கோடி கொட்டிக் கொடுத்தாலும் இந்தியாவில் போய்ப் பார்க்க முடியாத 3 இடங்கள்!

Bhabha Atomic Research Centre, North Sentinel Island, Pangong Tso
Bhabha Atomic Research Centre, North Sentinel Island, Pangong Tso
Published on

ம் இந்தியத் திருநாடு பல்வேறு மொழிகள், உணவுகள், உடைகள், மதங்கள் மற்றும் பன்முகக் கலாசாரங்களை உள்ளடக்கிய மதச்சார்பற்ற நாடாகும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல வியக்க வைக்கும் இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்டது. பழம்பெருமை கொண்ட நாடான இந்தியாவில் சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் கொட்டிக் கிடந்தாலும், இந்தியாவில் பார்வையாளர்களுக்குத் தடை செய்யப்பட்ட 3 முக்கியமான இடங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC): இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள நாட்டின் பிரதமரால் நேரடியாகக் கண்காணிக்கப்படும் முதன்மையான அணு ஆராய்ச்சி நிலையமான பாபா அணு ஆராய்ச்சி மையத்தில், பல்வேறு அணு ஆலைகள் அமைக்கப்பட்டு ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான பற்களுக்கு அவசியமான உணவுப் பழக்க வழக்கம்!
Bhabha Atomic Research Centre, North Sentinel Island, Pangong Tso

அணுக்கரு எரிபொருள் சுழற்சி, எதிர்காலத்துக்குத் தேவையான நவீன அணுக்கரு ஆற்றல் அமைப்புகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்னாற்றல், அதிநவீன தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும், மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் இந்தியாவில் பார்வையாளர்கள் தடைசெய்யப்பட்ட இடங்களில் ஒன்றாக இது உள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

2. வடக்கு சென்டினல் தீவு (North Sentinel Island): இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபர் தீவுகளில் 60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்  வடக்கு சென்டினல் தீவு அமைந்துள்ளது.  இந்தத் தீவில் சென்டினலீஸின் என அழைக்கப்படும் உள்ளூர் பழங்குடியின மக்கள்  டிவி, செல்போன், மின்சாரம் என  வெளியுலகத் தொடர்புகள் சுத்தமாக இல்லாமல் தனித்தன்மையுடன் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பழங்குடியின மக்களைப் பாதுகாக்கவும், வெளியுலகில் இருந்து அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கவும் வடக்கு சென்டினல் தீவுக்குச் செல்ல இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதையும் மீறி சட்டவிரோதமாக சென்டினலுக்கு செல்லும் வெளியாட்களை சென்டினல் மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

இதையும் படியுங்கள்:
உலகின் பழைமையான, புத்திசாலியான வளர்ப்பு மிருகங்கள் எவை தெரியுமா?
Bhabha Atomic Research Centre, North Sentinel Island, Pangong Tso

3. பாங்கோங் சோ ஏரி (Pangong Tso): ஜம்மு‍ காஷ்மீரின் லடாக்கில் லே பகுதியில் இருந்து சீன எல்லை வரை மிகப்பெரும் பரப்பளவில் பாங்கோங் சோ ஏரி அமைந்துள்ளது. பிரம்மாண்டமான இயமலையின் பின்னணியில் ஜில்லென்ற பகுதியில் இந்த ஏரியை பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். இந்த ஏரியின் சில பகுதிகள் சீன எல்லைக்கு மிக அருகில் இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பண பலம், அதிகார பலம் இவை எல்லாம் நம்மை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும் என்று நினைக்க முடியாத அளவிற்கு மேற்கூறிய மூன்று இடங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுற்றுலாப் பயணிகள் செல்ல இந்திய அரசு தடை விதித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com