

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ளது இந்த கோட்டை. சென்னையில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாண்டிச்சேரி அருகில் உள்ளது செஞ்சி. மராட்டிய சிவாஜி இந்த கோட்டையை யாரும் எளிதில் புக முடியாது என்று வர்ணித்து இருக்கிறார். பிரிட்டிஷ்காரர்கள் இந்த கோட்டையை கிழக்கின் டிராய் என அழைத்தனர். சோழர்கள் காலத்தில் இந்த பகுதி சிங்கபுர நாடு என அழைக்கப்பட்டது.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டையானது கருங்கல்பாறை மற்றும் சுண்ணாம்பு கலவை மூலம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 1921 இல் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இயற்கையாக அமைந்த மூன்று பெரிய மலைகள் மற்றும் சிறிய குன்றுகள் என 12 கிலோமீட்டர் நீளத்தில் மதில்சுவர்கள் மூலம் முக்கோணவடிவில் இணைக்கப்பட்டுள்ளது
சோழர் காலத்தில் சிங்கபுரி என அழைக்கப்பட்டது. இந்த கோட்டை பல போர்களை சந்தித்தாலும் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. முன்னர் சிங்கபுரி கோட்டம் என்பது தற்போது மருவிசெஞ்சிக்கோட்டை ஆனது. இதை தேசிங்கு ராஜா கோட்டை என திராவிடர்கள் அழைத்து வந்தனர். இந்த கோட்டை தமிழர்களால் கட்டப்பட்டது என்ற வரலாறும் உள்ளது.
தமிழ் மன்னர் ஆனந்த கோனார் பரம்பரை 300 வருடமாக செஞ்சிக்கோட்டையை ஆண்டு வந்தனர். இவரது மகன் கிருஷ்ண கோனார் கிருஷ்ணகிரி கோட்டையை கட்டி விரிவுபடுத்தினார். இந்தியாவில் உள்ள சிறந்த கோட்டைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. பலர் போராடியும் இந்த கோட்டையை யாராலும் கைப்பற்ற முடியவில்லை. இந்த கோட்டையில் கோவில்கள் மண்டபங்கள் குளங்கள் சுனைகள் படை வீரர்கள் தங்குமிடம் நெற்களஞ்சியம் ஆழமான அகழிகள் கொண்டது.
இந்தக் கோட்டையில் 80 அடி அகலம் உள்ள அகழி மூலம் பாதுகாக்கப்பட்டது. இங்கு எட்டு மாடிகளை கொண்ட கல்யாண மஹால் தானிய களஞ்சியம் சிறைச்சாலை பயிற்சி கூடம் கோவில்கள் முதலியன உள்ளே அமைந்துள்ளது. ஆனைகுளம் என்ற புனிதக்குளமும் உள்ளே அமையப்பெற்றுள்ளது. 20 மீட்டர் அகலம் கொண்ட சுவர்களால் மூடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. 1921 இல் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது
தற்போது தொல்லியல் துறை பாதுகாப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோட்டையை 2024 யுனெஸ்கோ பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவித்தது. மராட்டியர்கள் கட்டிய 12 கோட்டைகளில் 11 கோட்டை மகாராஷ்டிராவில் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டை பன்னிரண்டாவது கோட்டையாக உள்ளது.
ராஜா தேசிங்கு பதினெட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தார். ராஜா தேசிங்கு 8000 படை வீரர்களுடன் 350 குதிரை வீரர்கள் மற்றும் தனது நீலவேணி குதிரை மூலம் போர் புரிந்து வந்தார். தனது 22 வது வயதில் வீர மரணம் அடைந்தார். நவாபின் பெரும்படைகளை போரிட்டு அழித்தார். கோட்டை 800 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
700 ஆண்டுகள் பழமையான கோட்டை ஆகும். இங்கு ராஜகிரி நுழைவு வாயில் சிப்பாய்கள் தங்கும் அறை, வெடி மருந்து கிடங்கு, உடற்பயிற்சி கூடம், தானிய களஞ்சியம், வேணுகோபால சுவாமி கோவில் ஆகியவை உள்ளது.
இந்தக் கோட்டையில் தேசிங்கு ராஜா உடல் எரியூட்டப்பட்டபோது அவரது மனைவியும் அந்த சிதையில் உடன்கட்டை ஏறினார்.
இன்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இந்த இடத்திற்கு வந்து சுற்றி பார்த்துவிட்டு செல்கின்றனர். இதனை சுற்றி பார்ப்பதற்கு நான்கு மணி நேரம் ஆகும்.