0,00 INR

No products in the cart.

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு குவைத் நாட்டில் தடை!

விஜய் நடித்த பீஸ்ட் படத்தை குவைத்தில் ரிலீஸ் செய்ய அந்நாடு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் உலகெங்கும் வருகிற 13-ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அப்படத்தில் தீவிரவாதம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், குவைத் நாட்டில் இப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக குவைத் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் சார்பாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்சன் – விஜய் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடி பூஜா ஹெக்டே. மேலும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், யோகிபாபு உடபட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பில் வெளியான இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சமீபத்தில் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் வருகிற 13-ம் தேதி பீஸ்ட் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்துக்கு குவைத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

ஊட்டி மலர் கண்காட்சி; முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கம்!

0
நீலகிரி  மாவட்டம் ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்காவின் 124-வது மலர் கண்காட்சியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்ததாவது: நீலகிரியில் வருடந்தோறும் மே மாதம் கோடை...

IPL கிரிக்கெட் இறுதிப் போட்டி; நேரத்தை மாற்றி  அமைத்தது பிசிசிஐ!

0
ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் இச்சமயத்தில், இதன் இறுதிப் போட்டிக்கான நேரத்தை பிசிசிஐ மாற்றி அறிவித்துள்ளது.  பிசிசிஐ இறுதிப் போட்டியன்று பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதால் இவ்வாறு ...

ஆக்சிஜன் கருவி மூலம்தான் சுவாசிக்கிறேன்: சுவாமி நித்தியானந்தா!

0
சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை  குறித்து பல்வேறு செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் மூச்சுத் திணறலால் அவதிப்படுவதாக தன் முகநூலில் குறிப்பிட்டு புதிய தகவலை வெளியிட்டுள்ளார். சுவாமி நித்தியானந்தா இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் சிக்கி,...

சர்வதேச மகளிர் குத்துச்சண்டைப் போட்டி; தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!

0
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த சர்வதேச மகளிர் உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நிகாத் ஜரீன் தங்கம் வென்றார். இதன்மூலம், இந்த சாம்பியன் பட்டத்தை வென்ற 5-வது இந்திய...

தமிழகத்தின் அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின்:  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!

0
தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஆவதற்குத் தயாராக இருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொன்டு...