வளர்ந்து வரும் நாடுகள் தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முழுக்க முழுக்க தங்கள் குடிமக்களையும் அவர்கள் மூலம் கிடைக்கும் வரிகளையும்தான் நம்பி உள்ளது. ஆனால், சில நாடுகளில் இந்த நிலை இல்லை. உலகில் உள்ள சில நாடுகள் மிகவும் நிலையான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ளன. அதனால் இந்த நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களிடமிருந்து வரிகளை வசூலிப்பதில்லை. மக்கள் மீது வரி சுமைகளை சுமத்தாத 5 நாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE): எண்ணெய் வளத்தால் வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அந்நாட்டில் குடியிருப்பவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால் பல்வேறு பொருட்கள் சேவைகளுக்கு 5 சதவிகித மதிப்பு கூட்டப்பட்ட வரியை (VAT) மட்டும் வாங்குகிறது.
பஹாமாஸ்: மேற்கிந்திய தீவுகளின் வரி சொர்க்க நாடுகளில் பஹாமாஸ் மிகவும் தனித்துவமானது. குடியுரிமை இல்லாதவர்களுக்கும் இந்நாட்டில் வரி விலக்கு வழங்கப்படுகிறது. நிரந்தர குடியுரிமைக்கு குறைந்த பட்சம் 90 நாட்கள் தங்க வேண்டும். பத்தாண்டுகளுக்கு சொத்து உரிமை தேவை, வருமானம் பரம்பரை சொத்துக்கள், முதலீட்டு லாபங்கள், பரிசுகள் ஆகியவற்றிலிருந்து இவர்கள் வரி விலக்கு பெறுகிறார்கள்.
கத்தார்: கத்தார் ஒரு பிராந்திய வரி முறையை ஏற்றுக்கொண்ட நாடாகும். மக்களுக்கு சலுகைகள், சம்பளம், ஊதியங்கள், வருமான வரியிலிருந்து விலக்கு போன்றவற்றை அளிக்கிறது. இந்த நாடு வருமான வரி இல்லாததாகவே உள்ளது.
பஹ்ரைன்: எண்ணெய் துறையில் ஆதிக்கம் செலுத்தும் நாடான பஹ்ரைன் குடிமக்களின் தனிப்பட்ட வருமானத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளது. இந்த நாட்டில் குடியுரிமை, வசிப்பிடத்தைப் பெறுவது சவாலானது. குடியுரிமை பெற ஒரு பஹ்ரைன் நிறுவனத்தில் $270,000 முதலீடு செய்ய வேண்டும்.
வனுவாட்டு: குடிமக்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு சொர்க்கமாக விளங்கும் வனுவாட்டு அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு வருமான ஆதாரங்களில் வரி இல்லாத கொள்கையை வழங்குகிறது. நிறுவனங்களின் லாபங்களுக்கு இருபது ஆண்டு வரிவிலக்கு அளிக்கின்றன. குடிமக்கள் தனிப்பட்ட வரி வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டியதில்லை. ஆனால், நிரந்தர குடியிருப்பாளர்களாக மாறும்போது வரி அனுமதிச் சான்றிதழைப் பெற வேண்டும்.
டொமினிகா: வருமான வரி இல்லாத நாடுகளின் பட்டியலில் டொமினிகா மற்றொரு நாடாகும். இந்த நாட்டில் கார்ப்பரேட் அல்லது எஸ்டேட் வரிகள் எதுவும் இல்லை. மேலும், பரிசுகள், பரம்பரைச் சொத்துக்கள் மற்றும் வெளி நாட்டில் ஈட்டப்படும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை.