
இந்தியாவின் மேற்கு மாநிலமான கேரளாவில் ஓணம் காலத்தில் நடைபெறும் ஆரன்முலா படகு திருவிழா மிகவும் பழமையானது. இது கேரள மாநிலத்தில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலுக்கு அருகில் உள்ள 'ஆரன்முலா' என்ற இடத்தில் நடைபெறுகிறது.
பாம்புப் படகுகள்
பாம்புப் படகுகள் ஜோடிகளாக முழு தொண்டையுடன் பாடும் கூச்சலிடும் தாளத்திற்கு ஏற்ப படகு நகரும்.1972 ஆம் ஆண்டில் பாம்புப் படகுப்பந்தயங்களும் திருவிழாவின் நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டன. எனவே, ஆரன்முலா படகு பந்தயம் என்று பெயர் பெற்றது.
பாம்பு படகு பந்தயங்களைக் காண பம்பா நதிக்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். 2019-ம் ஆண்டில் 52 பாம்புப் படகுகள் அல்லது பள்ளி ஓடங்கள் முதல் உலகில் பங்கேற்றனர். துடுப்பு வீரர்கள் வஞ்சிப்பட்டு பாரம்பரிய படகுப் பாடல்களை பாடுவார்கள்.
வெள்ளை முண்டு, தலைப்பாகைகளை அணிந்து படகை ஓட்டுவார்கள். படகின் தலைப்பகுதியில் உள்ள தங்கச் சரிகை, கொடி மற்றும் மையத்தில் அலங்காரக் குடை ஆகியவை ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியாக நடக்கும்.
பள்ளியோடங்கள் படகுகள் சிறப்புகள்
பள்ளியோடங்கள் ஆரன்முளாவின் தனித்துவமான பாம்பு படங்கள் ஆகும். இதை பக்தர்கள் மிகவும் பயபக்தியுடன் வைத்திருக்கிறார்கள். படகை தெய்வீகமாக கருதுகின்றனர். இந்த பள்ளியோடங்கள் பம்பா நதிக்கரையில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்தவை.
முதல் பள்ளியோடம் படகு ஆரன்முலாவிற்கு அருகில் அமைந்துள்ள இடம் நெரும்பராயர் கரவால் கட்டப்பட்டது. ஒவ்வொரு பள்ளியோடத்திலும் பொதுவாக நாலு தலைக்கவசக்காரர்கள், படகோட்டிகள் மற்றும் பாடகர்கள் இருப்பார்கள். இது தங்க ஜரிகையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒரு கொடி மட்டும் இரண்டு அல்லது மூன்று அலங்கார குடைகள் இருக்கும் ஒவ்வொன்றிலும்.
கட்டுமானம்
அஞ்சலி போன்ற பொருத்தமான மரத்தை கண்டுபிடித்து, அதை வெட்டி கட்டுமானத்திற்காக இடத்திற்கு கொண்டு வருவது முதல் படியாகும்.
இந்தப் படகுகள் சுமார் 100 முதல் 138 அடி நீளம் கொண்டவை. பின்புறம் சுமார் 20 அடி உயரம் வரை உயர்ந்து நீண்ட குறுகலான முன் பகுதியுடன் உள்ளன.
இது ஒரு பாம்பை ஒத்திருக்கிறது. இதன் மேலோடு துல்லியமாக 83 அடி நீளம் ஆறு அங்குலம் கொண்ட பலகைகளால் கட்டப்பட்டுள்ளது.
படகு பராமரிப்பு
ஒவ்வொரு ஆண்டும் படகுகளில் மரத்தை வலுவாகவும், படகு தண்ணீரில் வழுக்கும் தன்மையுடன் வைத்திருக்க மீன் எண்ணெய், தேங்காய் ஓடு, கார்பன் ஆகியவற்றால் எண்ணெய் பூசப்படுகிறது. கிராமத்தைச் சேர்ந்த தச்சர் ஆண்டு தோறும் பழுது பார்ப்பார்.
மேலும் மக்கள் தங்கள் படகில் பெருமையுடன் சவாரி செய்வார்கள். இது அவர்களின் கிராமத்தில் மிகவும் பிரசித்தப் பெற்றது. கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே படகில் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். வெள்ளை இடுப்புத் துணி, தலைப்பாகை, மட்டுமே உண்டு. சட்டை, காலணிகள் அணியக்கூடாது.
படகின் நடுவில் உள்ள மேடையில் நின்று முக்கிய பாடகர் வஞ்சிப்பாட்டுக்கு தலைமை தாங்குவார். ஒரு சில பாடகர்கள் பிரதான தலைவருடன் இருப்பார்கள். மற்றவர்கள் தொடுப்பு வீரர்களுக்கு இடையில் நடுவில் நிற்பார்கள்.
திருவோணம்
திருவோண நாளில் கேரள மக்கள் ஒரு விருந்துடன் இதனை கொண்டாடுகிறார்கள். காட்டூரில் இருந்து திருவோண தோணி சிறப்பு படகுகள் வருவதன் மூலம் ஆரன்முலா கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. ஆரன்முலாவில் இறைவனுக்கு எப்போதும் பெரிய விளக்குடன் கூடிய படகு மாலை 6 மணிக்கு ஆரன்முலாவில் உள்ள கோவில் இருந்து புறப்படும். அதிகாலை 4 மணிக்குள் ஆரன்முலா கோவிலை அடையும்.
மாலை 6 மணிக்கு நீண்ட பிரதான துடுப்பு காட்டூரில் உள்ள கோவிலுக்கு வழங்கப்படும். பின் முன்னணி வீரரிடம் ஒப்படைக்கப்படும் பின் ஆரன்முலாவில் தொடங்கும் படகு நீரோட்டத்தின் வேகத்திற்கு ஏற்ப மிதக்கும்.
திருவோண தோணியை வரவேற்க ஆற்றில் ஏற்றப்பட்ட விளக்குகளை மிதக்க விடுவார்கள். திருவோணத்தோணியை பாதுகாக்க பள்ளியோடங்கள் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. எனவே, திருவோண நாளில் அதிகாலையில் இந்த பள்ளியோடங்கள் அனைத்தும் திருவோண தோணியுடன் சேர்ந்து வரும். பார்க்க பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இது கேரளாவில் மிகவும் பழமையான மரபு மற்றும் பாரம்பரியங்களில் ஒன்றாகும்.
இது ஒரு விளையாட்டு மட்டுமல்லாமல் கேரளாவின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் ஒரு கலை வடிவமாகவும் கருதப்படுகிறது. இந்த போட்டியானது உலக அளவில் மிகவும் பிரபலமானதாக உள்ளது. கேரளா தவிர வேறு எங்கும் இப்போட்டியை காண இயலாது.