150 ஆண்டுகளுக்குப் பின் திரும்பக் கிடைத்த அரிய புத்தகம்! ஜப்பானில் நள்ளிரவில் குவிந்த ரசிகர்கள்!

உலகின் இரு வேறு முனைகளில் புத்தக உலகை அதிரவைத்த விசித்திரமான சுவாரஸ்ய சம்பவங்கள்.
சுவாரஸ்ய புத்தகங்கள் - Haruki Murakami Novel
சுவாரஸ்ய புத்தகங்கள் - Haruki Murakami NovelAI Image
Updated on

150 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த “ஏதென்ஸின் தொல்பொருட்கள்” தி ஆன்டிகுவிட்டீஸ் ஆஃப் ஏதென்ஸ் The Antiquities of Athens) என்ற புத்தகம், ஆஸ்திரேலிய நூலகம் ஒன்றில் மீண்டும் கண்டெடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஆன்டிகுவிட்டீஸ் ஆஃப் ஏதென்ஸ் ' என்ற புத்தகம் கிரேக்க கட்டிடக்கலையை ஆய்வு செய்து நிக்கோலஸ் ரெவெட் மற்றும் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் என்பவர்களால் லண்டனில் 1762 ம் ஆண்டு எழுதப்பட்ட புத்தகம்.

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள கியாமா எனுமிடத்தில் பொது நூலகம் ஒன்று இயங்கி வருகிறது. 1872ஆம் ஆண்டில் இந்த நூலகம் தொடங்கப் பட்டது . அப்போது, ஒருவர் இந்த நூலகத்தில் இருந்து 'ஏதென்ஸின் தொல்பொருட்கள்' என்ற நூலைப் படிப்பதற்காக எடுத்துச்சென்றுள்ளார். ஆனால், அவர் அந்த நூலை த் திரும்பத் தரவில்லை. இந்நிலையில். அந்த புத்தகத்தை தற்போது சிம்மன்ஸ் என்பவர் 150 ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் நூலகத்தில் ஒப்படைத்துள்ளார்.

சமீபத்தில் தனது வீட்டைப் புதுப்பிக்கும்போது, ஒரு வீட்டின் சுவரில் இருந்த நெருப்பிடப் (fireplace) பெட்டிக்குள் புத்தகம் மறைந்திருந்தது. அதைக் கண்டெடுத்த சிம்மன்ஸ், 2026 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி கியாமா( Kiama Library) கடற்கரை நகர நூலகத்திற்குத் திருப்பிக் கொடுத்தார் என்று கியாமா நூலக மேலாளர் மிஷேல் ஹட்சன் கூறியுள்ளார்.

நூலக அபராதம் என கணக்கில் கொண்டால், புத்தகம் தாமதமாகத் திருப்பிக் கொடுப்பதற்கான அபராதம் சுமார் 28,000 ஆஸ்திரேலிய டாலர்களாக (19,500 அமெரிக்க டாலர்கள்) இருக்கும் என்கிறார் நூலகர். 1872-ல் நூலகம் திறக்கப்பட்டபோது நடைமுறையில் இருந்த விதிமுறைகளின் பட்டியலுடன், புத்தகத்தின் உள் அட்டையில் அச்சிடப்பட்டிருந்த, வாரத்திற்கு மூன்று பென்ஸ் என்ற பிரிட்டிஷ் தாமதக் கட்டணத்தின் அடிப்படையில் அது கணக்கிடப்பட்டது.

சுவாரஸ்ய புத்தகங்கள் - Haruki Murakami Novel
சுவாரஸ்ய புத்தகங்கள் - Haruki Murakami NovelAI Image

ஆனால், புத்தகம் பெற்ற கடைசி நபரை கண்டறிய எந்த வழியும் இல்லை , காரணம் . ஒரு புத்தகத்தை யார், எப்போது கடன் வாங்கினார்கள் என்பதைப் பதிவுசெய்த 1870-களின் நூலக நாட்குறிப்பு தொலைந்து போயிருந்ததுதான்.

பல ஆண்டுகளாக புகைபோக்கிக்கு அடியில் புத்தகம் இருந்ததால் சிறிதளவு அது சேதம் அடைந்திருந்தது , நூலகத்தின் சுமார் 1,000 புத்தகங்களைக் கொண்ட அசல் தொகுப்பில் 506-வது புத்தகமாகக் குறிக்கப்பட்டிருந்தது இது என்கிறார் நூலகர். நூலகம் திறக்கப்பட்ட சில வருடங்களுக்குள் புத்தகம் தொலைந்து போயிருக்கலாம் என்கிறார்கள்.

