சென்னபட்னா கலைப் பொம்மைகள் உங்கள் வீட்டு கொலுவை எவ்வாறு அழகாக்கும்?

நவராத்திரி கொலுவில் மரப்பொம்மைகளின் மகத்துவம்!
சென்னபட்னா பொம்மைகள் - Channapatna Toys
சென்னபட்னா பொம்மைகள் - Channapatna Toys
மகாலெட்சுமி சுப்ரமணியன்

நான் மகாலெட்சுமி சுப்ரமணியன்.கல்கி குழுமத்தின் நெடுநாள் வாசகி.எனக்கு எழுதுவதிலும்,படிப்பதிலும் ஆர்வம் அதிகம்.வீட்டிலிருந்தே சிறிய அளவில் தோழியின் விழாக்களுக்கு கேட்டரிங் செய்து கொடுக்கிறேன்.வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்,கனிகளை சிறிய அளவில் விற்பனை செய்கிறேன்.பிசியாக என்னை வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொள்கிறேன்.

Updated on: 

நவராத்திரி என்றாலே கொலுவும், மனதை கவரும் பொம்மைகள்தான் அடையாளமே. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான பொம்மைகளும் அதன் பாரம்பரியமும் தனித்துவமாக நம்மை மனதை கவரும்.

அந்த வகையில் சென்னபட்னா பொம்மைகள் பற்றி சில தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். ஏறத்தாழ 200ஆண்டுகளுக்கும் மேலாக சென்னபட்னாவில் விதவிதமான பொம்மைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப் படுகின்றன.

இதனால் பொம்மைகளின் நகரம் என்றே இந்த ஊர் பெயர் பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலம், ராமநகரா மாவட்டத்திலிருக்கும் இந்த ஊருக்கு கொம்பெகளா ஊரு என்ற அடைமொழியே உண்டு. பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் 60கி மீ தூரத்தில் உள்ளது இந்த ஊர்.

இங்கு தயாராகும் மர பொம்மைகள் மிகவும் பிரபலமானது. பெரும்பாலும் கைகளால்தான் இவை தயாரிக்கப்படுகின்றன. இதன் சிறப்பான கைவினை நேர்த்தியால் அனைவராலும் விரும்பப் படுகிறது

பெரும்பாலான பொம்மைகள் வைப்பாலை என்னும் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆலே மரா என்ற இந்த மரத்தையும் தவிர சந்தனம், ரப்பர், தேக்கு, மா உள்ளிட்ட மரங்களிலிருந்தும் பொம்மைகள் தயாரிக்கப்படுகிறது.

தேவையான மரங்களை சேகரித்தல், அவற்றை பதப்படுத்துதல், உரிய அளவுகளில் வெட்டுதல், செதுக்குதல், பொம்மைகளை வடிவமைத்தல், வர்ணம் பூசுதல், பாலிஷ் பண்ணுதல் உள்ளிட்ட பல படிநிலைகள் பொம்மை தயாரிப்பில் நிகழ்கின்றன.

கண்ணுக்கு விருந்தாகும் வர்ணங்களை சேர்த்து இந்த பொம்மைகளுக்கு மேலும் மெருகூட்டுகின்றனர். இந்த வர்ணங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இயற்கை தாவரப் பொருள்களிலிருந்து உருவாக்கப்படுகின்றன. எனவே இவற்றை வைத்து விளையாடும் குழந்தைகளுக்கு ரசாயன சாயங்களால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் கொஞ்சமும் இருக்காது.

இதையும் படியுங்கள்:
மேட்ரியோஷ்கா பொம்மைகள், ரஷ்ய பாலே, வெங்காயக் கோபுரங்கள்: ரஷ்யாவின் காலத்தால் அழியாத கலை மரபு!
சென்னபட்னா பொம்மைகள் - Channapatna Toys

இந்த பொம்மைகள் அழகாக இருப்பதோடு கல்வி சார்ந்ததாகவும் உள்ளன. வண்ணங்கள், வடிவங்கள், விலங்குகள் மற்றும் கலாசார பன்முகத்தன்மை பற்றி குழந்தைகளுக்கு இவை கற்பிக்கின்றன.

18ம் நூற்றாண்டில் பெர்ஸியாவிலிருந்து கைவினைக் கலைஞர்களை திப்பு சுல்தான் வரவழைத்து, உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளித்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பொம்மை செய்யும் கதையானது பரம்பரையாக பரம்பரையாகத் தொடர்கிறது. அக்காலத்திலேயே கர்நாடகா மக்கள் தசராவின்போது ஒருவருக்கொருவர் அன்பின் வெளிப்பாடாக பொம்மைகளை பகிர்ந்து கொண்டதாக சான்றுகள் உள்ளன.

பின்னர் நவாஸ் மியான் என்பவர் ஜப்பானியர்களின் தொழில்நுட்பத்தை பொம்மை தயாரிப்பில் புகுத்தினார். ஒவ்வொரு பொம்மை தயாரிப்பிலிருந்து, மொத்தமாக, அதிகளவில் பொம்மைகள் இதன் மூலம் தயாராகின்றன.

இந்த பொம்மைகளை வாங்கச் செல்பவர்கள் அவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கே நேரில் சென்று பார்வையிடலாம். இணையதள ஆர்டர் பேரிலும் கிடைக்கின்றன.

சென்னபட்னா பொம்மைகள் - Channapatna Toys
சென்னபட்னா பொம்மைகள் - Channapatna Toys

இந்த பொம்மைகளுக்கு கடந்த 2006ல் புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. கர்நாடகா அரசு, நெதர்லாந்து அரசுடன் இணைந்து உள்ளூர் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கிறது. சென்னப்பட்னா பொம்மை தயாரிப்பை மேம்படுத்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கைவினைக் கலைஞர்கள் மேம்பாட்டுக் கழகம் (KHDC) உள்ளிட்ட நிறுவனங்கள், கைவினை கலைஞர்களுக்கு ஆதரவளித்து இந்த பாரம்பரிய கலையை பாதுகாக்க பலவிதங்களில் செயல்படுகின்றன. 2022ஆண்டில் பெங்களூரு கே எஸ் ஆர் ரயில்வே ஸ்டேஷனில் இந்த பொம்மைகளுக்கென்றே பிரத்யேக விற்பனையகம் ஒன்றை அமைந்திருக்கிறது.

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் சென்னப்பட்னா பொம்மைகளை அதிக அளவில் வாங்குகிறது. அவற்றை பின்தங்கிய குழந்தைகளின் கல்வி மற்றும் அறிவு சார்ந்த பொழுதுபோக்குக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு சிறப்புகள் கொண்ட சென்னப்பட்னா பொம்மைகளை வாங்கி நம் கொலுவை சிறப்பானதாக ஆக்குவோம்.

இதையும் படியுங்கள்:
Home Loan வாங்கும்முன் இந்த 10 விஷயத்தை செக் பண்ணுங்க!
சென்னபட்னா பொம்மைகள் - Channapatna Toys
logo
Kalki Online
kalkionline.com