கிரேக்க புராணங்கள், அவற்றில் வருகின்ற பண்டைய கிரேக்க கடவுள்கள், படிப்பதற்கு சுவையானவை. மேற்கத்திய நாகரிகத்தில் இன்றும் இவர்கள் போற்றப்படுகிறார்கள். ஹோமர் எழுதிய கிரேக்க காவியங்களான இலியாத், மற்றும் ஒடிசி அதனுடைய நடை, வீரர்களின் சாகசங்கள் ஆகியவற்றால் இன்றும் விரும்பிப் படிக்கின்ற புத்தகங்கள் எனலாம். இன்றும் கிரேக்க கடவுள்கள் சினிமா, புத்தகங்கள், கம்ப்யூடர் விளையாட்டுகள் என்று பலவாறான விதத்தில் அறியப்படுகின்றனர்.
முதலில் தோன்றிய கிரேக்க கடவுள்கள் டைடன்ஸ் என்று அறியப்பட்டனர். அவர்களுக்குப் பிறந்தவர்கள் 12 கடவுள்கள். இந்த கடவுள்கள் ஒலிம்பியன்ஸ் எனப்படுவர். கிரீஸ் நாட்டின் உயர்ந்த மலையான ஒலிம்பஸ் மலையின் மேல் மேகங்களின் இடையில் பெரிய மாளிகையில் இந்த கிரேக்க தெய்வங்கள் வசிக்கிறார்கள். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு அரிதான சக்தி உண்டு. தெய்வங்கள் அழிவற்றவர்கள். ஆகவே அவர்கள் எப்போதும் வாழ்கிறார்கள்.
கடவுளர்கள் எல்லோருக்கும் தலைவர். க்ரோனாஸ் மற்றும் ரியாவிற்குப் பிறந்தவர். வான வெளியின் அரசர். பிரபஞ்சத்தை ஆள்பவர். உலகில் நடந்து கொண்டிருப்பதையும், மனிதர்களையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவர். சில சமயங்களில் அவர்களின் வாழ்வில் குறுக்கிடுவார். ஒற்றைக் கண் அரக்கன் அவரிடம் பயமுறுத்தும் ஆயுதம் கொடுத்துள்ளான். கோபம் வரும் போது, அதை உபயோகிக்க இடி, மின்னல் உருவாகின்றன. இவருக்கு பல மனைவிகள், பல காதலிகள் மற்றும் குழந்தைகள்.
இவருக்கு ரோமானியர்கள் வைத்த பெயர் ஜூபிடர்.
ஜீயஸின் எழு மனைவிகளில் ஒருவர். ஹேரா, ஜீயஸின் சகோதரியும் கூட. பெண்கள் பாதுகாப்பு, திருமணம் ஆகியவற்றிற்கான கடவுள். பேரழகி என்று அறியப்படுபவள். ஆகையால், அதீத கர்வம், பொறாமை கொண்டவள்.
ரோமானியர்கள் வைத்த பெயர் ஜூனோ.
ஜீயஸின் சகோதரர். சமுத்திரங்கள் மற்றும் நதிகளின் அரசர். பூகம்பம் உருவாக்குபவர். திரிசூலத்தைக் கையிலெடுத்துக் கடலில் பலத்த புயலை உருவாக்குபவர். 'பூமியை குலுக்குபவர்' என்ற பட்டப் பெயர் உண்டு. ஜீயஸைப் போலவே இவரும் பெண் பித்தர். இவருக்கும் பெண் தெய்வங்கள், தேவதைகள், உலகப் பெண்கள் என்று பல காதலிகள்.
ரோமனியர்கள் வைத்த பெயர் நெப்ட்யூன்.
காதல், அழகு ஆகியவற்றிற்கானப் பெண் தெய்வம். பேரழகி. காதலர்களுக்கும், குழந்தைப் பிறப்பின் போது பெண்களுக்கும் உதவி செய்யும் தெய்வம். கடவுள் ஹெபைஸ்டாசின் மனைவி. ஆனால், அரேஸ் என்ற கடவுள் மீது காதல் கொண்டு, இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள்.
ரோமானியர்கள் வைத்த பெயர் வீனஸ்
கிரேக்க கடவுள்களில் கைவினைக் கலைஞன். பல இயந்திரங்களை உருவாக்கியவன். உலகின் முதல் ரோபோ உருவாக்கியதாக அறியப்படுகிறார். ஒலிம்பஸ் மலையில் கடவுளர்கள் வாழும் மாளிகைகளை வடிவமைத்தவன். அழகு தேவதை அப்ரோடைட் மனைவி. இருந்தாலும் மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாதவன். கொல்லன் மற்றும் கைவினைக் கலைஞர்களின் பாதுகாவலன்.
