மறுபிறவி நம்பிக்கை: எகிப்தியர்கள் உடலைப் பாதுகாத்தது ஏன்?

egyptian-mummies
egyptian-mummies
Updated on

கிப்தில் உள்ள மம்மிகள் பண்டைய எகிப்தியர்களின் மரணத்திற்கு பிந்திய வாழ்க்கையை நம்பி உடல்களை பதப்படுத்தி பாதுகாத்து வந்த வரலாற்றுச் சான்றுகளாகும். கி மு 2600 முதல் மம்மி என்ற வார்த்தை தார் அல்லது பிட்டுமின் போன்ற இயற்கை பொருட்களை குறிக்கும் மம்மியா என்ற சொல்லிலிருந்து வந்தது.

மம்மிபிகேஷன் முறையில் உடலின் ஈரப்பதம் நீக்கப்பட்டு, வாசனை திரவியங்கள் மற்றும் பிசின்களை கொண்டு சிதையாமல் பாதுகாக்கப்பட்டு சாக்கோ பாக்ஸ் எனப்படும் சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டது. பண்டைய எகிப்தியர்கள் மரணத்துக்கு பின் ஆன்மா மீண்டும் உடலை அடையும் என்ற அசாத்திய நம்பிக்கையில் வாழ்ந்து வந்தார்கள்.

இந்த நம்பிக்கையின் காரணமாக உடலை பாதுகாக்க மம்மிஃபிகேஷன் என்ற முறையை உருவாக்கினார்கள்.

முதலில் மணல் மற்றும் வறண்ட காற்றில் உடல்கள் இயற்கையாக பாதுகாக்கப்பட்டது. பின்னர் உள் உறுப்புகளை அகற்றி நாட்ரான் எனப்படும் உப்பை கொண்டு உடலின் ஈரப்பதம் நீக்கப்பட்டு பல ஆயிரம் ஆண்டுகள் அழியாத வகையில் இறந்த உடல்கள் பதப்படுத்தப்பட்டன. கிமு 2600 முதல் மம்மிகள் தயார் செய்யப்பட்டன. பாரோக்கல் எனப்படும் மன்னர்கள் மற்றும் பணக்காரர்களாக இருந்தவர்களுக்கு மதிப்புமிக்க பொருட்கள் நகைகள் இவற்றுடன் சேர்த்து அடக்கம் செய்யும் வழிபாடு இருந்தது.

சமீபத்திய ஆய்வுகளின்படி 5000 ஆண்டுகளுக்கு முந்திய மம்மிகள் நறுமணம் மாறாமல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
காதலில் முழங்காலிட்டு ப்ரபோஸ் செய்யும் முறை: வரலாற்று பின்னணியும் லீப் ஆண்டு ரகசியங்களும்!
egyptian-mummies

2500 ஆண்டுகளுக்கு பழமையான 50க்கும் மேற்பட்ட மம்மிகள் சவப்பெட்டிகளுடன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உடலை சிடி ஸ்கேன் மற்றும் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள் வாழ்ந்த காலம் வயது பாலினம் இவற்றை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

பண்டைய எகிப்தியர்கள் தங்கள் செல்லமாக வளர்த்த பூனை நாய் போன்ற விலங்குகளையும் இதே முறையில் பதப்படுத்தி அடக்கம் செய்து வந்தனர். 1940 இல் சிலி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மி மிகவும் பழமையானது எனக் கூறப்படுகிறது. அவை 9400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித உடல் என கூறப்படுகிறது.

இதுவரை அந்த உடலில் இருந்து எந்தவிதமான துர்நாற்றமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலைவனத்தின் மண் இறந்த உடலின் நீரை ஆவியாக்கி அவற்றை மம்மியாக்கி விடுமாம். பண்டைய காலத்தில் மன்னர்கள் மற்றும் பணக்காரர்களை உடலை பதப்படுத்தி மம்மியாக்கி அவர்களை பிரமிடில் உள்ளே வைத்து வாசலை பூசி விடுவார்கள். அந்தப் பிரமிடு களுக்கு அருகில் இறந்தவர்களின் நினைவுக்காக ஒரு சிறிய கோவிலை எழுப்பினார்கள். இறந்தவர்களின் உடலை தொடுவதற்கு பூசாரிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

மன்னர்கள் போன்ற முக்கிய நபர்கள் இறந்தால் அவர்கள் விரும்பியபடி பிரமிடுகளில் அடக்கம் செய்யப்பட்டது.

அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் நகைகள் இவற்றையும் மம்மி உடன் சேர்த்து அடக்கம் செய்துவிடுவார்கள். எகிப்தியர்கள் பூனைகளை தெய்வமாக வணங்கினார்கள். அந்தப் பூனை இறந்தாலும் மனிதர்களுக்கு செய்யும் சடங்குகள் போல் அந்த பூனைக்கும் செய்யப்பட்டு மம்மியாக்கி அடக்கம் செய்யப்படும். அந்தப் பூனை அடக்கம் செய்த பின்னர் ஆண்கள் தங்கள் புருவங்களை மழித்துக் கொள்வார்கள்.

சாதாரண மக்கள் இறந்தால் அவர்களை மம்மியாக்கி புதைத்து விடுவது வழக்கம். மன்னர்கள் மற்றும் பணக்காரர்கள் உடலை மட்டும் பதப்படுத்தி சவப்பெட்டியில் வைத்து பிரமிடு உள்ளே வைத்து வாசலை பூசி விடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
ஒடிசாவின் கலைப் பொக்கிஷம்: பிப்லி கிராமத்தின் வண்ணமயமான கைவேலைப்பாடுகள்!
egyptian-mummies

இறந்த உடலை சுற்றி பிசின் தடவிய லினன் அல்லது காட்டன் துணியால் பலமுறை இறுக்கமாக சுற்றுவார்கள் கை கால்களை இதேபோன்று தனித்தனியாக பலமுறை சுற்றுவார்கள். பின்னர் அந்த உடலை அவரவர் வசதிக்கேற்ப புதைக்கவோ அல்லது பிரமிடில் அடக்கம் செய்யவும் ஏற்பாடுகள் நடைபெறும். இவ்வாறு செய்யும் போது உடல்கள் அனைத்தும் உலர்ந்த நிலையில் காணப்படும். பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் எந்தவித துர்நாற்றமும் வராது. மம்மியின் தலைப்பகுதியை கவசம் போன்று செய்து அதனை தனியாக துணி கொண்டு சுற்றுவது வழக்கம்.

ஆதி காலத்தில் வாழ்ந்த எகிப்தியர்கள் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி பல ஆயிரம் ஆண்டுகள் வரை கெடாமல் பாதுகாத்து வந்தனர். இன்றும் இது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com