பீகாரின் பாரம்பரிய சுஜனி எம்பிராய்டரி: பழைய துணிகளுக்கு உயிர் கொடுக்கும் கலை!

sujani-embroidery
sujani-embroidery
Updated on

பீகாரில் பழைய வேஷ்டிகள், பழைய புடவைகளை ஒன்றாக சேர்த்து அதில்  அதில் கையால் செய்யப்படும் எம்பிராய்டரியே சுஜனி எம்பிராய்டரி என அழைக்கப்படுகிறது.  இந்த கை எம்பிராய்டரி மூலமாக  மக்களின் வாழ்க்கை முறையை அறிய முடிகிறது. நவநாகரீக உலகில் இந்த பாரம்பரிய சுஜனி   எம்பிராய்டரி வேலைப்பாடு என்பது புதிய அவதாரமாக எடுத்துள்ளது. இதன் தனித்தன்மை மற்றும் அழகிய டிசைன்கள் கிராமத்திற்கு மட்டுமே சோந்தமாக இருந்த ஒன்று உலக அளவில் பிரபலப்படுத்தப் பட்டுள்ளது. இந்த வேலைப்பாடு தற்போது பல இடங்களில் இடம் பெற்று வருகிறது.

சுற்றி எம்பிராய்டரியில் ரன்னிங் stich  எனப்படும் ஓட்டுத்தையல் மிக அழகாக  கலை நுணுக்கத்துடன் சேர்க்கப்படுகிறது. பறவைகள், மிருகங்கள், மரங்கள், கடவுள் உருவங்கள், மற்றும் கிராம மக்களின் உருவங்கள் அழகிய கைவேலைப்பாடில் உருவாக்கப் படுகின்றன.

முன்பெல்லாம் கிராம மக்கள் தங்கள் நிலைப்பாட்டை தெரியப்படுத்த இந்த கைவேலையை செய்து வந்தார்கள்.  அவர்களுடைய கவலை, துயரம், மகிழ்ச்சி மற்றும் எதிர்ப்பு போன்ற உணர்ச்சிகளை சுஜனி எம்பிராய்டரி கைவேலை மூலம் தெரியப்படுத்தினார்கள்.

இப்போது உலக அரங்கில் இந்த சுஜனி வேலைப்பாட்டிற்கு அதிக மதிப்பு ஏற்பட்டுள்ளதால்  இன்னமும் ஆர்வத்தோடு புதுமையை புகுத்துகிறார்கள்‌. பழைய புடவைகள், பழைய காட்டன் துணிகள்  ஆகியவற்றைச் சேர்த்து அதை மெத்தையாக தயாரித்து அதில் சுஜனி வேலைப்பாட்டை சேர்கிறார்கள். இதனால்  பழைய துணிகள் புதிய உருவைப் பெற்று கண்ணைக் கவரும் வகையில் மாறுகிறது. இந்தரீ சைக்லிங் மூலம் பீகார் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது‌. சுஜனி பழமையான கைவேலை என்றாலும் பழையவற்றை புதிதாக்குவதில் முக்கிய பங்கை  ஆற்றுகிறது.

பீகார் மக்களின் விடாமுயற்சியே சுஜனி பிரபலமாவதற்குக் காரணமாகிறது.  ஜஸ்லீன் என்ற பெண்மணியின் தீவிர முயற்சி மூலம்  கிராமமக்களின் திறமையை உலக அரங்கில் எடுத்துச் செல்ல முடிந்தது‌. இந்த பெண்மணியால் கிராமத்தின் திறமை தேசிய அளவில் தெரிய வந்துள்ளது. 

இதையும் படியுங்கள்:
மூர் மார்க்கெட் முதல் பட்டாணி சுண்டல் வரை... மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!
sujani-embroidery

தற்போது பல இடங்களில் சுஜனி டெக்ஸ்டைல்ஸ் உள்ளது. பல அமைப்புகளும் மற்றும் கூட்டுறவு சொசைடிகளும்  இந்த கைவேலை எம்பிராய்டரியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் மற்றும் அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் தருகிறது.‌ ஒரு இடத்தில் மட்டுமே இருந்த இது தற்போது  பல பொருட்காட்சிகள், காலெரிகள் மற்றும் சர்வதேச அளவிலும் பிரபலமானதாக விளஙகிவருகிறது.

தற்போது இளைய தலைமுறை டிசைனர்கள் நேரடியாக தொழிலாளர்களுடன்  பேசி ஈடுபட்டு இந்த சுஜனி வேலைப்பாடைமேம்படுத்தி வருகிறார்கள்.‌ கிராம் மக்களின் வேரான இந்த சுஜனி எம்பிராய்டரி கைவேலை நவீன நாகரீக உலகிலும் இடம்பெற்று முக்கியத்துவம் அடைந்து வருகிறது. சமீபத்தில் ஒரு விழாவில் நீதா அம்பானி அவர்கள்  சுஜனி பகல் புரி சில்க் சேலை அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது‌.

பீகாரின் பூஸ்ரா கிராமத்தில் இந்த சுஜனி வேலைப்பாடு ஆரம்பமானது.  தற்போதுகிராம் மக்கள் இந்த  கைவேலைப்பாடு  பிரபலமானதால் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆர்வமுடன் இதில் ஈடுபடுகிறார்கள்.‌

logo
Kalki Online
kalkionline.com