1 வாரகால தென் மாவட்டச் சுற்றுப் பயணம்: சசிகலா இன்று தொடக்கம்!

1 வாரகால தென் மாவட்டச் சுற்றுப் பயணம்: சசிகலா இன்று தொடக்கம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

அதிமுக தொண்டர்களின் ஆதரவைப் பெற்ம் வகியில் தென்மாவட்டங்களில் ஒரு வார கால அரசியல் சுற்றுப் பயணத்தை சசிகலா இன்று தொடங்க்னார். அவரது ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர்.

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக அக்கட்சியில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் என்று கூறினார். அவரின் இந்த கருத்தால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அக்கட்சி துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிபட கூறியுள்ளார்.

இந்நிலையில் கட்சித் தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்ட ஒரு வாரகால அரசியல் சுற்றுப்பயணத்தை சசிகலா தொடங்கியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது

இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் தெரிவித்ததாவது:

சசிகலா தஞ்சையில் நாளை நடைபெறவுள்ள டிடிவி தினகரன் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கிருந்து 28-ம் தேதி மதுரை சென்று முத்துராமலிங்க தேவர் மற்றும் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். 29-ம் தேதி ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்தித்தபின், 30-ம் தேதி காலை பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் பங்கேற்கும் சசிகலா, அன்றைய தினமே தஞ்சை திரும்புகிறார். நவம்பர் 1-ம் தேதி தஞ்சை, அதன் பின்னர் திருநெல்வேலி உள்பட மேலும் சில மாவட்டங்களுக்கும் அவர் செல்லவிருக்கிறார்.

–இவ்வாறு சசிகலாவின் பயண விபரம் தெரிவிக்கப் பட்டுள்ளது..

logo
Kalki Online
kalkionline.com