பொருளாதார நெருக்கடி முதல் சர்வாதிகாரம் வரை... மக்கள் புரட்சிக்கு வித்திட்ட நாடுகள்!

People's strike
People Revolution
Published on

கடந்த சில ஆண்டுகளாக மக்கள் கொந்தளிப்பால் பல நாடுகளில் ஆளும் அரசாங்கங்கள் கவிழ்ந்துள்ள செய்திகளை கேள்விபட்டிருப்போம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும்; சில நாடுகளில் ஆண்டுகள் கடந்தாலும் இது இன்னும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன.

பொதுமக்களின் அதீத எழுச்சியால் சில நாடுகளில் ஆளும் அரசாங்கங்களின் வீழ்ச்சி தொடர்ச்சியாக இப்போதும் அரங்கேறுகின்றன. இந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் ஆழமான வேரூன்றிய குறைகளால் தூண்டப்படுகின்றன.

குறிப்பாக பொருளாதார நெருக்கடி, ஊழல், சர்வாதிகாரம் அல்லது ஜனநாயக பிரதிநிதித்துவம் இல்லாமை (lack of democratic representation). இப்படி 20 ஆம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், துனிசியா, சூடான், தாய்லாந்து மற்றும் பொலிவியா போன்ற நாடுகளில் மக்களே அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் கண்டுள்ளன.

நேபாளம், இலங்கை நேபாளம் அரச முடியாட்சியில் இருந்து குடியரசு வரை என்று பல காலங்களில் மக்கள் போராட்டங்களால் உந்தப்பட்டு பல அரசியல் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. சில தினங்கள் முன்னர் கூட இளைஞர்கள் தலைமையிலான இயக்கங்கள் டிஜிட்டல் தணிக்கை, ஊழல் தொடர்பான காரணங்களால் ஆளும் அரசாங்கத்தை வெளியேற்றியுள்ளன.

இதேபோல் 2022 இல் இலங்கை ஒரு வியத்தகு எழுச்சியை எதிர்கொண்டது. அங்கு குடிமக்கள் பொருளாதார சரிவின் காரணங்களால் அரசு கட்டிடங்களை முற்றுகையிட்டு, ஜனாதிபதியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தினர். இது போல் அங்கு ஆட்சி மாற்றங்கள், 1980கள் மற்றும் 1990களில் உள்நாட்டு மோதல்கள், தவறான ஆட்சி போன்ற காரணங்களால் இது போன்ற போராட்டங்கள் அப்போதே எதிரொலித்தது.

இதையும் படியுங்கள்:
நோய்களை குணமாக்கும் அதிசய தீர்த்தம் உள்ள இடம்... அர்ஜுனனே வந்து வழிபட்ட தலம்... எங்கே தெரியுமா?
People's strike

வங்காளதேசம், துனிசியா தேர்தல் மோசடி, சர்வாதிகார ஆட்சி மற்றும் பொருளாதார சமத்துவமின்மை (economic inequality) போன்ற காரணங்களால் உருவான போராட்டங்களுடன் வங்காளதேசம் இதுபோன்ற அரசியல் நிலையற்ற தன்மையின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.

குறிப்பாக சுதந்திரத்திற்குப் பிறகு அங்குள்ள அரசாங்கங்கள் பல முறை கவிழ்க்கப்பட்டுள்ளன அல்லது சீர்திருத்தங்களுக்கு தள்ளப்பட்டுள்ளன.

2011 ஆம் ஆண்டு துனிசியா (Tunisia) ஜனநாயக சீர்திருத்தங்களைக் கோரி மீண்டும் மீண்டும் அங்கு போராட்டங்கள் தலை தூக்கப்பட்டு பல அரசாங்கங்கள் சமூகத்தின் அழுத்தத்தால் கவிழ்க்கப்பட்டுள்ளன.

சூடான், தாய்லாந்து சூடான் மற்றொரு குறிப்பிடத்தக்க உதாரணம். பல தசாப்த கால சர்வாதிகாரத்திற்கு பிறகு 2019 ஆம் ஆண்டு உமர் அல்-பஷீரை (Omar al-Bashir) மக்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இது இதோடு நிறைவு பெறாமல் அடுத்தடுத்த இடைக்கால அரசாங்கங்களும் வெகுஜன மக்களின் எதிர்ப்புகளால் உறுதியற்ற தன்மையைதான் அதன்பின் தலைமையேற்ற அரசாங்கங்களும் எதிர்கொண்டன. தாய்லாந்து அடிக்கடி இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளையும், பொது ஆர்ப்பாட்டங்களையும் கண்டுள்ளது. குறிப்பாக 2006 முதல் இது அங்குள்ள அரசு மற்றும் மக்கள்வாத பிரிவுகளுக்கு இடையில் நிகழும் ஆழமான பிளவுகளை உலகிற்கு பிரதிபலிக்கிறது.

இதையும் படியுங்கள்:
இராமேஸ்வரத்திற்கு பறக்கப் போகும் வந்தே பாரத் இரயில்...! வெளியானது முக்கிய அப்டேட்..!
People's strike

இன்று இது போல் உலகின் பல்வேறு பகுதிகளில் பல காரணங்களால் மக்களிடம் தொடக்க நிலை போராட்டமாக ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. இது போன்ற சம்பவங்களை எந்த நாட்டு மக்களும் விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சியை அந்தந்த அரசாகங்கள் ஏற்படுத்தி தந்தாலே உலகம் முழுக்க ஒரு பொதுவான அரசியல் நிலைத்தன்மையை அனைவரும் காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com