நினைவாற்றலை வளர்க்கும் "Encoding Effect": கையால் எழுதுபவர்கள் புத்திசாலிகளா?

encoding-effect-tamil
encoding-effect-tamil
Updated on

“என்ன ஆன்டி, என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்டவாறு உள்ளே நுழைந்தாள் சுபா.

“மளிகைக் கடையில் சாமான் வாங்க வேண்டும், அதான் லிஸ்ட் எழுதிட்டு இருக்கேன்,” என்றாள் ரேணு.

அதை கேட்ட சுபா, “ஆண்டி, நீங்க இன்னும் அந்தக் காலத்தில்தான் இருக்கீங்க! உங்க ஸ்மார்ட்போன்ல எல்லா options-ம் இருக்கே. அப்புறம் ஏன் இப்படி சிரமப்படுறீங்க?” என்றாள்.

சுபா, காகிதத்தில் ஷாப்பிங் லிஸ்ட் எழுதுவது பழமையான பழக்கம் இல்லை. அது மூளைக்கு ஒரு பயிற்சி மாதிரி. நாம் கையால் எழுதும்போது என்ன வாங்கணும் என்று யோசிக்கிறோம், நினைவில் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறோம், கவனம் அதிகரிக்கிறது.

மொபைலில் டைப் செய்வது சுலபம்தான். ஆனால் அது நினைவாற்றலை அதிகமாக பயன்படுத்த வைக்காது. உனக்கு “Encoding Effect” பற்றி கொஞ்சம் சொல்றேன், தெரிந்துகொள்.

Encoding Effect

“Encoding Effect” என்பது என்ன?

நாம் கையால் எழுதும்போது, நம்முடைய மூளை தகவலை சும்மா பதிவு செய்யாது. அது அதை புரிந்து, வடிகட்டி, அர்த்தமுள்ளதாக மாற்றி சேமிக்கும். அதாவது, கையால் எழுதும்போது, நாம் என்ன எழுதுறோம் என்று யோசிக்கிறோம். முக்கியமானதை தேர்வு செய்கிறோம்.

அதை நம்முடைய சொற்களில் மாற்றுகிறோம். இதனால் அந்த தகவல் மூளையில் ஆழமாக பதியும். ஆனா டைப்பிங் பண்ணும்போது:

நாம் வேகமாக டைப் பண்ணுவோம். அதிகமாக copy மாதிரி எழுதுவோம். ஆழமாக யோசிக்க வாய்ப்பு குறையும்.

அதனால் அந்த தகவல் நினைவில் நீண்ட நேரம் நிலைக்காது.

கையால் எழுதுவது = புரிந்து நினைவில் வைப்பது

டைப்பிங் = பார்த்ததை பதிவு செய்வது மட்டும்

அதனால்தான், கையால் எழுதுவது இன்னும் “பழைய பழக்கம்” இல்லை. அது ஒரு மூளை வளர்க்கும் ஸ்மார்ட் வழி.

இதையும் படியுங்கள்:
இந்தியாவை உலகின் முதன்மை பால் உற்பத்தியாளராக மாற்றியது எப்படி?
encoding-effect-tamil

நாம் கையால் எழுதும்போது, தகவலை சும்மா பதிவு செய்யாமல், அதை யோசித்து, சுருக்கி, நம் சொற்களில் மாற்றி எழுதுகிறோம். இதனால் நினைவாற்றலும் புரிதலும் அதிகரிக்கிறது. கண், கை, மூளை மூன்றும் ஒரே நேரத்தில் செயல்படுவதால், அந்த தகவல் மூளையில் ஆழமாக பதிகிறது. இதை “Encoding Effect” என்று சொல்வார்கள் — அதாவது, தகவல் ஆழமாக சேமிக்கப்படுவது.

மாறாக, போனில் அல்லது லேப்டாப்பில் டைப் செய்வது வேகமாகவும் சுலபமாகவும் இருக்கும். ஆனால் அதில் நாம் பெரும்பாலும் யோசிக்காமல் copy செய்வோம்; அதனால் தகவல் நினைவில் நீண்ட நேரம் நிலைக்காது. காகிதத்தில் எழுதுவது நம்மை மெதுவாக செயல்படச் செய்து, கவனத்தையும் அதிகரிக்கிறது.

கையால் எழுதுவது பழமையான பழக்கம் அல்ல; அது மூளைக்கு ஒரு முக்கியமான பயிற்சி. அதனால், கையால் எழுதுபவர் பழமையானவர் அல்ல — அவர் தனது மூளையை சிறப்பாக செயல்படச் செய்கிறவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com