வியட்நாம் - தாய்லாந்து இடையேயான கலாச்சார ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்

தாய்லாந்து  -  வியட்நாம்
தாய்லாந்து - வியட்நாம்
Published on

தாய்லாந்து மற்றும் வியட்நாம் இரண்டு நாடுகளும் வளமான கலாச்சார அனுபவங்களை வழங்குகின்றன. வியட்நாம் பெரும்பாலும் அதன் பழமையான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது. அதே நேரத்தில் தாய்லாந்து அதன் துடிப்பான இரவு வாழ்க்கை மற்றும் புத்த மரபுகளுக்குப் பிரபலமானது. இந்தப் பதிவில் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் பற்றிப் பார்ப்போம்.

வியட்நாம், தாய்லாந்து இடையேயான கலாச்சார ஒற்றுமைகள்:

பௌத்தம்:

இரண்டு நாடுகளின் கலாச்சாரங்களிலும் பௌத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. வியட்நாமில் பௌத்த மதத்துடன் தாவோயிசம், கன்பூசியனிசம் போன்ற சீன மதங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. தாய்லாந்தில் பௌத்தம், இந்து மதம் மற்றும் இஸ்லாம் போன்ற மதங்களை பின்பற்றும் மக்கள் இருக்கிறார்கள்.

கலாச்சாரப் பாரம்பரியம்:

இரண்டு நாட்டு மக்களும் பெரியவர்கள் மற்றும் அதிகார பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்துவதில் வலுவான முக்கியத்துவத்தை அளிக்கின்றனர். இரண்டு நாடுகளும் பல்வேறு பேரரசுகள் மற்றும் மரபுகளின் வரலாற்றுத் தாக்கங்களுடன் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. இது அவர்களின் கட்டடக்கலை திருவிழாக்கள் மற்றும் பாரம்பரிய உடைகளில் வெளிப்படுகிறது.

தெரு உணவுக் கலாச்சாரம்:

வியட்நாம் மற்றும் தாய்லாந்து இரண்டிலும் துடிப்பான தெரு உணவு கலாச்சாரம் புகழ்பெற்றது. தனித்துவமான சமையல் மரபுகளை பிரதிபலிக்கும் பல்வேறு உள்ளூர் உணவுகள் இங்கு பிரசித்தம்.

மொழி அமைப்பு:

தாய் மற்றும் வியட்நாமிய மொழிகள் இரண்டும் ஒரே மாதிரியான தொனியை கொண்டுள்ளன மற்றும் ஒத்த தொடரியல் அமைப்பையும் கொண்டுள்ளன பொருள் வினைப் பொருள் வாக்கிய அமைப்பை பயன்படுத்துகிறார்கள்.

கலாச்சார வேறுபாடுகள்:

வரலாற்றுத் தாக்கங்கள்:

வியட்நாமில் சீன, பிரெஞ்சு மற்றும் அமெரிக்க கலாச்சாரங்களின் செல்வாக்குகளுடன் கூடிய கட்டடக்கலை, உணவு வகைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவை கலந்து இருக்கின்றன. பாரம்பரிய இசை மற்றும் கையெழுத்து சீன தாக்கங்களைக் கொண்டுள்ளது. தாய்லாந்து புத்த மதத்தில் வலுவாக வேரூன்றி வளமான அரசப் பாரம்பரியத்துடன், தாய்க் கலாச்சாரம் அதிகாரம் மற்றும் முடியாட்சிக்கு மரியாதை செலுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
உலகின் அதிசய இடங்கள் - செங்குத்தாக எழுந்து நிற்கும் 24 மெடியோரா (MATEORA) பாறைகள்!
தாய்லாந்து  -  வியட்நாம்

உணவு வகைகள்:

வியட்நாம் மக்கள் புதிய சமச்சீரான உணவுகளில் கவனம் செலுத்துகிறார்கள். இவர்களின் பிரபலமான உணவுகள் மூலிகைகள் கலந்து தயாரிக்கப்படுகின்றன. தாய்லாந்து உணவுகள் இனிப்பு, புளிப்பு, உப்பு மற்றும் காரமான சுவைக்கு பெயர் பெற்றவை.

சமூகம் மற்றும் குடும்ப விழுமியங்கள்:

வியட்நாம் விருந்தோம்பலை வலியுறுத்துகிறது. இங்கே விருந்தினர்களுக்கு பல்வேறு வகையான சுவையான உணவுகளைத் தயாரித்து வழங்குகிறார்கள். தாய்லாந்தில் அதிகாரம் மற்றும் குடும்ப விழுமியங்களை மதிப்பதில் வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது. இங்கே குடும்பங்கள் ஒன்றாக வாழ்வது மிகவும் மதிக்கப்படுகிறது. பல தலைமுறைகள் பெரும்பாலும் ஒன்றாக வாழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள்:

தாய்லாந்தில் தாய் புத்தாண்டை குறிக்கும் நீர் சார்ந்த கொண்டாட்டமான சாங்க்ரான் என்ற விழா பிரசித்தம். வியட்நாமில் குடும்ப சந்திப்புகள் மற்றும் மூதாதையர் வணக்கத்துடன் டெட் சந்திரப் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

பாரம்பரிய உடைகள்:

வியட்நாமில் கால் சட்டையின் மேல் அணியும் ஒரு பாரம்பரியமான நீண்ட அங்கி குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தின் பாரம்பரிய உடைகளில் பாசின் என்கிற உடலைச் சுற்றி போர்த்தப்படும் பாவாடை போன்ற உடையும், சால்வை போன்ற ஆடையும் அடங்கும்.

நேர மேலாண்மை:

வியட்நாமியர்கள் நேரத்தை சிறப்பாக செலவழிப்பவர்களாகவும் நேர மேலாண்மையைத் துல்லியமாக கடைபிடிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். தாய்லாந்தியர் நேரத்தை மிக நிதானமான அணுகுமுறையில் கையாளுகிறார்கள். வியட்நாமியர்களைப் போல அல்லாமல் பெரும்பாலும் தங்களுக்கு ஏற்ற வகையில் நேரத்தை மிகவும் ரிலாக்ஸ்டான முறையில் செலவிடுவர். இது தாய் நேரம் என்று குறிப்பிடப்படுகிறது. இரண்டு நாடுகளுமே சுற்றிப்பார்க்க மிக அழகான நாடுகள் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

இதையும் படியுங்கள்:
அப்படி என்ன விசேஷம் இருக்கிறது இந்த அக்ஷதைக்கு?
தாய்லாந்து  -  வியட்நாம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com