புகழ் பெற்ற 5 கோயில்களின் பிரபலமான பிரசாதங்கள்!

Popular Prasathangal
Popular Prasathangal
Published on

கோயில் பிரசாதங்கள் என்றாலே தனிச் சிறப்புதான். ஒவ்வொரு கோயில் பிரசாதங்களிலும் ஒவ்வொரு தனிச்சுவை மற்றும் சிறப்பு இருக்கும். சில பிரபலமான கோயில்களில் சிறப்புமிக்க பிரசாதங்கள் தரப்படுவதும் உண்டு. அவற்றில் 5 கோயில்களின் பிரசாதம் பற்றி பார்ப்போம்.

1. பூரி ஜெகந்நாதர் கோயிலை, ‘அன்ன க்ஷேத்திரம்’ என்று சொல்வார்கள். நாட்டின் மிகப்பெரிய அன்னதானக் கூடம் அங்குதான் உள்ளது. எந்நேரம் போனாலும் அங்கு சாப்பாடு உண்டு என்பது உண்மை என்று புரியும். அந்தக் கோயிலில் வழங்கும் காஜா இனிப்பின் தித்திப்பு நாக்கை விட்டு போகவே நான்கு நாட்கள் ஆகும்.

2. கடலை மாவு, நெய், சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி பருப்பு எல்லாம் போட்டு நம்ம ஊர் லாலா ஸ்வீட் கடைகளில் செய்தால்கூட அப்படி ஒரு தனித்துவ சுவை வராது. லட்டு என்றாலே அது திருப்பதி லட்டுதான். அதன் சுவையும் மணமும் அந்த குபேரனையே கடனாளி ஆக்கிவிடும்.

3. வெண்ணெய் திருடித் தின்ற கிருஷ்ணன் கதைகளை நாம் கேட்டிருப்போம். அதையே பிரசாதமாகக் கொடுப்பதை பார்த்திருக்கிறீர்களா? பிருந்தாவனத்தில், துவாரகையிலும் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் காலை பூஜையின்போது கடைந்து எடுத்த வெண்ணையை பிரசாதமாக தருவார்கள்.

இதையும் படியுங்கள்:
காலாவதியான உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்!
Popular Prasathangal

4. எப்போதாவது ஜம்மு போக நேர்ந்தால் அங்குள்ள வைஷ்ணவி தேவி கோயில் போக மறக்காதீர்கள். அங்கே முர்முரா (சாத உருண்டை), இலைச்சிடானா அல்லது சர்க்கரை உருண்டைகள், சில உலர்ந்த பழங்கள் மற்றும் வெயிலில் உலர்த்திய ஆப்பிள்களைப் பிரசாதமாகப் பெறுவீர்கள். உலர்ந்த ஆப்பிள்கள் மாதா வைஷ்ணோ தேவியின் தனித்துவமான பிரசாதமாகும்.

5. காசியில் உள்ள புகழ்பெற்ற ஹனுமன் கோயில் கோஸ்வாமி கவிஞர் துளசிதாஸ் ஜி என்பவரால் கட்டப்பட்டது. இங்கே அவர் ஹனுமனை பார்த்ததாகக் கதைகள் உண்டு. இங்கே இரண்டு வகையான லட்டுகள் வழங்கப்படுகின்றன. ஒன்று கடலை மாவில் செய்த லட்டு, மற்றொன்று பாலை சுண்ட வைத்து செய்யப்படும் லால் பேடா. நாவில் பட்டதும் கரைந்ததோ என்று நினைக்க வைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com