காலையில் எழுந்ததும் நம் நினைவுக்கு வரும் காபியும் செய்தித்தாளும் பிரிக்க முடியாத தோழர்கள். தொலைக்காட்சியில் நிமிடத்திற்கு ஒருமுறை பிரேக்கிங் நியூஸ் வந்தாலும், காலையில் அதை செய்தித்தாளில் படிக்கும்போது இருக்கும் சுவாரஸ்யம் அளவிட முடியாதது. அத்தகைய செய்தித்தாள்களின் அடிப்பகுதியில் பலரும் அறிந்திருக்காத நான்கு வண்ணப் புள்ளிகள் இருக்கும் அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
தினமும் நாம் படிக்கும் நியூஸ் பேப்பரின் கீழ் சிவப்பு, மஞ்சள், நீலம், கருப்பு என காணப்படும் நான்கு கலர் புள்ளிகள் ரிஜிஸ்ட்ரேஷன் மார்க்ஸ் அல்லது கிராப் மார்க்ஸ் என்று சொல்லப்படுகிறது . பேப்பரில் பயன்படுத்தும் விதவிதமான கலர்கள் சரியாகப் பொருந்தி வருகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக இதனை பயன்படுத்துகிறார்கள். மேலும், இந்தப் புள்ளிகள் சரியான கலர் பிரிண்டிங் செய்வதற்கும் கலர்கள் கலப்பதற்கும் உதவுகிறது.
இந்தக் கலர் புள்ளிகள் பிரிண்டிங் சரியான இடத்தில், சரியான டிரெக் ஷனில் நடக்கிறதா என்பதனை அறிய உதவும். இந்தப் புள்ளிகள் பிரிண்டிங்கின் முக்கியமான வேலைக்கு உதவி புரிகின்றன. இதனால் மிகச் சிறந்த குவாலிட்டியான பிரிண்டிங் கிடைக்கிறது. படிப்பவர்களுக்கு எழுத்துக்கள் சரியாகத் தெரிய உதவுவதோடு பேப்பரின் அளவு சரியாக கட் செய்யப்படுவதற்கும் கிராப் மார்க் இன்றியமையாததாக உள்ளது.
இதனால் பிரின்டிங் நடைமுறைகள் சரியாக நடப்பதோடு டிரிம் மார்க்ஸாகவும் பயன்படுகிறது. மேலும், அச்சிடப்பட்ட பேப்பரின் அளவை சரியாகத் தீர்மானிக்கிறது. இதனால் இறுதிக்கட்ட அச்சிடப்பட்ட பேப்பர் சரியாக இருக்கும். பேப்பரின் கீழே இருக்கும் நான்கு புள்ளிகளை சிஎம்ஒய்கே என்று சொல்கிறார்கள் . அதாவது சியான், மெஜந்தா, எல்லோ, கீ என்பதன் சுருக்கம் தான் இது. இதில் சியான் ஊதா கலரையும், மெஜந்தா பிங்க் கலரையும், எல்லோ மஞ்சள் கலரையும், கீ கருப்பு கலரையும் குறிக்கிறது.
சிஎம்ஒய்கே பிரிண்டிங் ப்ராசஸில் இந்த நான்கு வண்ணங்களை மிக்ஸ் பண்ணி விதவிதமான கலர்கள் பிரிண்ட் பண்ணலாம். இதனால் வேறுபட்ட வகைகளும் நல்ல தரமும் கிடைக்கிறது. இந்த நான்கு புள்ளிகளை தமிழ் பேப்பர் மட்டுமல்லாது ஆங்கிலம், ஹிந்தி என எல்லா பேப்பர்களிலும் காணலாம்.
நாம் தினந்தோறும் பயன்படுத்தும் சில பொருட்களுக்கு அல்லது அடையாளங்களுக்கு அர்த்தம் தெரியாமலேயே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதில் ஒன்றுதான் இந்த நான்கு புள்ளிகள். இனி, நான்கு புள்ளிகளைப் பார்த்தவுடன் மேலே கூறியவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.