கூச்சத்தை உடைத்து தன்னம்பிக்கையை உயர்த்தும் நடனம்: இளமையோடு வாழ சிறந்த வழி!

தினமும் 20 நிமிடம் நடனமாடினால் உங்கள் உடல் எடையும் மன அழுத்தமும் சட்டென்று குறையும்!
நடனம் நன்மைகள் - Dance benefits Tamil
நடனம் நன்மைகள் - Dance benefits TamilAI Image
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

டனம் என்பது வெறும் கலை அல்லது பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது உடலையும் மனதையும் ஒருங்கிணைக்கும் ஒரு சிறந்த பயிற்சி. “ஆடத் தெரிந்தவனுக்கு ஆரோக்கியம் சொந்தம்” என்பார்கள். எந்தவொரு வயதினராக இருந்தாலும், நடனமாடுவது மனித வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு நன்மைகளை அள்ளித் தருகிறது.

உடலுக்குக் கிடைக்கும் நடனம் நன்மைகள்

இதய ஆரோக்கியம்: நடனம் ஒரு சிறந்த ஏரோபிக் (Aerobic) உடற்பயிற்சி. தொடர்ந்து ஆடுவதால் இரத்த ஓட்டம் சீராகி, இதயத் துடிப்பு கட்டுக்குள் இருக்கும். இதனால் இதய நோய்கள் வரும் அபாயம் குறைகிறது. நடனம் ஆடுவதால் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி பிரகாசமான ஒளிரும் முகத்தைப் பெறலாம்.

உடல் எடை குறைப்பு: தொப்பை மற்றும் தேவையற்ற கொழுப்பைக் குறைக்க நடனம் மிகச்சிறந்த வழி. அரைமணி நேரம் தீவிரமாக நடனமாடுவதன் மூலம் 200 முதல் 400 கலோரிகள் வரை எரிக்க முடியும்.

தசைகள் மற்றும் எலும்புகளின் வலிமை: நடனத்தின் போது உடலின் அனைத்து பாகங்களும் இயங்குவதால், தசைநார்கள் வலுவடைகின்றன. எலும்புகளின் அடர்த்தி (Bone density) அதிகரித்து, வயதாகும்போது ஏற்படும் மூட்டு மற்றும் எலும்புத்தேய்மானப் பிரச்னைகள் குறைகின்றன.

உடல் சமநிலை (Balance and Flexibility): உடலை வளைத்து நெளித்து ஆடுவதால் உடலின் நளினமும், சமநிலையும் (Balance) அதிகரிக்கும். இது எதிர்பாராத தடுமாற்றங்கள் மற்றும் வீழ்ச்சிகளிலிருந்து நம்மைக் காக்கும்.

மனதுக்கும் மூளைக்கும் கிடைக்கும் நன்மைகள்

மனஅழுத்தம் நீங்குதல்: இசைக்கு ஏற்றவாறு ஆடும்போது மூளையில் எண்டார்பின் (Endorphins) என்னும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது நாள் முழுவதும் இருக்கும் மனஅழுத்தம், பதற்றம் மற்றும் சோர்வை நொடியில் பறக்கச் செய்யும். ஆடுபவர்கள் மட்டும் அல்லாமல் அந்த ஆட்டத்தை பார்த்து ரசித்து கொண்டு இருப்பவர்களின் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தையும் மறக்க செய்வதால் பார்வையாளர் களுக்கும் உதவியாக இருக்கிறோம்.

நடனம் நன்மைகள் - Dance benefits Tamil
நடனம் நன்மைகள் - Dance benefits TamilAI Image

மூளைத்திறன் மற்றும் ஞாபகசக்தி: நடன அசைவுகளை (Steps) நினைவில் வைத்து ஆடுவதால் மூளையின் நரம்பு மண்டலம் சுறுசுறுப்படைகிறது. இது ஞாபகசக்தியை அதிகரித்து, அல்சீமர் (Alzheimer’s) போன்ற மறதி நோய்கள் வராமல் தடுக்கிறது.

பெரும்பாலான நடன முறைகளில் சிறிய கணிதக் கணக்கீடுகள் உள்ளன. இதை நினைவில் கொள்வது உண்மையில் குழந்தைகளுக்கு அவர்களின் படிப்பிற்கும் உதவுகிறது.

சிறந்த தூக்கம்: மாலையிலோ அல்லது தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலோ நடனமாடினால், இரவு நேரத்தில் ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கம் கிடைக்கும்.

சமூக மற்றும் ஆளுமை வளர்ச்சி

சுயநம்பிக்கை உயரும்: மேடையிலோ அல்லது மற்றவர்கள் முன்போ நடனமாடும்போது தயக்கமும் வெட்கமும் விலகி, சுயநம்பிக்கை கூடும். யாரிடமும் தைரியமாக பேசும் ஆற்றலையும் பெறுகிறோம்.

சமூக உறவுகள் மேம்படும்: குழுவாக ஆடும்போது மற்றவர்களுடன் இணைந்து செயல்படும் திறன் (Teamwork) மற்றும் புதிய நண்பர்களைப் பெறும் வாய்ப்பு உருவாகிறது.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தத்தை விரட்டியடிக்க 20 நிமிடம் போதும்!
நடனம் நன்மைகள் - Dance benefits Tamil

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பார்கள். உடற்பயிற்சி செய்யச் சோம்பேறித்தனமாக இருக்கும் பலருக்கு, இசையோடு கூடிய நடனம் ஒரு சுவாரஸ்யமான மாற்றாக அமையும். வயது, பாலினம் எதுவாக இருந்தாலும், தினமும் ஒரு 20 முதல் 30 நிமிடங்கள் நமக்குப் பிடித்த இசைக்கு நடனமாடினால், உடலையும் மனதையும் என்றும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com