் திகில், மர்மம் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட கதைகளாகவே இருக்கும். அதுப்போன்ற பிரபலமான Urban legend கதைகளில் ஒன்று தான் பிளட்டி மேரி.
பிளட்டி மேரி ஒரு பிரபலமான அர்பன் லெஜன்ட். பிளட்டி மேரி இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான விளையாட்டாக கருதப்படுகிறது. இந்த விளையாட்டை விளையாடி பிளட்டி மேரியை அழைத்தால், அவள் கண்டிப்பாக வருவாள் என்ற புரளிகள் உண்டு. இந்த விளையாட்டை தனியாகவே விளையாட வேண்டும்.
பிளட்டி மேரி விளையாட்டை விளையாடும் முறை:
முதலில் ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து கொள்ளுங்கள். கண்ணாடி இருக்கும் அறையாக பார்த்து அந்த அறையில் இருக்கும் விளக்குகள் அனைத்தையும் அணைத்து விடுங்கள். இந்த விளையாட்டை இரவு 12 க்கு மேல் மட்டுமே விளையாட வேண்டும். இப்போது மெழுகுவர்த்தியை ஏற்றி விட்டு, கண்ணாடியை பார்த்து மெதுவாக பிளட்டி மேரி, பிளட்டி மேரி, பிளட்டி மேரி என்று மூன்று முறை அழைக்க வேண்டும். நீங்கள் அழைப்பது பிளட்டி மேரிக்கு கேட்கும் அளவிற்கு.
நீங்கள் செய்தது வெற்றி பெற்றிருந்தால் பிளட்டி மேரி உங்களை தேடி வருவாள். இதுவரை அவளை பார்த்தவர்கள் ஒரு சூனியக்காரியை போன்ற தோற்றம் உள்ள ஒருவரை பார்த்ததாக சொல்கிறார்கள். பிளட்டி மேரி அந்த கண்ணாடிக்குள்ளேயே திரும்ப போக வேண்டும் என்றால், அவளை யார் அழைத்தார்களோ? அவர்களின் ஆன்மாவை எடுத்து கொண்டு தான் திரும்பி செல்வாள் என்பது கதை.
பிளட்டி மேரி உருவானதற்கு பலவிதமான கதைகள் சொல்லப்படுகிறது. மேரி என்ற சூனியக்காரியை எரித்துக் கொன்றதால் அவளின் ஆன்மா பழிவாங்குகிறது என்றும் இன்னும் சிலர் மேரி என்ற பெண் தன் குழந்தையை இழந்ததால் தற்கொலை செய்துக்கொண்டால் அவளுடைய ஆவி தான் இந்த பிளட்டி மேரி என்றும் சொல்லப்படுகிறது. எனினும், இதனுடைய ஆரம்ப புள்ளி எதுவென்று சரியாக தெரியவில்லை.
இது உண்மையா இல்லை பொய்யா? என்று தெரியவில்லை. ஆனால், உலகம் முழுக்க விளையாடும் பிரபலமான பேய் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. எதுவும் நடக்காமல் இந்த விளையாட்டு எப்படி உலகளவில் இவ்வளவு பிரபலம் அடைந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. திரில்லான திகில் அனுபவத்தை விரும்புவோருக்கு இந்த விளையாட்டு நிச்சயம் பிடிக்கும். என்ன தைரியம் இருந்தால் நீங்களும் முயற்சித்து பார்க்கலாமே?!