ஆழியாறு அணை: இயற்கை எழில் கொஞ்சும் கோவை சுற்றிலா சொர்க்கத்தின் ரகசியங்கள்!

வால்பாறை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியாறு அணையின் சுற்றுலா சிறப்புகள் மற்றும் தற்போதைய சூழல் பற்றிய தொகுப்பு.
ஆழியாறு அணை - Pollachi Tourism
ஆழியாறு அணை - Pollachi Tourism
பொ.பாலாஜிகணேஷ்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

ழியாறு அணை (Aliyar Reservoir) தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி முதல் வால்பாறை சாலையில் அமைந்துள்ள ஒரு நீர்த்தேக்கமாகும். முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் வற்றாமல் பாயும் ஆழியாறு, தற்போது போதிய நீரின்றி காணப்படுகிறது. எப்பொழுதும் கடல் போலக் காட்சியளிக்கும் என்பதால் இதற்கு ஆழியார் என்று பெயரிடப்பட்டது. ஆழி என்பது கடலைக் குறிக்கும். கடல் போன்ற ஆறு என்பதாலேயே இதற்கு ஆழியாறு என்ற பெயர். இந்திய நீர் துறை தேக்கத்தின் பட்டியலில் இந்த அணையானது பெரிய அணைகளின் தொகுப்பின் கீழ் உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைகளான வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஆழியாறு அணை கோவையிலிருந்து 65 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் மூலம் கட்டி முடிக்கப்பட்ட அணை. 1962ல் தமிழக முதல்வராக இருந்த காமராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஆழியாறு அணை - Pollachi Tourism
ஆழியாறு அணை - Pollachi Tourism

ஆழியாறு அணை மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற சில ஆறுகளில் ஒன்றாகும். அங்கு உற்பத்தியாகி தமிழ்நாட்டில் வடமேற்கு திசையில் சீறிப் பாய்ந்து கேரள மாநிலம் சென்று அங்கு பாரதபுழா ஆற்றில் கலக்கிறது. ஆழியாறு அணைக்கு மேல் நவமலை மின் நிலையம் வழியேயும் பரம்பிக்குளம் அணையிலிருந்து கால்வாய் மூலமாகவும் நீர்வரத்து வரும் வண்ணம் உள்ளது. அதிகபட்ச நீர்வரத்து ஆண்டின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆகும். அம்பராம்பாளையம் தர்கா ஆழியாற்றின் கரையில் உள்ளது. மூன்று புறமும் மலைகள் சூழ்ந்துள்ளது.

ஆழியாறு அணையை சுற்றிலும் உள்ள சுற்றுலா தலங்கள்:

படகு சவாரி: உல்லாசப் படகுப் பயண வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நன்கு பயிற்சி பெற்ற படகு ஓட்டிகளால் படகு சவாரி இயக்கப்படுகிறது. சவாரி செய்யும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் சவாரி சென்று வருகின்றனர். இங்கு மனமகிழ்விற்காக பூங்கா, மீன் காட்சியகம் முதலியன தமிழ்நாடு மீன்வளத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஆழியாறு அணை - Pollachi Tourism
ஆழியாறு அணை - Pollachi Tourism

குரங்கு அருவி: இந்த அணையின் அருகில் சற்றே மலையேறினால் குரங்கு அருவி என்றழைக்கப்படும் சிறு அருவி உள்ளது. இந்த அருவியானது மூலிகை நீர் போல மிகவும் தெளிவாக வந்து விழுகிறது. சோதனை சாவடியில் நுழைவு சீட்டு பெற்று அருவிக்குச் சென்று நீராடி வரலாம்.

இதையும் படியுங்கள்:
இந்த குணாதிசயங்கள் உங்களிடம் இருந்தால் உங்களுக்கு IQ லெவல் அதிகம்னு அர்த்தம்!
ஆழியாறு அணை - Pollachi Tourism

மயிலாடுதுறை ஆறு: மயிலாடுதுறை கோட்டூர் உட்பகுதிக்கு உட்பட்டதாகும். இதை சிறிய அருவி என்றும் அழைப்பார்கள். இதன் இயற்கை அழகும் தென்னத்தோப்பின் சூழலும் ஆகும். மழை காலங்களில் இந்த ஆற்றில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்படும். காரணம், அதிக நீர்வரத்து மற்றும் சுழல் ஆகும். நிறைய மக்கள் விடுமுறை தினங்களில் வந்து நிரம்பி விடுவார்கள்.

இந்தத் தொகுப்பைப் படிப்பதன் மூலம் ஆழியாறு அணையின் வரலாற்றுப் பின்னணி, அங்குள்ள படகு சவாரி, குரங்கு அருவி மற்றும் மயிலாடுதுறை ஆறு போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதற்கான சிறந்த நேரம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு உங்கள் விடுமுறைப் பயணத்தைச் சிறப்பாகத் திட்டமிட முடியும்.

logo
Kalki Online
kalkionline.com