கடலில் கிடைத்த பழங்காலப் பூட்டு: 4 நூற்றாண்டுகளாகப் புதைந்திருந்த ரகசியம் அம்பலம்!

வேல்ஸ் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட நானூறு ஆண்டுகள் பழங்காலப் பூட்டு ஒன்றின் ரகசியக் குறியீட்டை, நவீன மைக்ரோ சிடி ஸ்கேனிங் தொழில்நுட்பத்தின் மூலம் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பழங்காலப் பூட்டு ancient brass lock
பழங்காலப் பூட்டு ancient brass lockChatGPT Image
கிரி கணபதி

கிரி கணபதி, 8 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட எழுத்தாளர். Quora போன்ற தளங்களில் எழுதிய அனுபவம் உண்டு.. வீடியோ, பாட்காஸ்ட் வெளியிட்ட அனுபவமும், AI கருவிகளை கையாளும் திறனும் கொண்டவர். ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வுப்பூர்வமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

வேல்ஸ் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பித்தளைப் பூட்டின் ரகசியக் குறியீட்டை நவீன மைக்ரோ CT ஸ்கேனிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிபுணர்கள் வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்த மர்மம் முடிவுக்கு வந்துள்ளது.

வரலாற்றுச் சுவடுகளைச் சுமந்து வந்த கப்பல்!

ஸ்பெயினில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த 'ஆன் பிரான்சிஸ்' (Ann Francis) என்ற கப்பல், 1583ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி வீசிய கடுமையான புயலில் சிக்கி கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த பொருட்கள் வேல்ஸ் கடற்கரை மணலில் பல நூற்றாண்டுகளாகப் புதைந்து கிடந்தன. 

உலோகங்களைக் கண்டறியும் கருவியைப் பயன்படுத்தித் தேடும் பணியில் ஈடுபடும் மாஸ்டெக் பகுதியைச் சேர்ந்த 69 வயதான பீட்டர் ஹியூஸ் என்பவர், போர்ட் டால்போட்டில் உள்ள மார்கம் பகுதிக்கு அருகிலுள்ள கடற்கரையில் 1999ஆம் ஆண்டு இந்த பழங்காலப் பூட்டு ஒன்றைக் கண்டெடுத்தார்.

அவருக்கு அன்று விடுமுறை என்பதால், பொழுதுபோக்காகக் கடற்கரையில் தேடிக்கொண்டிருந்தபோது முதலில் ஒரு ஸ்பானிய வெள்ளி நாணயம் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து தேடியதில்தான் இந்தப் பூட்டும் எடைபோடும் கருவிகளும் கிடைத்தன. மதிப்புமிக்க ஆவணங்கள் அல்லது துணிகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியைப் பாதுகாக்க இது பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என நம்பப்பட்டது.

ரகசியக் குறியீட்டை உடைத்த தொழில்நுட்பம்!

கடந்த 20 ஆண்டுகளாக இந்தப் பூட்டின் சுழல் வளையங்களைத் திருப்பிச் சரியான குறியீட்டைக் கண்டுபிடிக்க பீட்டர் ஹியூஸ் முயன்றார். ஆனால் அது சாத்தியமாகவில்லை.

பழங்காலப் பூட்டு ancient brass lock
பழங்காலப் பூட்டு ancient brass lockChatGPT Image

இதையடுத்து, கார்டிஃப் பல்கலைக்கழகப் பொறியியல் பள்ளியின் ஆராய்ச்சி உதவியாளரான டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் தலைமையிலான குழுவினர், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மைக்ரோ CT ஸ்கேனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு, அந்தப் பூட்டைத் திறப்பதற்கான ரகசியக் குறியீடு ANCE என்பதை அவர்கள் வெற்றிகரமாகக் கண்டறிந்தனர்.

இதையும் படியுங்கள்:
ஏற்காட்டில் அந்தரத்தில் தொங்கியபடி சாப்பிட ஆசையா? இந்த புது இடத்தை மிஸ் பண்ணாதீங்க!
பழங்காலப் பூட்டு ancient brass lock

இந்தப் பூட்டில் நான்கு சுழல் வளையங்களும், ஒவ்வொரு வளையத்திலும் 6 எழுத்துகளும் உள்ளன. இதன் மூலம் மொத்தம் 1,296 விதமான குறியீடுகளை உருவாக்க முடியும் என்று வேல்ஸ் தேசிய அருங்காட்சியகத்தின் மூத்த காப்பாளர் அலஸ்டேர் வில்லிஸ் விளக்கினார்.

திருடர்களைக் குழப்புவதற்காகவே பூட்டின் இரு முனைகளிலும் சுழற்ற முடியாத வகையில் நிலையான எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளைக் கடந்தாலும் இந்தப் பழங்காலப் பூட்டு இன்றும் நல்ல நிலையில் செயல்படுவதாகக் காப்பாளர்கள் தெரிவித்தனர். 

புதையல் சட்டம்!

வேல்ஸ் பகுதியில் 1996ஆம் ஆண்டின் புதையல் சட்டத்தின்படி, பழமையான பொருட்களைக் கண்டெடுத்தால் பதினான்கு நாட்களுக்குள் அரசு அதிகாரிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். கண்டெடுக்கப்பட்ட பொருள் புதையலா என்பதைப் 'புதையல் மதிப்பீட்டுக் குழு' ஆய்வு செய்து அதன் மதிப்பைத் தீர்மானிக்கும். 

இதையும் படியுங்கள்:
பாக்கெட்டில் உள்ள AGMARK, ISI, FSSAI முத்திரைகள்: எது எதைக் குறிக்கிறது தெரியுமா?
பழங்காலப் பூட்டு ancient brass lock

அதன்படி, பீட்டர் ஹியூஸ் தான் கண்டெடுத்த பொருட்களை 2017ஆம் ஆண்டு அருங்காட்சியகத்திடம் முறையாக ஒப்படைத்தார். மதிப்புமிக்க இந்தப் பித்தளைப் பூட்டு, 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்வான்சீ வாட்டர்ஃபிரண்ட் (Swansea Waterfront) அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்கு முக்கியக் காட்சிப் பொருளாக வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.