700 ஆண்டுகளாக எரிமலை வாயிலில் வீற்றிருக்கும் அதிசய விநாயகர்!

இந்தோனேசியாவின் செயலில் உள்ள எரிமலையில் உள்ள பழமையான பிள்ளையார் சிலையின் பின்னணியில் இருக்கும் விசித்திர நம்பிக்கை!
விநாயகர் சிலை - Mount Bromo Ganesha
விநாயகர் சிலை - Mount Bromo Ganesha
Updated on

ந்தோனேசியாவின் ப்ரோமோ டெங்கர் செமெரு தேசியப் பூங்காவில் உள்ள ப்ரோமோ எரிமலையின் விளிம்பில், 700 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை அமைந்துள்ளது. பிரம்மாவின் பெயரிலிருந்து வந்த ப்ரோமோ மலையை புனிதமாகக் கருதும் டெங்கர் பழங்குடியினர், எரிமலை அமைதிக்காக பிள்ளையாரை வழிபடுகின்றனர். பிள்ளையார் சதுர்த்தி அன்று பழம், பூ, இனிப்புகளுடன் எரிமலையின் வாயிலில் நன்றி விழா நடத்துவது இவர்களின் மரபாகும்.

நம் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலுமே அதிக அளவில் பிள்ளையார் கோவில்களை பார்க்கலாம். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பிள்ளையார் சதுர்த்தி விழாவை 10 நாட்களுக்கு மிக விமரிசையாகவே கொண்டாடுவார்கள். அது மட்டுமில்லாமல் நம்முடைய இந்து கலாச்சாரத்தில் முதன்மை தெய்வமாக திகழ்பவர் இந்த பிள்ளையார்.

அப்படிபட்ட முதன்மை வாய்ந்த இந்த பிள்ளையாரின் சிலை ஒன்று இந்தோனேஷியாவில் ஒரு எரிமலையின் வாயிலில் உள்ளது.. உங்களுக்குத் தெரியுமா?? ஆம், இந்தோனேசியாவில் உள்ள ப்ரோமோ மலையில் 700 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான விநாயகர் சிலை ஒன்று உள்ளது. எரிமலை வெடிப்புகளிலிருந்து விநாயகர் தங்களைக் காப்பதாக இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.

இந்தோனேசியாவில் உள்ள 141 எரிமலைகளில், 130 எரிமலைகள் இன்றளவும் செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றுதான் ப்ரோமோ மலை. கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ப்ரோமோ டெங்கர் செமெரு தேசியப் பூங்காவில் அமைந்துள்ள, ப்ரோமோ மலையில் பிள்ளையிர் சிலை ஒன்று உள்ளது. இங்குள்ள உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, இந்தச் சிலையானது கிட்டத்தட்ட 700 ஆண்டுகளாக அங்கு இருந்து வருகிறது.

இந்த சிலை, அங்குள்ள டெங்கர் பழங்குடியினரால் நிறுவப்பட்டு, இன்றளவும் மக்கள் அவரை வழிபட்டு வருகிறார்கள்.

விநாயகர் சிலை - Mount Bromo Ganesha
விநாயகர் சிலை - Mount Bromo GaneshaImage credit - Gemini

பொதுவாகவே இந்தோனேசியா என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது, அங்குள்ள அழகான கடற்கரைகள், எரிமலை மற்றும் பழைமையான கோவில்கள். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தோனேசியாவின் அடர்ந்த காடுகளுக்குள் உலகையே வியப்பில் ஆழ்த்தக் கூடிய விஷயம் இந்த பிள்ளையார் சிலைதான். இந்த சிலை, கடந்த 700 ஆண்டுகளாக, ஒரு பயங்கரமான எரிமலையின் வாயில் அமர்ந்து, உலகையே காத்து வருவதாக நம்பப்படுகிறது.

இந்தோனேசியாவின் மௌன்ட் ப்ரோமோ என்கிற எரிமலை, அதன் பெயருகாகு ஏற்றவாறே பிரம்மாண்டமானது. "ப்ரோமோ" என்ற பெயர், இந்து கடவுளான பிரம்மாவின் பெயரிலிருந்து உருவானதாக கூறப்படுகிறது. இங்குள்ள மக்கள், இந்த மலையை ஒரு புனிதமான இடமாகவே கருதுகிறார்கள். இங்குள்ள டெங்கர் பழங்குடியினர், பல நூற்றாண்டுகளாகவே, இந்த பிள்ளையார் சிலையை எரிமலையின் உச்சியில் வைத்து வழிபட்டு வருகிறார்கள். இவர்கள், இந்தச் சிலை, எரிமலை வெடிப்பதை தவிர்த்து தங்களைக் காத்து வருவதாக நம்புகிறார்கள்.

மௌன்ட் ப்ரோமோவிலுள்ள இந்த சிலை, அக்னி எரிமலையின் விளிம்பில் அமர்ந்துள்ளது. 700 ஆண்டுகளுக்கு முன், இந்தப் பழங்குடியினரால் நிறுவப்பட்ட இந்தச் சிலை, வெறும் நம்பிக்கையின் சின்னம் மட்டும் அல்ல. மாறாக, இயற்கைச் சீற்றத்திலிருந்து தங்களைக் காக்க உதவும் ஒரு பாதுகாப்புக் கவசமாகவே அந்த சிலை கருதப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், பிள்ளையார் சதுர்த்தி அன்று, இந்த மக்கள் பழங்கள், பூக்கள், மற்றும் இனிப்பு வகைகளை ஒரு பிரம்மாண்டமான ஊர்வலமாக எடுத்துச் சென்று, எரிமலையின் வாயிலேயே படைக்கிறார்கள். கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதத்திலும் மேலும் எரிமலை அமைதியாக இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டும் இந்த சடங்கை நடத்துகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
எல்நினோவை உருவாக்கும் பசிபிக் பெருங்கடல் பற்றிய ஆச்சரியமூட்டும் உண்மைகள்...!
விநாயகர் சிலை - Mount Bromo Ganesha

இங்கு எப்போதாவது ஒரு வெடிப்பு ஏற்பட்டாலும் கூட, பிள்ளையாருக்கு அவர்கள் செய்யும் இந்த வழிபாடு ஒருபோதும் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

விநாயகப் பெருமானை வழிபடுவதைத் தவிர, இங்கு மலர்களும் பழங்களும் காணிக்கையாகச் செலுத்தப் படுகின்றன. அவ்வாறு செய்யாவிட்டால், எரிமலை வெடித்துவிடும் என்றும் நம்பப்படுகிறது!

இந்த அபூர்வ வரலாற்றைப் படிப்பதன் மூலம், உலகின் மிக ஆபத்தான ஒரு சூழலிலும் நமது கலாச்சார அடையாளம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதை உணர்ந்து, ஆன்மீக நம்பிக்கையும் புவியியல் அதிசயமும் இணையும் ஒரு புதிய பார்வையை நீங்கள் பெறுவீர்கள்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுடன் இயற்கையை ரசிக்க இதோ சில 'அட்வென்ச்சர்' இடங்கள்!
விநாயகர் சிலை - Mount Bromo Ganesha
logo
Kalki Online
kalkionline.com