மன்னராட்சியின் கீழ் செயல்படும் நாடுகள் என உலகில் பல உள்ளன. என்னதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக நாடுகள் என்று பல இருந்தாலும். ஒரு புறம் இந்த மன்னராட்சி நாடுகள் தொடர்ந்து சிறப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன. அப்படி என்ன சிறப்பம்சங்கள் அதில் உள்ளன? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
எத்தனை மன்னராட்சி நாடுகள்:
ஆசியாவில்(Asia) 13, ஐரோப்பாவில்(Europe) 12, அமெரிக்காவில்(America) 9, ஓசியானியாவில்(Oceania) 6 மற்றும் ஆப்பிரிக்காவில்(Africa) 3 உட்பட பல்வேறு கண்டங்களில் மன்னராட்சி கலாச்சாரம் பரவியுள்ளன. சவுதி அரேபியா, யுனைடெட் கிங்டம்(UK), ஜப்பான் மற்றும் புருனே போன்ற சில நாடுகள் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாகும். அங்கு மன்னர்களுக்கு என குறிப்பிடத்தக்க அதிகாரம் உள்ளது. அங்கு நிகழும் ஒவ்வொரு அரசியலமைப்பு சார்ந்த விஷயங்களில், மன்னரின் பங்கு பெரும்பாலும் பெரியளவில் இருக்கும்.
மன்னராட்சி தொடர்வதற்கான காரணங்கள்:
இந்த நாடுகளில் மன்னராட்சிகள் நீடித்திருப்பதற்கு பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம். முதலாவதாக, அந்நாடுகளின் வரலாறு மற்றும் கலாச்சாரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. . மன்னராட்சிகள் பெரும்பாலும் தேசியவாதத்தையும் அதன் தொடர்ச்சியையும் அடையாளப்படுத்துகின்றன. ஒரு நாட்டிற்கு நிலைத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் உணர்வை வழங்குகின்றன. உதாரணமாக, பிரிட்டிஷின் மன்னராட்சி முறை, அந்த நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சார, பாரம்பரியத்துடன் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளது.
இரண்டாவதாக, சவூதி அரேபியா மற்றும் புருனே போன்ற முழுமையான மன்னராட்சி உள்ள நாடுகளில், அங்குள்ள மன்னர்கள் கணிசமான அரசியல் அதிகாரத்தையும், வளங்களின் மீதான கட்டுப்பாட்டையும் வைத்திருக்கிறார்கள், இது மற்ற நிர்வாக விஷயங்களில் மறைமுகமாக இருதரப்பாக எதிரொலிக்கும். கூடுதலாக, அரசியலமைப்பு சாசனங்களில், மன்னரின் பங்கு பெரும்பாலும் அரசியல் தலையீடுகளையும் தாண்டி, இறுதி தீர்ப்பளிப்பவராக பார்க்கப்படுகிறார், இது தேசிய ஒற்றுமை மற்றும் அதன் நிலைத்தன்மையை பேணுவதில் பல நேரங்களில் நன்மையளிக்கும்.
பிற நாடுகள் ஜனநாயக அரசாங்கங்களை நோக்கி மாற காரணங்கள்:
மறுபுறம், பல நாடுகள் மன்னராட்சி ஆட்சியிலிருந்து விலகி ஜனநாயக ஆட்சிக்கு மாறிவிட்டன. இந்த மாற்றம், மக்களின் அரசியல் பங்கேற்பு, அனைவருக்கான பொறுப்பு மற்றும் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் போன்றவை பிறக்க வழிவகுத்தன. மேலும், குடிமக்கள் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்கவும், நிர்வாகச் செயல்பாட்டில் ஒரு கருத்தைக் கூறவும், இந்த ஜனநாயகங்கள் அனுமதிக்கின்றன, இது அனைவரையும் ஒன்றிணைத்து, மக்கள் பிரதிநிதித்துவ அரசாங்கங்களுக்கு வழிவகுக்கிறது.
ஜனநாயக போக்கின் பரவலால் மனித உரிமைகளை உலகளவில் நிலைநாட்டுவதற்காக செயல்படும் பல சர்வதேச அமைப்புகளின்(UNO, UNESCO, UNICEF) தலையீட்டை ஒரு நாட்டில் அனுமதிக்கின்றன. இப்படி பல விஷயங்களை அனுபவித்து வரும் ஜனநாயக நாடுகள், தங்கள் பொருளாதார மேம்பாடு, சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவம் போன்றவற்றை ஜனநாயக நிர்வாகத்தின் கீழ் வரும் நன்மைகளாக வெளிப்படுத்தி, பிற நாடுகளுக்கு முன்மாதிரியாக செயல்படுகின்றன.
இப்படி உலகின் பல்வேறு பகுதிகளில் மன்னராட்சிகள் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், மறுபுறம் ஜனநாயக ஆளுமையால், குடிமக்களின் பங்கேற்பு மற்றும் பிரதிநிதி விஷயங்களில் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசியல் அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. இறுதியில், இந்த வெவ்வேறு வகையான ஆளுமைகளின் கீழ் வாழும் உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து தரப்பு மக்களும் மக்கள் தங்கள் பாரம்பரியத்திற்கு கேற்ப தங்களை தாங்களே ஒழுங்குபடுத்தி, சந்தோஷமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.