
உங்களை ஆச்சரியத்தின் எல்லைக்கே அழைத்துச் செல்லும் உலகின் டாப் 10 தேவாலயங்களின் மர்மமான மற்றும் வியப்பூட்டும் தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.
புனித கல்லறை தேவாலயம் (Church of the Holy Sepulchre) என்பது ஜெருசலேமில் உள்ள கிறிஸ்தவர்களின் புனிதமான, மிக முக்கியமான தேவாலயம் ஆகும். இந்த சர்ச்சை 6 கிறித்தவ பிரிவைச் சேர்ந்தவர்கள் அதை தங்களது என்று சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால்? இந்த தேவாலயத்தின் நுழைவு வாயிலின் மேலே ஒரு மர ஏணி இருக்கிறது; எவ்வளவு ஆண்டுகளாக தெரியுமா? கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கும் மேலாக! அதை யார் எடுப்பது என்று எழுந்த சர்ச்சையால் அதை யாரும் எடுக்காமல் அது இன்று வரை அங்கேயே உள்ளது. தற்போது அந்த ஏணியை ஒரு சிலுவை போல் புனிதமாக கருதும் வழக்கம் அங்கே உள்ளது.
ஸ்பெயின் நாட்டின் 'நவார்ரே' எனும் பகுதியில் உள்ளது. 'செயின்ட் ஜேம்ஸ் தி கிரேட்' சர்ச். இந்த தேவாலயத்தின் சுற்று சுவர் பகுதியில் இரண்டு குழாய்கள் உள்ளது. ஒன்றில் தண்ணீர் வரும்; மற்றொரு குழாயில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒயின் வரும். தேவாலயம் வரும் பக்தர்கள் இலவசமாக எவ்வளவு ஒயின் வேண்டுமானாலும் பருகலாம்.
இத்தாலி நாட்டில், சாரனோ என்னுமிடத்தில் 'சர்ச் ஆப் தி லேடி ஆப் மிராகிள்ஸ்' என்ற சர்ச் உள்ளது. அற்புதம் நிகழ்த்தும் அன்னையின் ஆலயமான இது எழுந்ததும் ஓர் அற்புதம் தான். இதனை கட்டியது பெட்டாட்டோ என்ற பிச்சைக்காரன் தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், நோய் தீர்த்த அன்னை மாதாவுக்கு நன்றிக்கடனாக 38 ஆண்டுகள் பிச்சை எடுத்து சேர்த்த பணத்தில் கட்டியது இது. ஆனால், அது பூர்த்தியாகியதைக் கண்டு மகிழ, அந்தப் பிச்சைக்காரன் உயிருடன் இல்லை.
முழுக்க முழுக்க பளிங்கு கற்களால் ஆன சர்ச் மற்றும் முழுக்க கண்ணாடிகளாலான சர்ச் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், முழுக்க முழுக்க ஸ்டீலால் உருவாக்கப்பட்ட சர்ச் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் அமைந்துள்ள 'சான் செபாஸ்டியன் சர்ச்' உலகிலேயே முழுக்க முழுக்க ஸ்டீலால் உருவாக்கப்பட்ட சர்ச். இந்த அதிசய சர்ச்சை சிறப்பிக்கும் வகையில் பிலிப்பைன்ஸ் அரசு 1992 ம் ஆண்டு ஸ்பெஷல் ஸ்டாம்ப் ஒன்றையும் வெளியிட்டது.
பெல்ஜியம் நாட்டின் ஆண்டர்கம் எனுமிடத்தில் உள்ளது 'செயின்ட் ஆன் மேரி' சர்ச். இது கடந்த 900 ஆண்டுகளுக்கும் மேலாக வருடத்தில் ஒரு நாள் 'புனித ஆன்' பிறந்த நாளன்று மட்டுமே பிரார்த்தனைக்காக திறக்கப்படுகிறது.
தைவான் நாட்டின் சியாபி நகரில் 'சூ' வடிவில் 55 அடி உயரத்தில், 34 அடி அகலத்தில் 4 கோடி செலவில் கட்டப்பட்ட தேவாலயம் உள்ளது. இந்த 'சூ' தேவதை கதைகளில் வரும் சின்ட்ரல்லா அணியும் சூ வடிவில் முழக்க முழுக்க நீல வண்ண கண்ணாடிகளால் அலங்காரிக்கப்பட்டு உள்ளது.
செக் குடியரசின் தலைநகரான பிரேகியூவிலிருந்து கிழக்கே 70 கிமீ தொலைவில் உள்ள செட்லெக் எனுமிடத்தில் 'போனி சர்ச்' எனும் பெயரில் ஒரு ஆச்சரியமான சர்ச் உள்ளது. இந்த ஆலயத்தின் உள்ளே உள்ள அலங்காரங்கள் அனைத்தும் மனித எலும்பு கூடுகளால் ஆனவை என்பது தான் ஆச்சரியமானது. கி.பி 1870 ம் ஆண்டு ஸ்வார்ட் சென்பெர்க் என்ற குறுநில மன்னன் 40 ஆயிரம் எலும்புக்கூடுகளை சேகரித்து, அதனைக் கொண்டு உருவான சர்ச் இது.
நியூசிலாந்து நாட்டில் ஹோபிட்ஸ் எனுமிடத்தில் ஒரு சர்ச் மரமாக வளர்கிறது என்றால் நம்புவீர்களா? ஆனால், உண்மை 2011-ம் ஆண்டு பேரி காக்ஸ் என்ற கட்டிடக்கலை நிபுணர் இரும்பு சட்டத்திலான கட்டிட அமைப்பைச் சுற்றி மரங்களை வளர்த்து அதன் கீழ் 100 அமரக்கூடிய தேவாலயத்தை உருவாக்கினார். தற்போது அது மரமாக வளரும் சர்ச் ஆகிவிட்டது. இந்த சர்ச்சை சுற்றி 3 ஏக்கர் பரப்பளவில் தோட்டம் உள்ளது.
இத்தாலி நாட்டின் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் தெரியும்; சாய்ந்த சர்ச் தெரியுமா? இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டல் நகரில் உள்ளது இந்த சாய்ந்த சர்ச். 133 அடி உயரம் கொண்ட இந்த சர்ச் இப்போது 5 அடி சாய்ந்த நிலையில் உள்ளது. 1460 ம் ஆண்டு கட்டப்பட்ட போது நிமிர்ந்து இருந்த சர்ச் இரண்டாம் உலகப் போரின் போது நாஜி விமான தாக்குதலில் இப்படி சாய்ந்து விட்டது.
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தேவாலயத்தின் பெயர் 'பிரெஞ்சு குவாட்டர்' இது 24 மணி நேரமும் திறந்தே இருக்கும். இந்த தேவாலயத்தில் காதல் ஜோடிகள் எப்போது வேண்டுமானாலும் வந்து திருமணம் செய்து கொள்ளலாம்.