பரதநாட்டியத்தில் ஒளிந்திருக்கும் கணிதம் - வெளிநாட்டினர் வியக்கும் ரகசியம்!

Bharatanatyam
BharatanatyamImg credit: AI Image
Published on

பாரம்பரிய கலைகளில் இந்தியாவுக்கு தனி இடம் உண்டு. அவற்றில் உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஒரு நடனக்கலைதான் பரதநாட்டியம். தமிழகத்தில் தோன்றிய இந்த பாரம்பரிய நடனம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ளது. பலர் இதை வெறும் கலை அல்லது பக்தி வழிபாட்டின் ஒரு வடிவமாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் பரதநாட்டியத்தின் ஒவ்வொரு அசைவிலும் அறிவியல், உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த பல ஆழமான கருத்துகள் மறைந்திருக்கின்றன.

பரதநாட்டியம் மிகவும் பழமையான கலை வடிவமாகும். இந்த நடனத்தின் அடிப்படை விதிகள் 'நாட்டிய சாஸ்திர' என்ற நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த நூலை பரதமுனி என்ற முனிவர் எழுதியதாக கருதப்படுகிறது. கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை இந்த நூல் உருவானதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நூலில் நடனம், நாடகம், இசை, முகபாவங்கள், உடல் அசைவுகள் போன்றவற்றின் அறிவியல் அடிப்படைகள் விளக்கப்பட்டுள்ளன.

பரதநாட்டியத்தின் அடிப்படை நிலை 'அரமண்டி' என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் கால் மடக்கி உடலை சமநிலையில் வைத்திருக்க வேண்டும். இது உடலின் தசைகள், முதுகெலும்பு மற்றும் முழங்கால்களுக்கு நல்ல பயிற்சியாகும்.

மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, பரதநாட்டியம் தொடர்ந்து பயிற்சி செய்வதால் உடலின் தசைகள் வலுப் பெறுகின்றன. உடல் சமநிலை மேம்படுகிறது. மேலும் இதய ஆரோக்கியத்துக்கும் இது உதவுகிறது. இதனால் சில உடற்பயிற்சி நிபுணர்கள் பரதநாட்டியத்தை முழு உடல் பயிற்சியாகவே கருதுகிறார்கள்.

பரதநாட்டியத்தில் 'முத்திரைகள்' என்று அழைக்கப்படும் கை சைகைகள் மிகவும் முக்கியமானவை. ஒரே சைகைகளை பயன்படுத்தி பல பொருள்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியும்.

ஹஸ்த முத்திரை எனப்படும் இந்த சைகைகள் யோகாவில் பயன்படுத்தப்படும் முத்திரைகளுடன் பொருந்துகின்றன. சில ஆராய்ச்சிகளின்படி, கை விரல்களின் குறிப்பிட்ட அமைப்புகள் நரம்பு மண்டலத்தை தூண்டி மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் பரதநாட்டியத்தில் பயன்படுத்தப்படும் சைகைகள் உடல் மற்றும் மனதை ஒரே நேரத்தில் செயல்படுத்தும் ஒரு அறிவியல் முறையாக பார்க்கப்படுகிறது.

மேலும், பரதநாட்டியத்தில் 'அபிநயம்' எனப்படும் முகபாவங்களும் கண் அசைவுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் மகிழ்ச்சி, கோபம், சோகம், ஆச்சரியம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தேசியக் கொடிகளும், தீர்க்கப்படாத ஊதா நிற மர்மமும்!
Bharatanatyam

இது மனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் திறனை அதிகரிக்கிறது. உளவியல் நிபுணர்களின் கருத்துப்படி, இப்படியான பயிற்சிகள் உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் மனநலத்திற்கு உதவுகின்றன.

அதனால்தான் பல வெளிநாட்டு கலை ஆராய்ச்சியாளர்கள் பரதநாட்டியத்தை 'Emotional intelligence training' என்ற ஒரு பயிற்சியாகக் கூட விவரிக்கிறார்கள்.

பரதநாட்டியத்தில் இசை மற்றும் தாளம் மிக முக்கியமானவை. நடன அசைவுகள் அனைத்தும் குறிப்பிட்ட கணித ரீதியான தாள அமைப்பில் நடைபெறும்.

இந்த தாள அமைப்புகள் 'Tala' என அழைக்கப்படுகின்றன. 3, 4, 5, 7, 9 போன்ற பல வகையான கணித அடிப்படையிலான தாளங்களில் நடனம் அமைக்கப் படுகிறது.

இதிலிருந்து பரதநாட்டியம் கலை மட்டுமல்ல; இசை, கணிதம் மற்றும் உடல் இயக்கம் என பல பரிமாணங்களைக் கொண்டது.

இதையும் படியுங்கள்:
கிரேக்க கடவுள்களின் தலைவனாக சியுஸ் (Zeus) எப்படி மாறினார்... இதோ அந்த பிரம்மாண்டமான வரலாறு!
Bharatanatyam

அதோடு, பரதநாட்டியம் உலகின் பல நாடுகளில் இன்று கற்பிக்கப்படுகிறது. பல வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த கலை வடிவத்தை ஆராய்ந்து அதன் பின்னால் இருக்கும் அறிவியல் மற்றும் தத்துவத்தை கண்டறிந்து வருகின்றனர்.

ஒரே ஒரு கலை வடிவத்தில் உடற்பயிற்சி, உளவியல், கணிதம், இசை, ஆன்மீகம் போன்ற பல துறைகள் ஒன்றாக இணைந்திருப்பது மிகவும் அரிது. இதுவே பரதநாட்டியத்தை உலகின் மிக ஆழமான கலை வடிவங்களில் ஒன்றாக மாற்றுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com