கம்பீரமாக கர்ஜிக்கக்கூடிய குரல் வளம் கொண்ட 10 விலங்குகள்!

Animals with majestic voices
Animals with majestic voices
Published on

ழமான கடற்பகுதி மற்றும் மழைக் காடுகளின் உட்பகுதிகளிலும் வாழ்ந்து வரும் சில வகை விலங்குகள் அதிர்வலைகளை உண்டுபண்ணக்கூடிய அட்டகாசமான குரல் வளம் கொண்டுள்ளன. அதைக் கொண்டு அவை என்ன காரணத்திற்காக எப்போதெல்லாம் கர்ஜிக்கின்றன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. ப்ளூ வேல் (Blue Whale): உலகிலேயே மிகப்பெரிய விலங்கு. இதன் குரலும் ஓங்கி ஒலிக்கக் கூடியது. இது குறைந்த ஃபிரிகுவன்சி கொண்ட அழைப்புகளை உண்டுபண்ணும். அவை 188 dB (டெசிபல்) வரை சென்றடைந்து கடலுக்குள் நூற்றுக்கணக்கான மைல்கள் வரை செய்தியை பரவச் செய்யும்.

2. டைகர் பிஸ்டல் ஷிரிம்ப் (Tiger pistol Shrimp): இந்த சிறிய கடல்வாழ் 'ஓட்டுடலி' 200 டெசிபலில் குரல் எழுப்பி, உடனே தனது பெரிய சைஸ்ஸிலான கூர்மையான நகங்களை உள்ளிழுத்து மறைத்துக்கொள்ளும். இது உணவாக உட்கொள்ளும் சிறிய வகை மீன்கள், இதன் குரல் உண்டாக்கிய அதிர்வலைகளினாலும், மின்னல் போல் இந்த ஷிரிம்ப் உண்டாக்கிய வெளிச்சத்தினாலும் அதிர்ச்சிக்குள்ளாகி அப்படியே நின்று விடும்.

இதையும் படியுங்கள்:
பண்டைய கால பிரபுக்களின் செல்லப் பறவை: வியக்க வைக்கும் மைனாக்கள்!
Animals with majestic voices

3. ஸ்பெர்ம் வேல் (Sperm Whale): உரத்த குரலில் சப்தமெழுப்பி இரை பிடிப்பதில் சாம்பியன் இது. 230 டெசிபலில் அதிர்வலைகளை மீண்டும் மீண்டும் நீருக்குள் உண்டுபண்ணி ஆழ் கடலில் மீன்களை வேட்டையாடும் திமிங்கலம் இது.

4. ஹௌலர் மங்கி (Howler Monkey): மழைக் காட்டுப் பகுதியின் குரல் வளம் மிக்க அரசன். 140 டெசிபலில் குரலெழுப்பும் திறன் கொண்டது. இதன் ஊளையிடும் சத்தம், தனித்துவமான அமைப்பு கொண்ட தொண்டை எலும்பின் உதவியால் அதிகரிக்கப்பட்டு, பசுமையான இலைத் திரள் நிறைந்த வனப்பகுதி முழுவதும் எதிரொலிக்கும்.

5. கிரேட்டர் புல்டாக் பேட் (Greater Bulldog Bat): இரவு நேரங்களில்,140 டெசிபலுக்கும் அதிகமான சத்தத்தை உண்டுபண்ணி மீன்களை வேட்டையாடி பசியைத் தணித்துக் கொள்ளும். இது எழுப்பும் ஒலி மனிதர்களுக்குக் கேட்பதில்லை. ஆனாலும், அது வசிக்குமிடத்து சுற்றுப்புறம் முழுக்க துல்லியமாகக் கேட்கும் அந்த ஓசை.

Animals with majestic voices
Animals with majestic voices

6. காகாபோ (Kakapo): பறக்க முடியாத, இரவில் நடமாடும், அபூர்வமானதொரு கிளி இனத்தைச் சேர்ந்த பறவையிது. இது துணையை கவர்வதற்காக, 132 டெசிபலில் குரலை உயர்த்தி கூவும் குணம் கொண்டது. இதன் சத்தம் நியூஸிலாந்தின் காடுகளுக்குள் ஊடுருவி மைல் கணக்கில் செல்லக் கூடியது. இதன் நெஞ்சுப் பகுதியில் உள்ள சுருங்கி விரியக்கூடிய காற்றறைகளே இதற்கு உச்சபட்ச தொனியில் குரலெழுப்ப உதவுகின்றன.

7. சிங்கம் (Lion): சாவன்னாவின் பரந்தவெளி காடுகளில் 114 டெசிபலில் கர்ஜிக்கக் கூடியது சிங்கம். தனது கர்ஜனை மூலமே தனக்கு உணவாகக்கூடிய பிற விலங்குகளை அச்சமூட்டி செயலற்று நிற்கச் செய்யும் பெருமை கொண்டது சிங்கம்.

இதையும் படியுங்கள்:
மழையில் இத்தனை வகைகளா? மழை பற்றி உங்களுக்குத் தெரியாத உண்மைகள்!
Animals with majestic voices

8. கிரீன் குரோசெர் சிகாடாஸ் (Green grocer cicadas): இந்தப் பூச்சியும் தனது துணையை கவர்வதற்கு 120 டெசிபலில் குரலெழுப்பி சத்தம் போடக் கூடியது. இப்பூச்சியின் நெளிந்த வெளிப்புற எலும்பு ஒலிகளை உருவாக்கவும், பல கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒலி பரவவும் உதவி புரிகிறது.

9. ஓநாய் (Wolf): பரந்து விரிந்த நிலப்பரப்புகளில் 115 டெசிபலில் குரலெடுத்து ஊளையிடும் ஓநாய். இதன் குரல் 50 சதுர மைல் அளவு பரவக் கூடியது.

10. வாட்டர் போட்மேன் (Water Boatman): இந்தப் பூச்சியின் குரல் வளம் 99 dB மட்டுமே. இதன் உடல் அளவுக்கு இதுவே போதுமானது. இது தனது பிறப்புறுப்பின் அருகில் உள்ள உடல் பாகங்களை அடி வயிற்றில் தேய்த்துக் கொண்டு குரல் எழுப்புவது ஆச்சரியப்பட வைக்கும். நதிக்கரையின் ஓரத்திலிருந்தும் இதன் சத்தத்தைக் கேட்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com