

ஆப்கானிஸ்தானில் மகன்கள் இல்லாத சில குடும்பங்கள் தங்களது ஒரு மகளை பையனாக நடத்தும் ஒரு நடைமுறையினை, ‘பச்சா போசு’ (Bacha Posh) என்கின்றனர்.
பச்சா போசு என்பதற்கு, 'ஒரு பையனாக உடையணிந்து' என்பது பொருள். இது அக்குழந்தைக்குத் தன்னுடைய சகோதரிகளைப் பொதுவெளியில் அழைத்துச் செல்வது, அவர்களுடன் வேலை செய்தல், சுதந்திரமாக நடந்து கொள்ளவது போன்றவற்றுக்கு உதவுகிறது.
இந்த நடைமுறை குறைந்தது ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் நடைமுறையில் உள்ளது. போர்க்காலங்களில் பெண்கள் போராட அல்லது தங்களைப் பாதுகாக்க ஆண்களாக மாறுவேடமிட்டதிலிருந்து இவ்வழக்கம் தொடங்கியிருக்கலாம் என்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில், குடும்பப் பெயரைத் தொடரவும், தந்தையின் சொத்தை வாரிசாகப் பெறவும் குடும்பங்களுக்குச் சமூக அழுத்தம் உள்ளது. ஒரு மகன் இல்லாத நிலையில், குடும்பங்கள் தங்கள் மகள்களில் ஒருவரை ஆணாக அலங்கரித்துக் கொள்கின்றனர். சிலர் இவ்வாறு செய்வதால், ஒரு தாய் அடுத்தடுத்த கருவுறுவதில் ஒரு மகனைப் பெற்றெடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.
ஒரு ஆண் குழந்தையாக வாழும் பெண், சிறப்பான ஆண் ஆடைகளை அணிந்து, தன்னுடைய தலைமுடியைக் குறைத்துக் கொண்டு, ஆண் பெயரைப் பயன்படுத்துவார். இந்த நடைமுறையின் நோக்கம் ஏமாற்றுதல் அல்ல. ஆசிரியர்கள் அல்லது குடும்ப நண்பர்கள் போன்ற பலரும், இவ்வாறான குழந்தை உண்மையில் ஒரு பெண் என்பதை அறிந்திருப்பார்கள். அவளுடையக் குடும்பத்தில், அவள் ஒரு இடைநிலைச் சிறப்பினைப் பெறுவாள். அதில் அவள் ஒரு மகளாகவோ அல்லது முழுமையாக ஒரு மகனாகவோ கருதப்படுவதில்லை. ஆனால், அவள் மற்றப் பெண்களைப் போல சமைக்கவோ, சுத்தம் செய்யவோத் தேவையில்லை.
ஒரு பச்சாவாக, ஒரு பெண் பள்ளிக்குச் செல்லவும், சிறு சிறு வேலைகளை செய்யவும், பொதுவில் சுதந்திரமாகச் செல்லவும், ஆண் தோழன் இல்லாமல் இருக்க முடியாத இடங்களில் தனது சகோதரிகளை அழைத்துச் செல்லவும், விளையாட்டு விளையாடவும், வேலை தேடவும் மிகவும் எளிதாக இருக்கின்றன.
ஒரு பச்சா போசு என்ற பெண்ணின் நிலை, பொதுவாகப் பருவமடையும் போது முடிவடைகிறது. இவ்வாறான நாகரிகத்தில் வளர்க்கப்படும் பெண்கள் பெரும்பாலும் ஒரு சிறுவனாக வாழ்க்கையிலிருந்து மாறுவதும் ஆப்கானிஸ்த்தான் சமூகத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட பாரம்பரிய தடைகளுக்கு ஏற்ப மாறுவதிலும் சிரமப்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் இருக்கத்தான் செய்கிறது.
வரலாற்றாசிரியர் நான்சி தூப்ரீ த நியூயார்க் டைம்ஸின் நிருபரிடம், அபீபுல்லா கான் ஆட்சியின் போது 1900 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்த புகைப்படத்தை நினைவு கூர்ந்தார். அதில், ஆண்களின் ஆடை அணிந்த பெண்கள் மன்னனின் அரண்மனையைப் பாதுகாத்தனர். ஏனெனில், அதிகாரப்பூர்வமாக, குடும்பத்தின் பெண் உறுப்பினர்கள் தங்கும் அரண்மனையைப் பெண்களால் பாதுகாக்க முடியாது. பிரிவினை படைப்பாற்றலுக்கு அழைப்பு விடுகிறது. இவ்வாறான குழந்தைகள் மிகவும் அற்புதமான சமாளிக்கும் திறனைக் கொண்டுள்ளனர்.
வளர்ச்சி மற்றும் மருத்துவ உளவியலாளர் தயான் எரென்சாஃப்ட் என்பவர், பெண் குழந்தைகள் சிறுவர்களைப் போல நடந்து கொள்வதன் மூலம், பச்சா போசு எனும் அவர்களின் உண்மையான பாலின அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால், பெற்றோரின் நம்பிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இணங்குவதாகக் கருதுகிறார். பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு மிதிவண்டி ஓட்டுதல், கால்பந்து, துடுப்பாட்டம் விளையாடுதல் போன்ற சலுகைகளை வழங்குவதை மேற்கோள் காட்டுகிறார்கள். இல்லையெனில் பெண்களுக்கு இந்தச் சலுகைகள் அந்த நாட்டில் கிடைக்காது என்கின்றனர். இந்த நடைமுறை பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் இருக்கிறது.