
பூனை, ஒட்டகம், குரங்கு, குதிரை மற்றும் மாடுகள் போன்ற உயிரினங்களுகாக உலகில் பல இடங்களில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இவை எங்கெங்கே நடத்தப்படுகின்றன என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
தாய்லாந்தில் குரங்குகளுக்காக நடத்தப்படும் விருந்து
தாய்லாந்தில் லோப்புரி என்ற இடத்தில் வாழும் மக்கள் குரங்குகளை அதிர்ஷ்டமாக கருதுகிறார்கள். குரங்குகளுக்காக ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பெரிய விருந்து வைக்கிறார்கள். பலவித உணவுகளை வைத்து குரங்குகள் தானே சாப்பிடும்படியாக பஃபேஃ முறையில் விருந்து தரப்படுகிறது. மக்கள் குரங்குகளை அனுமானாகக் கருதுகிறார்கள்.
சோமனோமாவோய் திருவிழா - ஜப்பான் (Somanomaoi festival)
ஜப்பானில் சோமா என்ற இனத்தைச் சேர்ந்தவர்களால் இத்திருவிழா குதிரைகளுக்காக நடத்தப்படுகிறது. மூன்று நாட்கள் நூற்றுக் கணக்கானபேர் தெருவில் குதிரை சவாரி செல்வார்கள். கடைசி நாளன்று நொமகாகே என்ற சடங்கு நடத்தப்படும். இதில் சோமா மக்கள் வெள்ளை உடை அணிந்து குதிரைகளை பிடித்து அவைகளை புனிதமாக்கி தங்கள் ஊர் கோவிலான ஷிண்டோவிற்கு பாதுகாப்பிற்காக கொடுத்துவிடுவார்கள். சமீபகாலமாக பெண்களுமாக அதிக அளவில் இத்திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள்.
சான் ஃபெர்மின் காளைகள் ஓட்டம் ஸ்பெயின்
ஸ்பெயினில் காளைகளை ஓடவிட்டு மக்களும் அதனுடன் சேர்ந்து ஓடுவார்கள். இந்த காளை ஓட்டத்தின் போது வெள்ளை உடை மாற்றும் சிவப்பு ஸ்கார்ஃப் மற்றும் பெல்ட் அணிந்து ஓடுவார்கள். காளை ஓட்டத்தை மிக விமரிசையாக நடத்துவார்கள்.
கட்டன் ஸ்டோட் பெல்ஜியம் (Kattenstoet)
பெல்ஜியத்தில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பூனைகளுக்காக கட்டன் ஸ்டோட் என்ற திருவிழா நடத்தப் படுகிறது. இந்த திருவிழாவின் போது க்ளாஸ் ஹால் எனுமிடத்திலிருந்து பெரிய ராட்க்ஷச பொம்மலாட்ட பூனை ஊர்வலம் இடம்பெறும். மேலும் பொம்மை பூனைகளை தூக்கி எறிவார்கள். இதன் மூலம் கெட்ட சக்திகள் விரட்டப்படுவதாக நம்பப்படுகிறது. பூனைகளை கௌரவிக்க இத் திருவிழா நடத்தப்படுகிறது
ஒட்டகத் திருவிழா (புஷ்கர்)
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புஷ்கரில் ஒவ்வொரு கார்த்திகை பௌர்ணமியில் ஒட்டகத் திருவிழா நடத்தப்படுகிறது. ஒட்டகங்கள் மிக நன்றாக அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக செல்லும். ஒட்டக ரேசும் நடத்தப்படுகிறது.
பறவைகள் திருவிழா சிலி
சிலி நாட்டில் சுமார் 500வகை பறவைகள் உள்ளன. இந்த திருவிழா 2008ல் பறவை ஆர்வலர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டது. பறவைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இது நடத்தப்படுகிறது.
மாடுகள் திருவிழா - ஸ்விட்சர்லாந்து
கோடைகாலத்தில் விவசாயிகள் தங்கள் பசுக்களை ஆல்பைன் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அவைகளை மணிகள் மற்றும் மலர்களால் நன்கு அலங்கரிப்பார்கள். செப்டம்பர் மாதம் இது நடைபெறும்.
நாய் திருவிழா கானடா
2003ம் ஆண்டிலிருந்து தென் அமெரிக்காவில் நாய் திருவிழா நடத்தப்படுகிறது. கானடாவின் வுட்பைன் பார்க்கில் குழுமியில் இது நடத்தப்படுகிறது. நாய்களுக்கு ஃபேஷன் ஷோ,போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு செப்டம்பர் மாதம் நடைபெறும்.