அபுதாபியில் Light and Peace என்ற மியூசியம் கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டது. சுற்றுலா வாசிகளுக்கு ஒரு சூப்பரான செய்தி வெளியாகியுள்ளது.
அபுதாபியில் இந்த Light and Peace மியூசியத்தை ஜனாதிபதி நீதிமன்றத்தின் துணை தலைவர், துணைப் பிரதமர் மற்றும் தலைவர் ஷேக் மன்சூர் பின், சயீத் அல் நஹ்யான் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை திறக்கப்பட்ட இந்த மியூசியத்திற்கு தற்போது ஏராளமான பொதுமக்கள் வருகைத் தருகின்றனர்.
ஷேக் சையத் கிராண்ட் மசூதி மையத்தில் இருக்கும் dome of peace ல் அமைந்துள்ள இந்த மியூசியம் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கான அனுமதி கட்டணத்தை நிர்ணயிக்கப்படும் வரை இலவச அனுமதி என்று அறிவிக்கப்பட்டது ஒட்டுமொத்த சுற்றுலா வாசிகளை குஷிப் படுத்தியுள்ளது.
இந்த Light and Peace மியூசியம் அறிவியல், கலை, இலக்கியம் மற்றும் இஸ்லாமிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மியூசியத்தில் உள்ள சிறப்பம்சங்கள்:
ஐக்கிய அரபு அமீரக ஸ்தாபன தந்தை மறைந்த ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் தனிபட்ட பொருட்கள் மற்றும் மரம், உலோகம், பளிங்கு, கலைபொருட்கள் ஆகியவை உள்ளன. அக்பர் மெக்கா, மக்காவின் வரலாறு மற்றும் பாரம்பரியம் பற்றிய 14ம் நூற்றாண்டு புத்தகம், முதல் இஸ்லாமிய தங்க நாணயம், நீல குர்ஆன் கையெழுத்து பிரதியிலிருந்து தங்கத்தால் ஒளிரும் குர்ஆன் பக்கங்கள் போன்ற பல்வேறு பொருட்கள், புத்தகங்கள் ஆகியவை அங்கு உள்ளன.
அருங்காட்சியத்தின் பெயர் உட்பட அங்குள்ள எழுத்துக்கள் மொத்தம் 7 மொழிகளில் காண்பிக்கப்படுகின்றன. அரபு, ஆங்கிலம், சீனம், ஸ்பானிஷ், பிரஞ்சு, ரஷ்யன் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உள்ளன. எந்த மொழி நமக்கு வேண்டுமோ அதனை டிஜிட்டல் திரைகள் மூலம் செயல்படுத்தலாம்.
இதனால், இந்த மியூசியம் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா வாசிகளை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.