ஜல்லிக்கட்டு வீரக்குட்டி!

சதீஷ்
சதீஷ்
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

என் பையன் குழந்தையாக இருக்கும்போது டிவியில் எதையாவது பார்த்தால் அதை அப்படியே செய்து பார்ப்பான். அவனுக்கு 4 வயது இருந்த போது, டிவியில்  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைப் பார்த்தான். அடுத்த நாள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த  கன்றுக்குட்டியின் வாலை முறுக்க , அது மிரண்டு இவனை முட்ட, இவன் கீழே விழ.. ஒரே அமர்க்களம். அழுது கொண்டே வீட்டிற்குள் வந்து எங்களிடம் அவன் காளையை (கன்றுக்குட்டி) அடக்கிய  வீரதீர செயலை சொன்னதும் எங்களுக்கு பயம் ஒருபக்கம். சிரிப்பு ஒரு பக்கம். நல்ல வேளையாக அது பெரியமாடு இல்லை. அதோடு விட்டானா? அது எப்படி முட்டியது, இவன் எப்படி விழுந்தான் என்று டெமோ வேறு  காட்டினான். சிரிப்பை அடக்க முடியவில்லை.

ராதிகா ரவீந்திரன், திருவான்மியூர்.

logo
Kalki Online
kalkionline.com