மனித குலத்தை உருவாக்கியது வேற்றுகிரகவாசிகளா... அனுனாகி ரகசியங்களின் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

anunnaki-secrets
anunnaki-secrets
Published on

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த சுமேரிய நாகரிகம் இன்றும் விஞ்ஞானிகளுக்கே ஒரு பெரிய புதிராகத்தான் இருந்து வருகிறது. அந்த சுமேரியர்களின் பழங்கால களிமண் பலகைகளில் வரையப்பட்ட ஒரு விசித்திரமான தெய்வக் கூட்டம் தான் அனுனாகி (Anunnaki) என அழைக்கப்படுகிறது. 

இவர்கள் வெறும் புராணக் கடவுள்களா அல்லது வேறு கிரகத்தில் இருந்து வந்த அதிநவீன வேற்றுகிரகவாசிகளா என்ற விவாதம் இன்றும் இணையத்தில் சூடாக நடந்து கொண்டிருக்கிறது. மனித வரலாற்றையே தலைகீழாகப் புரட்டிப் போடும் இந்த அனுனாகி பற்றிய சில மர்மமான உண்மைகளை இந்தப் பதிவில்.

கடவுள்களின் வருகை!

பண்டைய மெசபடோமியா அதாவது இன்றைய ஈராக் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தான் இந்த அனுனாகிகளை தங்களின் முழுமுதற் கடவுள்களாக வழிபட்டனர். சுமேரிய மொழியில் 'அனுனாகி' என்றால் அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது வானத்தில் இருந்து பூமிக்கு வந்தவர்கள் என்று அர்த்தம் சொல்லப்படுகிறது. சுமேரியர்களின் தொன்மையான புராணக் கதைகளின்படி, வானத்தின் கடவுளான 'அனு' மற்றும் பூமியின் கடவுளான 'கி' ஆகிய இருவருக்கும் பிறந்த குழந்தைகள் தான் இந்த அனுனாகிகள். 

தொடக்கக் காலத்தில் இவர்கள் தான் மனிதர்களுக்கு விவசாயம், சட்டம், அறிவியல், பிரம்மாண்டமான கட்டிடக்கலை மற்றும் எழுத்து முறைகளை கற்றுக் கொடுத்ததாக அந்த பழங்கால கல்வெட்டுகள் தெளிவாகக் கூறுகின்றன. காடுகளில் சுற்றித் திரிந்த ஒரு சாதாரண மனிதன் எப்படி திடீரென ஒரு அறிவார்ந்த நாகரிகமான வாழ்க்கைக்கு மாறினான் என்பதற்கு எந்த ஒரு சரியான வரலாற்றுப் பதிவுகளும் இல்லை. அந்த ஒரு பெரிய இடைவெளியை இந்த அனுனாகி கதைகள் தான் கச்சிதமாக நிரப்புகின்றன.

மறைக்கப்பட்ட ரகசியங்கள்!

பழங்கால வரலாறு ஒரு பக்கம் இருந்தாலும், இவர்களைப் பற்றிய சில ரகசிய கோட்பாடுகள் அதிரடியானவை. செக்காரியா சிட்சின் என்ற புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் இவர்களைப் பற்றி ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். அவரது அதிரடியான ஆய்வின்படி, அனுனாகிகள் என்பவர்கள் 'நிபிரு' என்ற ஒரு மர்மமான கிரகத்தில் இருந்து நமது பூமிக்கு வந்த வேற்றுகிரகவாசிகள். 

இதையும் படியுங்கள்:
கண்ணாடி கிரகத்தின் கவலை!
anunnaki-secrets

தங்களின் கிரகத்தின் வளிமண்டலத்தை காப்பாற்ற அவர்களுக்கு மிக அதிக அளவு தங்கம் தேவைப்பட்டதாம். அதற்காக ஆப்பிரிக்க சுரங்கங்களில் தங்கம் வெட்டி எடுப்பதற்காகவே அவர்கள் பூமிக்கு வந்தார்கள். தங்களுக்குப் பதிலாக அந்த கடினமான வேலைகளைச் செய்ய, பூமியில் அப்போது வாழ்ந்த மனிதக் குரங்குகளின் DNA-வை மாற்றி அமைத்து, இன்றைய அறிவார்ந்த மனித குலத்தை அவர்கள் தான் தங்களின் வேலைக்காரர்களாக உருவாக்கினார்கள் என்று அவர் அடித்துச் சொல்கிறார். 

இது கேட்பதற்கு ஏதோ ஒரு ஹாலிவுட் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் போல இருந்தாலும், உலகெங்கிலும் உள்ள பல லட்சம் மக்கள் இதை இன்றும் தீவிரமாக நம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த அனுனாகி என்பவர்கள் சுமேரிய மனிதர்களின் கற்பனையில் உதித்த வெறும் பழங்காலக் கடவுள்களா அல்லது உண்மையாகவே பூமியில் வந்து இறங்கிய வேற்றுகிரக மாமனிதர்களா என்பது இன்னும் யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மனிதர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு மிகச் சிறந்த வானியல் மற்றும் அறிவியல் அறிவை நமது முன்னோர்கள் பெற்றிருந்தார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத ஒரு மாபெரும் உண்மை. 

இதையும் படியுங்கள்:
சிங்கப்பூர் போறீங்களா? அப்படின்னா இந்த 7 விஷயத்தை கண்டிப்பா செய்யாதீங்க!
anunnaki-secrets

இந்த பரந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனியாக இல்லை என்பதை இந்த பழங்கால வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com