திருப்பியளிக்கப்பட்ட புத்தகம் நூலகத்தின் உள்ளூர் வரலாற்றுத் தொகுப்பில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. "இதை மீண்டும் வெளியே செல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்தப் புத்தகம் திரும்பக் கிடைப்பதற்காக மேலும் 150 ஆண்டுகள் காத்திருக்க நாங்கள் விரும்பவில்லை," என்று நூலகர் ஹட்சன் கூறியுள்ளார்.

ஜப்பானில் ஒரு புத்தகத்திற்காக நள்ளிரவில் குவிந்த ரசிகர்கள், அப்படி என்னதான் அதில் ஸ்பெஷல்?

டோக்கியோவில் உள்ள முக்கிய புத்தகக் கடை ஒன்றின் முன்பு, புத்தகம் விற்பனைக்கு வருவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். நள்ளிரவு 12 மணி அடித்தவுடன் புத்தகத்தை முதலில் வாங்குவதற்காக அவர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். புத்தகம் "ஜூலை 3ம் தேதி ஜப்பானில் வெளியான நிலையில், நள்ளிரவு முதலே புத்தகத்தை வாங்க ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.

இதையும் படியுங்கள்:
நம்பமுடியாத கதை: ஒரு நாய் இங்கிலாந்தை ஏன் பிளவுபடுத்தியது?
சுவாரஸ்ய புத்தகங்கள் - Haruki Murakami Novel

ஒரு புத்தகம் வாங்க இவ்வளவு கூட்டமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அப்படி என்ன புத்தகம் அது என்று பார்க்கும்போது, அது உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமி (Haruki Murakami) யின் புதிய நாவல் "The Tale of KAHO" (காஹோவின் கதை'), இந்த நாவலின் சிறப்பம்சம் என்னவென்றால், அவரது எழுத்து வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு பெண் கதாநாயகியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட முழுநீள நாவல் இதுவாகும். இதுவரை அவரது பெரும்பாலான நாவல்களில் இளைஞர்கள் அல்லது நடுத்தர வயது ஆண்களே கதாநாயகர்களாக இடம் பெற்றிருந்தனர்.

இந்த நாவலின் கதாநாயகி 26 வயதான காஹோ ஆவார். குழந்தைகளுக்கான புத்தகங்களை உருவாக்கும் எழுத்தாளரான காஹோவின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல விசித்திரமான சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. ஒரு நாள் பதிப்பக ஆசிரியர் ஏற்பாடு செய்த அறிமுக சந்திப்பில் கலந்து கொள்ளும் காஹோவிடம், ஒரு இளைஞர் "நான் பல பெண்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் உன்னைப் போன்ற அழகற்ற பெண்ணை பார்த்ததில்லை" என்று கூறுகிறார்.

இந்த வார்த்தைகளால் கோபப்படாமல், அதன் அர்த்தத்தை அறிய முயலும் காஹோவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து மர்மமான சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதுதான் புத்தகத்தின் மையக்கரு. இந்த நாவல் குறித்து ஹருகி முரகாமி கூறுகையில், "காஹோவின் மனநிலைக்குள் நானே சென்று, அவளது பார்வையில் இருந்து இந்த நாவலை எழுதினேன்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து ரசிகர் களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில், "காஹோ" என்ற சிறுகதையாக இந்தக் கதை முதன் முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோவில் உள்ள வாசேடா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வாசிப்பு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப் பட்டது. பின்னர் அது 2024 ஜூன் மாதம் Shincho இலக்கிய இதழில் வெளியானது.

இதையும் படியுங்கள்:
தண்ணீருக்கு அடியில் தலைகீழாக நிற்கும் பிரம்மாண்டக் காடு! வெனிஸ் நகரத்தின் அடியில் ஒளிந்திருக்கும் பகீர் உண்மை!
சுவாரஸ்ய புத்தகங்கள் - Haruki Murakami Novel

அதன் பிறகு இதே கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு மேலும் மூன்று கதைகளை முரகாமி எழுதியுள்ளார். இந்த நான்கு கதைகளையும் ஒருங்கிணைத்து, 352 பக்கங்கள் கொண்ட நான்கு அத்தியாயங்கள் அடங்கிய முழுநீள நாவலாக "The Tale of KAHO" தற்போது வெளியாகியுள்ளது.

இந்தத் தொகுப்பின் வழியாக உலகளவில் சுவாரஸ்ய புத்தகங்கள் மீதான மக்களின் தீராத ஈர்ப்பையும், வரலாற்றுச் சிறப்புமிக்க நூல்களின் மதிப்பையும் நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அத்துடன், புகழ்பெற்ற எழுத்தாளர் களின் படைப்புகள் எவ்வாறு வாசகர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போகின்றன என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com