இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் எங்குள்ளது தெரியுமா?

Do you know where the last railway station in India is?
Do you know where the last railway station in India is?
Published on

ந்திய ரயில்வே நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் அதில் பயணம் செய்கின்றனர். இந்திய ரயில்வே நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக உள்ளது. எனவே, இந்திய ரயில்வே நாட்டின் உயிர்நாடி என்றும் அழைக்கப்படுகிறது. பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு முக்கிய இடத்திலும் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் ரயில் மூலம் நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். பயணிகளுக்கு மிகவும் வசதியான வழியாக ரயில் பயணம் மாறியுள்ளது. ஆனால், இந்திய ரயில்வே பற்றி பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன. இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் எங்குள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?

நாட்டின் கடைசி முனையில் சில ரயில் நிலையங்கள் உள்ளன. அங்கிருந்து எளிதாக வெளிநாடு கூட செல்ல முடியும். ஆம், நேபாளத்திற்கு மிக அருகில் பீகாரில் ஒரு ரயில் நிலையம் உள்ளது. அதாவது, இங்கிருந்து இறங்கி நடந்தே நேபாளத்திற்கு பயணம் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
தரையை சுத்தம் செய்யும் லிக்விடுகளினால் ஆபத்தா? மாற்று வழிகள் என்ன?
Do you know where the last railway station in India is?

பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் ஜோக்பானி என்று அழைக்கப்படுகிறது. இது நாட்டின் கடைசி ரயில் நிலையமாக பார்க்கப்படுகிறது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், இந்திய மக்களுக்கு நேபாளம் செல்ல விசா, பாஸ்போர்ட் கூட தேவையில்லை. இது மட்டுமின்றி, இந்த நிலையத்திலிருந்து உங்கள் விமானச் செலவையும் மிச்சப்படுத்தலாம்.

பீகார் தவிர, மற்றொரு நாட்டின் எல்லை தொடங்கும் மற்றொரு ரயில் நிலையம் உள்ளது. மேற்கு வங்கத்தின் சிங்காபாத் ரயில் நிலையமும் நாட்டின் கடைசி நிலையமாகக் கருதப்படுகிறது. மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் ஹபீப்பூர் பகுதியில் கட்டப்பட்ட சிங்காபாத் ரயில் நிலையம் இந்தியாவின் கடைசி ரயில் நிலையமாகும். ஒரு காலத்தில் இந்த ரயில் நிலையம் கொல்கத்தாவிற்கும் டாக்காவிற்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தியிருந்தது.

எனவே, இந்த ரயில் நிலையத்தில் இருந்து பல பயணிகள் ரயிலில் சென்று வந்தனர், ஆனால், இன்று இந்த ரயில் நிலையம் முற்றிலும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. பயணிகளுக்காக இங்கு எந்த ரயிலும் நிறுத்தப்படுவதில்லை. இதனால் இந்த இடம் முற்றிலும் வெறிச்சோடிக் கிடக்கிறது. இந்த ரயில் நிலையம் தற்போது சரக்கு ரயில்களின் போக்குவரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சத்தான காலை உணவினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
Do you know where the last railway station in India is?

சிங்காபாத் ரயில் நிலையம் இன்னும் ஆங்கிலேயர் காலத்திலேயே இருந்து வருகிறது. இங்கே இன்றும் நீங்கள் அட்டைப் பயணச் சீட்டுகளைக் காணலாம். இதுபோல் எந்த ரயில்வேயிலும் பார்க்க முடியாது. இது தவிர, சிக்னல்கள், தகவல் தொடர்பு, தொலைபேசி மற்றும் டிக்கெட் தொடர்பான அனைத்து உபகரணங்களும் ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்தவை.

அதேபோல், தென்னிந்தியாவின் கடைசி ரயில் நிலையம் கன்னியாகுமரி ரயில் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com