பித்தளை vs வெண்கலம்: உங்கள் வீட்டு பூஜை அறைக்கு எந்தச் சிலை அதிர்ஷ்டம் தரும்?

Bronze Statues - வெண்கலச் சிலைகள்
Bronze Statues - வெண்கலச் சிலைகள்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

பாரம்பரிய பித்தளை சிலைகள் (Brass) மற்றும் வெண்கல சிலைகள் (Bronze) இந்தியக் கலை, கலாச்சாரம் மற்றும் ஆன்மீக மரபில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை இரண்டும் பார்ப்பதற்கு உலோக சிலைகளாக இருந்தாலும் அவற்றின் கலவை, தயாரிப்பு முறை, பயன்பாடு மற்றும் விலையில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. பாரம்பரிய பித்தளை மற்றும் வெண்கல சிலைகள் பழங்கால "மெழுகு இழந்த முறை" மூலம் கையால் வடிவமைக்கப்படும் கலை பொக்கிஷங்களாகும்.

பித்தளை, செம்பு (copper) மற்றும் துத்தநாகம் (zinc) ஆகிய உலோகங்களின் கலவையாகும். இது இயற்கையிலேயே தங்கம் போன்ற பளபளப்பான மஞ்சள் நிறத்தைக் கொண்டிருக்கும். பித்தளை மலிவானது, எளிதில் வடிவமைக்கக் கூடியது.

பூஜை அறையில் வெண்கலச் சிலைகள் வைக்க வேண்டியதன் முக்கியத்துவம்:

வெண்கலம் செம்பு (copper), ஈயம் அல்லது தகரம் (tin) ஆகியவற்றின் கலவை ஆகும். இது மிகவும் உறுதியானது, நேர்த்தியானது மற்றும் கோவில்களில் பயன் படுத்தப்படும் 'பஞ்சலோக' சிலைகளில் முதன்மையானது. பித்தளை சிலைகள் அவற்றின் தங்க நிறம் மற்றும் மலிவு விலைக்காக வீட்டு பூஜை அறைகளுக்கு மிகவும் பிரபலமாக உள்ளன.

வெண்கல சிலைகள் அதிக வேலைப்பாடுகளுடன், நீண்ட ஆயுளுடன் இருக்கும். ஆன்மீக ரீதியாக வெண்கல சிலைகள் அதிக நேர்மறை ஆற்றலை ஈர்க்கக் கூடியவை என்று நம்பப்படுகிறது.

கோவில்களில் வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படும் உயர்தர சிலைகள் செம்பு, பித்தளை, ஈயம், வெள்ளி மற்றும் தங்கம் ஆகிய ஐந்து உலோகங்கள் சேர்ந்த 'பஞ்சலோகம்' என்ற வெண்கலக் கலவையால் செய்யப்படுகின்றன. வெண்கலம் மிகவும் வலுவானது மற்றும் நீண்ட காலம் அறியாமை இருக்கக்கூடியது. எனவேதான் கோவல்களில் உள்ள உற்சவமூர்த்திகள் மற்றும் நீண்டகால வழிபாட்டு சிலைகள் வெண்கலத்தால் செய்யப்படுகின்றன.

Bronze Statues - வெண்கலச் சிலைகள்
Bronze Statues - வெண்கலச் சிலைகள்AI Image

பித்தளை சிலைகள் பெரும்பாலும் அச்சு வார்ப்பு (Sand casting / Moulding) முறையில் விரைவாக செய்யப் படுகின்றன. இதனால் இவற்றில் நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டு வருவது எளிது. வெண்கல சிலைகள் பாரம்பரிய லாஸ்ட்-மெழுகு வார்ப்பு (Lost-Wax Casting) முறையில் செய்யப்படுகின்றன. முதலில் மெழுகில் ஒரு சிலையை செய்து, அதைச்சுற்றி களிமண் பூசி, மெழுகை உருக்கி வெளியேற்றிவிட்டு அந்த இடத்தில் உருகிய வெண்கலத்தை ஊற்றிச் செய்கிறார்கள்.

சோழர் காலத்து நடராஜர் சிலைகள் இந்த வெண்கலத் தொழில்நுட்பத்திற்கு உலகப் புகழ் பெற்றவை.