ரோமானியர்கள் வைத்த பெயர் வல்கன்
ஜீயஸ் மற்றும் ஹேராவின் மகன். ஹெபைஸ்டாஸின் சகோதரன். இன்றைய கால சினிமாக்களில் அதிகம் வருகின்ற கிரேக்க கடவுள். இரத்த வெறி பிடித்து போருக்கு ஊக்கமளிக்கும் கடவுள். அப்ரோடைட்டின் காதலன்.
ரோமானியர்கள் வைத்த பெயர் மார்ஸ்.
இவர்கள் இருவரும் சகோதர, சகோதரிகள். ஜீயஸ் மற்றும் லேடோவிற்கு பிறந்தவர்கள். ஜீயஸின் மனைவி ஹேராவிற்குப் பயந்து , லேடோ, டெலோஸ் என்ற தீவில் தங்கி, அங்கு இந்த குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.
அப்பல்லோ சூரியன், வெளிச்சம், உண்மை, சங்கீதம் ஆகியவற்றிற்கானக கடவுள். கிரேக்க புராணங்களில் டெல்பியில் உள்ள அப்பல்லோவின் கோவில் முக்கியமானது. இதனை அமைத்தவர் அப்பல்லோ. இந்தக் கோவிலுக்கு கிரேக்கர்கள் குறி கேட்கச் செல்வார்கள். அப்பல்லோ, ஆர்ட்டெமிஸ் இருவருமே சிறந்த வில்லாளிகள். அப்பல்லோவின் பெயரை ரோமானியர்கள் மாற்றவில்லை.
சந்திரன் மற்றும் வேட்டையாடுதலுக்கான பெண் கடவுள். இளம் பெண்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாக்கும் தெய்வம் ஆர்ட்டெமிஸ். புராணங்களில், தன்னைச் சேர்ந்த தேவதைகளுடன், காட்டில் வேட்டையாடி மகிழும் தெய்வமாக புராணங்களில் சித்தரிக்கப்படுகிறார்.
ரோமானியர்கள் வைத்த பெயர் டையானா.
பூமிக் கடவுள். இயற்கை மற்றும் தாவரங்களுக்கான பெண் தெய்வம். மனிதர்களுக்கு உணவு படைக்கும் கடவுள்.
ரோமானியர்கள் வைத்த பெயர் செரிஸ்.
ஜீயஸ் மற்றும் மெடிஸ் என்ற டைடானின் மகள். ஆதீனா – ஜீயஸ் மற்றும் மெடிஸ் என்ற டைடானின் மகள். ஜீயஸ் தலையிலிருந்து, ஆயுதங்கள் அணிந்து முழு உருவமாகப் பிறந்தவள். புத்தி சாதுரியத்துடன் போர் அணுக உதவி செய்யும் பெண் தெய்வம். மற்றும் அறிவிற்கானக் கடவுள். இந்தக் கடவுள் பெயரால் ஏதென்ஸ் நகரம் உருவானது.
ரோமானியர்கள் வைத்த பெயர் மினர்வா
கிரேக்க கடவுளர்களின் செய்திகளை எடுத்துச் செல்லும் தூதர். அதிர்ஷ்ட தேவதை என்று சொல்லப்படுபவர். திருடர்களுக்கான காக்கும் கடவுள். அவருடைய கால் செருப்புகளில் சிறிய இறகுகள் இருக்கும். இறந்தவர்கள், பாதாள லோகம் செல்லும் போது, அவர்களுடன் கூட செல்பவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில், கிரேக்க அரசு, தபால் தலைகளில் இவருடைய உருவத்தைப் பொறித்தது.
மது, நடனம் மற்றும் கருவுறுதலுக்கான கடவுள். மற்ற கடவுளர்கள் இவருடன் நெருக்கமாக இருப்பதில்லை. மதுவைக் கண்டு பிடித்து, மனித குலத்துக்கு அளித்த கடவுள் இவர். நாடகங்களை ஆரம்பித்து வைத்தவர். பண்டைய கிரேக்க நாடகங்கள் இவருக்கு அர்ப்பணிக்கப்பட்டன. இவர், இரவு நேரங்களில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் பாச்சிக் என்ற நடன வகையை உண்டாக்கியதாகக் கூறுவர்.
ரோமானியர்கள் வைத்த பெயர் பாக்கஸ்.