பாரம்பரிய வெண்கலச் சிலைகள் மற்றும் பித்தளை சிலைகளின் விலை வேறுபாடு:

உலோகங்கள் என்பதால் மிக நுண்ணிய வேலைப் பாடுகள், ஆபரணங்கள் மற்றும் உடலின் மென்மையான வளைவுகளை சிற்பங்களில் தத்துரூபமாக செதுக்க முடியும். கல் சிற்பங்களைவிட உடைந்தாலும் இவற்றை எளிதில் உருக்கி மறுவார்ப்பு செய்து புதிய சிலை வடிவங்களை உருவாக்கலாம். இவை இரும்பு அல்லது பிற உலோகங்களைப்போல எளிதில் துருப்பிடிக்காமல் காலத்தின் சோதனைகளைத் தாண்டி நிலைத்திருக்கக் கூடியவை.

வெண்கலச் சிலையை செய்ய பல வாரங்கள் முதல் மாதங்கள் வரை கடுமையான உழைப்பும், தனித்துவமான கைவினைத்திறனும் தேவைப்படுவதால் இதன் விலையும் அதிகம். நம் இந்திய கலாச்சாரத்தில் வெண்கல சிற்பங்கள் காலத்தால் அழியாத கலைநயத்திற்கும், ஆன்மீக அமைதிக்கும் பெயர் பெற்றவை.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டில் கர்நாடக இசைக்குள் வயலின் நுழைந்தது எப்படி? 280 கோடி சொத்தாக மாறிய உலகப் பேராச்சரியம்!
Bronze Statues - வெண்கலச் சிலைகள்

தமிழகத்தில் 9 முதல் 13ஆம் நூற்றாண்டுகளில் சோழர்கள் காலத்தில் வெண்கல சிற்பக்கலை உலகளவில் உச்சத்தை அடைந்தது. சிதம்பரம் நடராஜர் சிலை, அர்த்தநாரீஸ்வரர் மற்றும் பல்வேறு தெய்வங்களின் சிலைகள் இதற்குச் சிறந்த சான்றுகளாகும்.

பாரம்பரிய வெண்கலச் சிலைகள் தயாரிப்பதற்கான உலக புகழ் பெற்ற மையம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமி மலையில் அமைந்துள்ளது.

இங்குள்ள ஸ்தபதிகள் தலைமுறை தலைமுறையாக இந்த வெண்கல சிலை வார்ப்புக் கலையை செய்து வருகின்றனர். இந்தப் பாரம்பரிய கலைக்கு புவியியல் குறியீடு (GI tag) வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் பித்தளை உலோகமானது தங்கத்தைப் போன்ற பிரகாசமான நிறத்தை கொண்டுள்ளதால் கோவில் மணிகள், குத்து விளக்குகள், பூஜை பொருட்கள் மற்றும் வழிபாட்டு சிலைகள் போன்றவை பித்தளையில் தான் அதிகம் செய்யப்படுகின்றன.

பித்தளையின் பளபளப்பு, நேர்த்தியான வேலைப்பாடு மற்றும் மெருகூட்டல் (Polishing) ஆகியவை வீடுகளுக்கு நேர்மறை ஆற்றலையும் அழகையும் தருகின்றன. பித்தளையால் செய்யப்பட்ட கலைப்பொருட்களுக்கு பெயர் பெற்ற இடம் மதுரை மற்றும் கும்பகோணம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
அழிவின் விளிம்பில் இந்திய சர்க்கஸ்: ஒரு பொற்காலத்தின் சோகக்கதை!
Bronze Statues - வெண்கலச் சிலைகள்

வெண்கலம் மற்றும் பித்தளைச் சிற்பங்கள் என்பவை வெறும் உலோகப் பொருட்கள் அல்ல; ஆன்மீகம், அறிவியல் மற்றும் மனிதனின் கற்பனைத்திறன் இணைந்து காலத்தை வென்று நிற்கும் ஒரு உன்னதமான கலை வடிவமாகும்.

இந்தத் தொகுப்பின் மூலம் பித்தளை மற்றும் வெண்கல உலோகங்களின் உண்மையான ஆன்மீகத் தன்மைகளை உங்களால் பிரித்தறிய முடியும். போலி சிலைகளைத் தவிர்த்து, உங்கள் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலையும் கலைமதிப்பையும் அள்ளித் தரும் சரியான பாரம்பரியப் பொக்கிஷத்தை நம்பிக்கையோடு தேர்ந்தெடுக்கும் தெளிவை நீங்கள் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com